தேரா
தேரா (Tera), மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அப்தசா வருவாய் வட்டட்த்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க கிராமம் ஆகும்.[1]இக்கிராமம் கட்ச் மாவட்டத்தின் தலைமையிடமான புஜ் 84 கிலோ மீட்டர் தொலைவிலும், தாலுகா தலைமையாக நல்லியாவிற்கு 13 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கிராமம் சமணர்களின் புனிதத் தலமாக உள்ளது. இது மாநில நெடுஞ்சாலை எண் 49 மீது அமைந்துள்ளது. தேரா கிராமம் இந்தியாவின் முதல் பாரம்பரிய கிராமம் ஆகும்.
தேரா | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 23°17′13″N 68°56′20″E / 23.287°N 68.939°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | கட்ச் |
தோற்றுவித்தவர் | ஹமீர் |
மொழி | |
• அலுவல் | குஜராத்தி மொழி, இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 370660 |
வாகனப் பதிவு | GJ-12 |
இணையதளம் | gujaratindia |
வரலாறு
தொகுகட்ச் இராச்சிய மன்னர் பிராக்மல்ஜி, அவரது சகோதரர் ஹமீர்ஜி தேரா கிராமம் உள்ளிட்ட 36 கிராமங்களை ஜாகீராக வழங்கினார்.[2][3] தேரா கோட்டையின் சுவர்கள் 1819ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்தன.
தற்போதைய நிலை
தொகுதேரா கிராமத்தினர் தற்போது வேளாண்மை மற்றும் கைவினைக் கலைஞர்களாக உள்ளனர். இக்கிராமம் சுற்றுலா மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக உள்ளது. ஆண்டுதோறும் 50,000 சமணர்கள் இக்கிராமத்திற்கு வருகை புரிகின்றனர். இந்திய அரசு தேரா கிராமத்தை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது.[4]
தேரா கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல வகையாக காட்டுயிர்களான மான்கள், எருதுகள், காட்டுப் பன்றிகள், கழுதைப் புலிகள், கான மயில்கள், மயில்கள், கவுதாரிகள், சிவப்பு நரிகள், ஓநாய்கள் மற்றும் கறகால் பூனைகள் காணப்படுகிறது.[5] இக்கிராமத்தில் 3 செயற்கை ஏரிகள் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Villages of Abdasa Taluka". Kutch District. Archived from the original on 7 July 2012.
- ↑ Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Printed at the Government Central Press. 1880. p. 252.
- ↑ Kutch in festival and custom. K. S. Dilipsinh. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124109984.
- ↑ Wonders of Gujarat.
- ↑ The region is home to a number of endangered species like the Great Indian Bustard, Desert Fox, Indian Wolf, Chinkara, Caracal, etc. Kutch is the only district in India where four distinct ecosystems - Desert, Coastal, Grassland and Upland - exists within a span of 100 km. பரணிடப்பட்டது 12 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்