தெல்லகுல ஜாலய்யா
இந்திய அரசியல்வாதி
தெல்லகுல ஜலய்யா (Tellakula Jalayya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குண்டூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை இவர் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] மேலும் குண்டூர் மாநகராட்சியின் முதல் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.[2] தெல்லகுல ஜாலய்யா மற்றும் நடிம்பல்லி நரசிம்ம ராவ் ஆகியோர் தமது நகராட்சி கழக தலைமைப் பொறுப்பில் இருந்த போது அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக சின்னா கோபுரத்தை கட்டினார்கள். இக்கோபுரம் இன்றும் குண்டூர் நகரத்தின் ஓர் அடையாளமாக இருந்து வருகிறது.[3] 1971 ஆம் ஆண்டு போலிசெட்டி சோமசுந்தரத்தின் மகன்களுடன் தெல்லகுல ஜாலய்யா இணைந்து தெல்லகுல ஜாலய்யா போலிசெட்டி சோமசுந்தரம் கல்லூரியை நிறுவினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தல், 1955". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "தெல்லகுல ஜாலய்யா போலிசெட்டி சோமசுந்தரம் கல்லூரி". tjpscollege.ac.in.
- ↑ பணியாளர் நிருபர் (19 மார்ச் 2011). "புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஜின்னா கோபுரம்". இந்து பத்திரிக்கை. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/jinnah-tower-in-a-state-of-neglect/article1552693.ece.