தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு
தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு (National Intelligence Grid) சுருக்கமாக: NATGRID), இந்தியாவில் தீவிரவாத எதிர்ப்பிற்கான அரசின் புலனாய்வு அமைப்புகள், பயங்கரவாத எதிர்ப்புப் படைகள், மத்திய மற்றும் மாநிலக் காவல் துறைகள் போன்ற 21 அமைப்புகளுடன் உளவு மற்றும் புலனாய்வு செய்திகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு சூலை 2016ல் நிறுவப்பட்டாலும், 31 டிசம்பர் 2020 முதல் செயல்பாட்டிற்கு வந்தது.[1] இதன் தற்போதைய இயக்குநர் ஆஷிஷ் குப்தா இந்தியக் காவல் பணி ஆவார்.[2]
2008 மும்பைத் தாக்குதல்களுக்குப் பின்னர் தேசிய புலனாய்வு கட்டமைப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு 11 தேசியப் புலனாய்வு அமைப்புகளுடனும், அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளின் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "NATGRID will come into operation by 2020-end: MHA in Lok Sabha".
- ↑ "Uttar Pradesh Police | OfficerProfile". www.uppolice.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.