தேவகோட்டை நகரச் சிவன் கோவில்

தேவகோட்டை நகரச் சிவன் கோயில் , சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ளது.

தேவகோட்டை நகரச் சிவன் கோயில்

நகரச் சிவன் கோவில்தொகு

செட்டிநாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் ஒரு சிவன் கோயில் எழுப்பட்டிருக்கும். அப்படி தேவகோட்டையில் வாழும் நகரத்தாரால் கட்டப்பட்ட கோயில் தேவகோட்டை நகரச் சிவன் கோவில் ஆகும்.

இறைவன்-இறைவிதொகு

இக்கோயிலில் எழுந்தருளும் இறைவன் - இறைவி பெயர் சுந்தரேசுவரர் - மீனாட்சி ஆகும்.[1]

சேக்கிழார் சன்னதிதொகு

உலகிலேயே சேக்கிழாருக்கு இரண்டு கோயில்களில் மட்டுமே தனி சன்னதி உண்டு, முதலாவது சேக்கிழார் பிறந்த ஊரான திருக்குன்றத்தூர் சிவன் கோயில், இரண்டாவது தேவகோட்டை நகரச் சிவன் கோயில்.[1]

கந்த சஷ்டி விழா கழகம்தொகு

தேவகோட்டையில் 1946ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோம.இராமநாதன் செட்டியார், கரு.காசிச் செட்டியார் , உ.மு.அ.லெ.லெட்சுமணன் செட்டியார் ஆகியோர்கள் இணைந்து கந்த சஷ்டி விழா கழகத்தை தோற்றுவித்தனர்.

நகரச் சிவன் கோவில் முகப்பு மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு, வருடம் தோறும் ஐப்பசி மாதம் அமாவாசையன்று தொடங்கி ஒன்பது நாட்கள் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.[1]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 "தினமலர்: தேவகோட்டை நகரச் சிவன் கோயில்".