தேவநாராயணன்

தேவநாராயணன் (Devnarayan) இந்தியாவின் இராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற தெய்வம். இவர் விஷ்ணுவின் அவதாரமாக, பெரும்பாலும் இராஜஸ்தான் மற்றும் வடமேற்கு மத்தியப் பிரதேசத்தில் வழிபடப்படுகிறார்.[1][2]பாரம்பரியத்தின் படி, இவர் விக்ரம் நாட்காட்டி 968 (கி.பி.911) இல் இந்து நாட்காட்டியில் மாசி மாதத்தின் பிரகாசமான பாதி (சுக்ல சப்தமி) ஏழாவது நாளில் ஸ்ரீசவாய் போஜ் மற்றும் சாது மாதா ஆகியோருக்குப் பிறந்தார்.[3] ஒரு பார்வையின் படி வரலாற்று தேவநாராயணன் விக்ரம் நாட்காட்டியின் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மற்றொரு கருத்துப்படி, இவர் 1200-1400 (விக்ரம் நாட்காட்சி சகாப்தம்) இடையே வாழ்ந்தார்.[4]

தேவநாராயணன்
வகைகுஜ்ஜர்
ஆயுதம்வாள், ஈட்டி
துணைபிபால்டே
குழந்தைகள்பில்லா (மகன்), பிலி (மகள்)
சமயம்இராசத்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்
விழாக்கள்தேவநாராயண் ஜெயந்தி (மஹி சதம்) , பத்வி சாத் (லீலாதர் குதிரையின் பிறப்பு)
ஸ்ரீ தேவநாராயணன்

தேவநாராயணன் காவியம் என்பது இராஜஸ்தானின் மிக நீண்ட மற்றும் மிகவும் பிரபலமான மத வாய்வழி கதைகளில் ஒன்றாகும். [5] தேவநாராயணன் காவியம் 'தற்காப்புக் காவியங்கள்' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. [6]

மேற்கோள்கள்

தொகு
  1. Nectar gaze and poison breath: an analysis and translation of the Rajasthani By Aditya Malik, Interpretations (Page 102 to 104). oxford university press.
  2. "The Rajasthani oral narrative of Devnarayan-Presentation mode, Synopsis of the epic, thematic content". Indira Gandhi National Centre for the Arts.
  3. "The Rajasthani oral narrative of Devnarayan-Presentation mode, introduction". Indira Gandhi National Centre for the Arts.
  4. Amaresh Datta (2006). The Encyclopaedia Of Indian Literature (Volume One (A To Devo), Volume 1. Sahitya Akademi. p. 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126018038, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
  5. Of clowns and gods, Brahmans, and babus: humour in South Asian literature, Christina Oesterheld, Claus Peter Zoller pp. 157
  6. Ways of dying: death and its meanings in South Asia, Elisabeth Schömbucher, Claus Peter Zoller, pp.234

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவநாராயணன்&oldid=4109399" இலிருந்து மீள்விக்கப்பட்டது