தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்

தேசிய நூலக வாரியம் (National Library Board அஃகுப்பெயர்: NLB; எளிய சீனம்: 国家图书馆管理局பின்யின்: Guójiā Túshūguǎn Guǎnlǐjú; மலாய்: Lembaga Perpustakaan Negara) சிங்கப்பூர் அரசாங்கத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தின் சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும். இது சிங்கப்பூரின் பொது நூலகங்களை நிர்வகிக்கவும், தகவல் காலங்களை நோக்கி வழிநடத்தவும் செய்கிறது. தேசிய நூலக வாரியத்தின் நோக்கமானது எல்லைகளில்லாத நூலகங்களை உருவாக்குதல் ஆகும், இதன் மூலம் சிங்கப்பூரியர்களுக்கு மத்தியில் நூலக அணுக்கத்தினை ஏற்படுத்துவதும் மற்றும் உலகம் முழுவதுமுள்ள சிங்கப்பூரியர்களை இணைப்பதுமாகும்.

தேசிய நூலக வாரியம்
துறை மேலோட்டம்
அமைப்பு1 செப்டம்பர் 1995 (1995-09-01)
முன்னிருந்த அமைப்பு
  • தேசிய நூலகம்
ஆட்சி எல்லைசிங்கப்பூர் அரசாங்கம்
ஆண்டு நிதி$182 million SGD (2010)
அமைப்பு தலைமைகள்
  • யோ சி யான், தலைவர்
  • எலைன் என்ஜி, தலைமை நிர்வாகி
மூல அமைப்புதகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம், சிங்கப்பூர்
வலைத்தளம்www.nlb.gov.sg
தேசிய நூலக வாரியத்தின் தலைமையகம் தேசிய நூலக கட்டிடம், சிங்கப்பூர்
பிசான் சமூக நூலகம்
ஜீராங் பிராந்திய நூலகம்

சிங்கப்பூரின் தேசிய நூலகங்கள் நான்கு ஆட்சி மொழிகளிலும்(சீனம், ஆங்கிலம், மலாய் மற்றும் தமிழ்) புத்தகங்களை கொண்டிருக்கிறது. நூலகங்கள் காகிதப் புத்தகங்கள் தவிர, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள், சிடி-ரோம் டிவிடி, வீடியோக்கள், இசை குறுந்தகடுகள், வீடியோ கேசட்டுகள், ஆடியோபுக்ஸ் போன்றவற்றை பதிவுசெய்த நபர்களுக்கு இரவல் வழங்குகிறது. 22 ஜுலை 2005 முதல் இதன் தலைமையகம் விக்டோரியா தெருவிலுள்ள புதிய அலுவலகத்திற்கு மாறியது.

வரலாறு

தொகு

தே.நூ.வாரியமானது 1 செப்டம்பர் 1995 அன்று உருவாக்கப்பட்டபொழுதும், இதன் வரலாறு 1820லிருந்தே ஆரம்பிக்கிறது, பிரித்தானிய காலணி காலத்தில், நவீன சிங்கப்பூரை நிறுவிய சர்.ஸ்டாம்போர்டு ரபிள்ஸினால் முதன்முதலாக சிங்கப்பூரில் ஒரு பொது நூலகம் ஸ்தாபிக்கும் யோசனை முன்மொழியப்பட்டது. 1960ல் சிங்கப்பூர் தேசிய நூலகம் உருவாக்கப்பட்டது. பிற்பாடு கிளை நூலகங்கள் புறநகர்ப் பகுதிகளில் உருவாக்கப்பட்டது.

1992 ஜீனில் சிங்கப்பூரின் பொது நூலகங்களை ஆய்வு செய்ய டாக்டர்.டான் சின் நாம் தலைமையில் நூலகம் 2000 ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகளை அமல்படுத்தும் வண்ணம் 1995ல் தே.நூ.வாரியம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் பணியை எடுத்துக்கொண்டது. இந்தக் குழு அடுத்து வரும் பத்தாண்டுகளுக்கேற்ப சமகால நூலக சேவைகளில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்குகளை பின்வரும் நோக்கங்களுக்களுடன் கருத்தில் கொண்டது.

