தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என்னும் நிறுவனம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. இது சித்த மருத்துவத்திற்கான அரசு நிறுவனம். இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.[1] சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது.[2]
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 3 செப்டம்பர் 2005 |
நிருவாகப் பணியாளர் | 17 |
அமைவிடம் | , , 12°56′21″N 80°07′42″E / 12.939114°N 80.128213°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், ஆயுஷ் துறை, உடல்நலம் மற்றும் குடும்பநலத் துறை, இந்திய அரசு |
இணையதளம் | www.nischennai.org |
சான்றுகள்
தொகு- ↑ De, Barun Kumar (2006). Public System Management. New Delhi: New Age International Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-1767-1. பார்க்கப்பட்ட நாள் 4 Sep 2012.
- ↑ Kunnathoor, Peethaambaran (24 January 2013). "Newly created Central Council of Research in Siddha starts operations in Chennai". Pharmabiz.com (Chennai: Pharmabiz.com). http://www.pharmabiz.com/NewsDetails.aspx?aid=73344&sid=1. பார்த்த நாள்: 24 Jan 2013.