தேசிய அஞ்சல் தலை அருங்காட்சியகம், புதுதில்லி

இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது.

தேசிய அஞ்சல் தலை அருங்காட்சியகம் (National Philatelic Museum) இந்தியாவின் தலை நகரமான புது தில்லியில் அமைந்துள்ளது. இந்திய அஞ்சல் துறையால் அருங்காட்சியகம் இயக்கப்படுகிறது. ஒரு கட்டடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் 2011 ஆம் ஆண்டில் மறுவடிவமைப்புக்கு உட்பட்டது. இப்போது விளக்கக்காட்சிகள் மற்றும் விவாதங்களுக்காக ஓர் அரைவட்ட அரங்கம், ஒரு நூலகம் மற்றும் கலைஞர்கள் வேலை செய்யும் இடத்தைப் பார்க்கக்கூடிய பகுதி ஆகியவை உள்ளன. இவற்றுடன் தபால்தலைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. அருங்காட்சியகத்தில் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தின் அஞ்சல் தலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்காட்சிப்பொருள்கள் எந்தப் பார்வையாளரையும் அதன் வசீகரத்தால் ஈர்க்கும் வகையில் பல சட்டகங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சல் தாள்களுக்கான பிரிவு, வெவ்வேறு கருப்பொருள்களுக்கான பிரிவு, வெவ்வேறு நாடுகளின் முத்திரைகளுக்கான பிரிவு என வெவ்வேறு பிரிவுகளில் இச்சட்டகங்கள் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

2017 ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள தேசிய அஞ்சல் தலை அருங்காட்சியகம்

அருங்காட்சியகம் பல்வேறு பள்ளிகளின் மாணவர்களுடன் தொடர்ந்து அஞ்சல்தலை சேகரிப்புப் பட்டறைகளை ஏற்பாடு செய்கிறது. நிகழ்ச்சியில் வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான அஞ்சல்தலைகள் சொல்லும் பலவேறு கதைகளை மாணவர்கள் கண்டுபிடிக்கின்றனர். கல்வியை வேடிக்கையாக இந்த அஞ்சல்தலைகள் மாணவர்களுக்கு அளிக்கின்றன. அஞ்சல்தலைகள், ஆண்டு சிறப்பு அஞ்சல் வில்லைகள், அஞ்சல்தலை படத் தொகுப்புகள், பட அஞ்சல் அட்டைகள், தேசிய அஞ்சல்தலை அருங்காட்சியகத்தின் புகைப்பட இரத்து மற்றும் பரிசுப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான அஞ்சல் பொருட்கள் வழங்கும் நினைவு பரிசு கடையும் அருங்காட்சியகத்தில் உள்ளது.

வரலாறு

தொகு

தேசிய அஞ்சல்தலை அருங்காட்சியகத்தை தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் ஆனந்த் பர்தான் வடிவமைத்தார். இவர் இந்திய அருங்காட்சியக சங்கத்தின் செயலாளரும் ஆவார். [1]

புது தில்லி, கன்னாட் பிளேசு அருகே சன்சாத் மார்க்கில் (பாராளுமன்றத் தெரு) அருங்காட்சியகம் அமைந்துள்ளது. எந்தக் கட்டணமும் இன்றி பார்வையாளர்களுக்காக வாரத்தில் அனைத்து நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை திறந்திருக்கும். அருங்காட்சியகம் தில்லியில் இயக்கப்படும் முக்கிய பேருந்துகளின் பட்டியலிலும் முக்கிய நிறுத்தங்களில் ஒன்றாக உள்ளது. [2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Faculty at DIHRM". New Delhi: Delhi Institute of Heritage Research and Management. Archived from the original on 10 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "National Philatelic Museum". Delhi Tourism. Archived from the original on 2016-12-30. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.