  1. சிங்கப்பூரை சர்வதேச தகவல் மையமாக நிறுவதல்;
  2. சிங்கப்பூர் இலக்கிய பராம்பரியத்தினை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்;
  3. கல்வி, அறிவு மற்றும் ஆராய்ச்சி வசதியை வழங்குதல்;
  4. நன்கு படித்த மற்றும் நன்கு தகவலறிந்த சமூகத்தினை ஊக்குவித்தல்.

பொதுவாக இந்தக் குழு பொது நூலகப் பயனர்களின் நூலகத் தேவைகள், அதிகரித்து வரும் பன்மொழிப் புலமை மக்கள்தொகையின் மொழியியல் தேவைகள், தொழில் தேவைகளை பூர்த்தி செய்யும் விரிவான தரவு தளங்கள் மற்றும் தேசிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உட்கருவாக கொண்ட நூலகத்தை நிறுவதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டது. 1994 மார்ச் 5 ம் தேதி அன்று, ஒரு வருட ஆய்வுக்கு பின்பு இக்குழு தங்கள் முடிவுகளை ஆறு "உத்திப்பூர்வ ஊடுருவலாக" வெளியிட்டது, அவை:

  1. ஒரு மாற்றியமைக்கத்தக்க பொது நூலகத் திட்டம்
  2. எல்லைகளற்ற நூலக கட்டமைப்பு
  3. ஒருங்கிணைந்த தேசிய சேகரிப்பு வியூகம்
  4. சந்தை சார்ந்த தரமான சேவை
  5. சமூகம் மற்றும் வணிகத்துடன் இணைந்த இயல்பு
  6. உலகளாவிய அறிவுச் சொத்து

இந்த அறிக்கை மேற்கூறிய மாற்றங்களை செயற்படுத்த கூடுதலாக மூன்று முக்கியமானவற்றை கூறியது, அவை

  1. புதிய சட்டப்பூர்வமான குழுவை அமைத்தல்,
  2. ஊழியர்களின் மேம்பாடு,
  3. மற்றும் புதிய தொழில்நுட்பத்தினை முழுவதுமாக பயன்படுத்தல்.

இந்த அறிக்கையின் விளைவாக தே.நூ. வாரியம் அமைக்கப்பட்டது. தே.நூ. வாரியம் இந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவதின் மூலம் சிங்கப்பூரை உலக அறிவுப் பொருளாதாரத்தில் போட்டியிடத்தக்கதாக மாற்றுகிறது, மேலும் அதிக கருணையுள்ள சமூகமாக்குறது.[1]

உறுப்பினர் சந்தா

தொகு
  • சிங்கப்பூர் குடிமகன்கள் மற்றும் நிரந்தர குடிவாசிகளுக்கு நூலகத்தில் சேரும்பொழுது $10.50 பதிவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, இது திருப்பித்தரப்பட மாட்டாது. வெளிநாட்டவர்களுக்கு பதிவுக்கட்டணத்துடன் ஆண்டு சந்தாவாக $42.80 வசூலிக்கப்படுகிறது.

இரவல்

தொகு
  • சிங்கப்பூர் குடிமகன்கள் மற்றும் நிரந்தர குடிவாசிகள் ஒரே நேரத்தில் 8 பொருட்களை (அதிகப்பட்சம் 8 புத்தகம், 3 ஒலி சாதனங்கள் (சிடி,டிவிடி)) இரவல் வாங்கலாம். புத்தகங்கள் 21 நாட்களுக்கும், பத்திரிக்கைகள் 14 நாட்களுக்கும் இரவல் கொடுக்கப்படும்.

சான்றுகள்

தொகு
  1. "National Library to spend S$1 billion over 8 years", Koh Buck Song, The Straits Times, 4 July 1996.