தெலுக் இந்தான் மருத்துவமனை

தெலுக் இந்தான் மருத்துவமனை (மலாய்:Hospital Teluk Intan; ஆங்கிலம்:Teluk Intan Hospital) (HT) என்பது மலேசியா, பேராக், தெலுக் இந்தான் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும். மலேசியாவில் மிகப் பழைமையான மருத்துவமனைகளில் ஒன்றான இந்த மருத்துவமனையில் 548 படுக்கைகள் உள்ளன.

தெலுக் இந்தான் மருத்துவமனை
Teluk Intan Hospital
Hospital Besar Teluk Intan
Flag of Malaysia மலேசிய அரசு
அமைவிடம் சங்காட் ஜோங் சாலை, தெலுக் இந்தான், பேராக், மலேசியா
ஆள்கூறுகள் 4°00′11″N 101°02′20″E / 4.00306°N 101.03889°E / 4.00306; 101.03889
மருத்துவப்பணி பொது மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு
வகை முழு சேவை மருத்துவமனை மற்றும் & மருத்துவக் கல்லூரி
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 548
நிறுவல் 1923[1]
வலைத்தளம் [jknperak.moh.gov.my/htintan
தெலுக் இந்தான் மருத்துவமனை
Teluk Intan Hospital
Hospital Besar Teluk Intan]
பட்டியல்கள்

வரலாறு

தொகு

பழைய மருத்துவமனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தெலுக் இந்தான் நகரத்தின் தேவைகளை நிறைவு செய்யவில்லை. அதனால் உடனடியாக ஒரு புதிய மருத்துவமனை கட்ட முன்மொழியப்பட்டது. பழைய மருத்துவமனை 95 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

தெலுக் இந்தான் பழைய மருத்துவமனைக்குப் பதிலாக புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. இந்தப் புதிய மருத்துவமனை, சங்காட ஜோங் சாலையில், தெலுக் இந்தான் நகர மையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கட்டுமானச் செலவு

தொகு

புதிய மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 1984-இல் தொடங்கின. பின்னர் 1987 மார்ச் மாதம் 28-ஆம் திகதி மலேசிய சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய மருத்துவமனை 65 ஏக்கர் (260,000 ச.மீ.) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதற்கு முன், அந்தப் பகுதி ஒரு ரப்பர் தோட்டமாக இருந்தது.

புதிய மருத்துவமனையின் கட்டுமானச் செலவு RM 110 மீலியன் ஆகும்.

மேலும் காண்க

தொகு

* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Hospital Teluk Intan". Mapcarta (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 June 2024.

வெளி இணைப்புகள்

தொகு