தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கு

தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கு, இந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். சித்ரா ராமகிருஷ்ணா பதவிக் காலத்தில் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி ) குற்றம் சாட்டியதுடன், முன் அனுபவம் இல்லாத சென்னையைச் ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்தது, அவருக்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக பல்வேறு சலுகைகள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேசியப் பங்குச் சந்தையின் தரவுகள் வெளியே கசிய விட்டதாகவும், இதனால் கோடிக்கணக்கான ரூபாய் ஆதாயம் அடைந்ததாக சித்ரா ராமகிருஷ்ணனின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.[1] முன்பின் பார்த்திராத ஒரு இமயமலை யோகியின் ஆலோசனையின் பேரில் தான் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு பதவி, பதவி உயர்வு மற்றும் ஊதியச் சலுகைகள் வழங்கியதாக விசாரணையில் தெரிவித்தார்.

மேலும் தேசியப் பகுச் சந்தையின் தரவு தளத்தை, சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்ரமணியனும் இணைந்து, வெளியே கசிய விட்டதால் ஐந்தாண்டுகளில் 500 பில்லியன் ரூபாய் தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக தடயவியல் தணிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.[2]

இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்த நடுவண் புலனாய்வுச் செயலகம் சித்ரா ராமகிருஷ்ணனின் மும்பை வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் 17 பிப்ரவரி 2022 அன்று சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து 6 மார்ச் 2022 அன்று சித்ரா ராமகிருஷ்ணா தில்லியில் கைது செய்யப்பட்டார்.[3] மேலும் சென்னையில் உள்ள ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் 25 பிப்ரவரி 2022 அன்று சோதனை நடத்தி, 25 பிப்ரவரி 2022 அன்று கைது செய்தனர்.[4]இதனைத் தொடர்ந்து ஆனந்த் சுப்பிரமணியன் வீட்டைச் சோதனை செய்த காவல்துறையினர், ஆனந்த சுப்பிரமணியனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.[5]

இந்நிலையில் பிப்ரவரி 2022 மாதத்தில், சித்ரா ராமகிருஷ்ணன், சென்னையில் முக்கிய இடத்தில் உள்ள தனது 3.2 கோடி மதிப்புள்ள வீட்டை, ஆனந்த் சுப்ரமணியத்தின் மனைவி சுனிதா ஆனந்த்திற்கு விற்றது வெளியாகியுள்ளது.[6]

பின்னணி

தொகு

எர்னஸ்ட் & யங் (Ernst & Young) என்ற நிறுவனம் நடத்திய தடவியவியல் தணிக்கையால், தேசியப் பங்குச் சந்தையில் நடந்த முறைகேடுகள் 2015ஆம் ஆண்டு வெளிவந்தது[7] முறைகேட்டை அறிந்தும் எந்த விசாரணையும் இல்லாமல் சித்ரா ராமகிருஷ்ணாவை பதவி விலக தேசிய பங்கு சந்தை இயக்குநர் குழு அனுமதித்தது என செபி கூறியது. எர்னசட் & யங் தடவியல் சோதனை மூலம் ஆனந்த் சுப்பரமணியன் தான் இமயமலை யோகி என்று கூறியுள்ளது. தேசிய பங்கு சந்தையும் 2018-ஆம் ஆண்டு ஆனந்த் சுப்பரமணியன் தான் இமயமலை யோகி என்று கூறியுள்ளது.[8][9] சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செபி, இனி வரும் 3 ஆண்டுகளுக்கு பங்கு சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது எனவும், செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் இடைத்தரகராக பணிபுரிய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. [10] தேசிய பங்குச்சந்தை இயக்குநர்கள் குழு இவரின் செயலில் தவறை\முறைகேட்டை அறிந்திருந்த போதிலும் இவர் செயலை பெரிதும் பாராட்டி பதவி விலக அனுமதித்துள்ளது [11]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு