தேசிய மாணவர் படை (சிங்கப்பூர்)

தேசிய மாணவர் படை(NCC) சிங்கப்பூரில் 1901-ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டு, இன்றளவும் செயல்படுகிறது.[1] 2010ஆண்டு கணக்குப்படி, இப்படையில் 19877 வீரர்கள் உள்ளனர். இருப்பினும் இப்படை, இந்திய தேசிய மாணவர் படை போல், இராணுவத்துடன் இணைந்து செயற்படும் விதத்தில் அமைக்கப்படவில்லை. சிங்கப்பூர் தேசிய மாணவர் படையிலும், தரைப்படை, வான்படை, கடற்படை என மூன்று பிரிவுகள் உள்ளன.

தேசிய மாணவர் படை (சிங்கப்பூர்) பயிற்சிக் களம்

செயற்பாடுகள்தொகு

 • படையின் இலக்கு: சிங்கப்பூர் நாட்டின் ஒற்றுமைக்காகவும், பொறுப்புள்ள தலைவர்களாகவும், கூட்டுப்பணியாளர்களாகவும், இராணவத்தின் செயற்கரிய செயல்களுக்கு துணையாகவும் இருக்கத் தேவையான திறன்களை, தன்னகத்தே வளர்த்தலே இதன் முக்கிய இலக்காகும்.
 • படையினர் திறன்:கொடுக்கப்பட்ட வேலை கடினமாயினும், நேரந்தவறாமல், கட்டுப்பாட்டுடன், விரைந்து செயற்படும் திறனைக் கற்றல். இதனால் படைவீரரின் மனமும், உடலும் உறுதியாகிறது. இதனால் படையினரின் சமூகப் பொறுப்பும் அதிகரிக்கிறது.
 • படைப்பிரிவுகள்:சிங்கப்பூரின் பள்ளிப்படைகள் மொத்தம் 176 உள்ளன. மொத்த 176 படைகளில், 137 அணியினர் தரைப்படையினைச் சார்ந்தவர்கள்.கடற்படையில்21அணியினரும், வான்படையில்18 அணியினரும் உள்ளனர். இந்த ஒட்டு மொத்தப்படையினரில், உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும், அனைத்து மூவகைப் படையினரும் கலந்து, மொத்தம்144படையினர் உள்ளனர்.

படைத்தலைவர்கள்தொகு

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்படை இருப்பினும், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, இப்படையின் தலைவர்கள் வருமாறு;-

 • LTC J P Durcan (சனவரி 1969 - சூன் 1970)
 • LTC Mohd Salleh (சூன் 1970 - திசம்பர் 1970)
 • MAJ Syed Hashim Aljoffrey (சனவரி 1971 - மார்ச்சு 1972)
 • MAJ Yeo Peck Chua (ஏப்ரல் 1972 - சனவரி 1980)
 • COL John Morrice (பிப்ரவரி 1980 - பிப்ரவரி 1981)
 • MAJ Yeo See Cheh (மார்ச்சு 1981 - ஏப்ரல் 1983)
 • LTC Toh Chee Keong (1 மே1983 - 31 திசம்பர் 1990)
 • LTC George Ho Yat Yuen (1 சனவரி 1991 - 16 அக்டோபர் 1994)
 • LTC Swee Boon Chai (17 அக்டோபர் 1994 - 30 சூன் 1997)
 • LTC Yeo Yoon Soon (1 சூலை 1997 - 31 மார்ச்சு 2000)
 • LTC Phua Puay Hiong (1 ஏப்ரல் 2000 - 10 சனவரி 2003)
 • LTC Lim Teong Lye (11 சனவரி 2003 - 16 திசம்பர் 2004)
 • LTC Colin Wong](17 திசம்பர் 2004 - 8 சூன் 2007)
 • LTC Stuart Khoo (8 சூன் 2007 - 3 திசம்பர் 2008)
 • LTC Adrian Koh (3 திசம்பர் 2008 - )

காட்சியகம்தொகு

எடுகோள்கள்தொகு

 1. "உருவாக்கப்பட்ட ஆண்டு". 2011-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-28 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்தொகு