தேவராட்டம் (2019 திரைப்படம்)

எம். முத்தையா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேவராட்டம் இயக்குநர் எம். முத்தையா எழுதி இயக்கிய 2019 இந்திய தமிழ் அதிரடி நாடக படம் ஆகும். இப்படத்தை கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளிவந்த படம்.[1] இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், வினோதினி வைத்தியநாதன், சூரி, மற்றும் FEFSI விஜயன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை அமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்தார்.[2][3] இந்த படம் 1 மே 2019 அன்று வெளியிடப்பட்டது. இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது.[4][5][6]

கதை தொகு

வெற்றி (கவுதம் கார்த்திக்) ஆறு சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்களுடன் ஒரு கூட்டு குடும்பத்தில் வசிக்கிறார். அவரை அவரது மூத்த சகோதரி பேச்சி (வினோதினி வைத்தியநாதன்) வளர்த்து வருகிறார், மேலும் அவர்களது உறவு ஒரு தாய் மற்றும் மகனைப் போன்ற உறவாகவே உள்ளது.

வெற்றிக்கு கோபம் ஓர் பிரச்சினையாகவே உள்ளது மற்றும் இதனால் அவர் தேவையற்ற சண்டைகளில் சிக்குவது வழக்கம். ஆனால் குடும்பத்தில் எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள், ஏனெனில் அவர் அவர்களது குடும்பத்தில் முதல் வக்கீல் ஆவார். இருப்பினும், பாலியல் குற்றவாளியான அவரது நண்பரை (கார்த்திக் குமார்) கொலை செய்யும் போது விரைவில் அவர் சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொள்கிறார். கொலை செய்யப்பட்டவர் மதுரையின் பயங்கரமான குண்டரான கொடும்பவி கணேசனின் (FEFSI விஜயன்) மகன் ஆவார். கணேசன் பழிவாங்குவதாக சத்தியம் செய்து, வெற்றி எப்படி தனது மகனை மதுரை வீதிகளில் பகல் நேரத்தில் கொலை செய்தாரோ அதை போலவே கொலை செய்வதாக உறுதியளித்தார். இருப்பினும், கணேசன் அதற்கு பதிலாக பேச்சியையும் அவரது கணவரையும் (போஸ் வெங்கட்) கொல்கிறார். இறந்த உறவினர்களின் இறுதிச் சடங்கிற்கு முன்பு கனேசனை பழிவாங்கும் விதமாக, வெற்றி, கணேசனைக் கொன்று, துண்டிக்கப்பட்ட தலையை வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியின் உள்ளே வைக்கிறார்.

இசை தொகு

இப்படத்தில் வெளிவந்த பாடல்கள்:

  • மதுரா பள பளக்குது
  • பசம்புக்கலி
  • எங்கா அட்டம்
  • அழகரு வாராரு
  • லேசா லேசா
  • ஆத்தா தொட்டில்
  • உலகம் உன்ன விட்டு

கதாப்பாத்திரங்கள் தொகு

கவுதம் கார்த்திக் - வெற்றி

மஞ்சிமா மோகன் - மது

பரோட்டா சூரி - வெற்றியின் நான்காவது மைத்துனர்

FEFSI விஜயன் - கொடும்பாவி கனேசன்

வினோதனி வைத்தியநாதன் - பேச்சி, வெற்றியின் முதல் சகோதரி

போஸ் வெங்கட் - வெற்றியின் முதலாவது மைத்துனர்

சரவண சக்தி - வெற்றியின் இரண்டாவது மைத்துனர்

ஆறு பாலா - வெற்றியின் மூன்றாவது மைத்துனர்

விஜயகுமார் - வெற்றியின் ஐந்தாவது மைத்துனர்

முனீஷ் ராஜா - வெற்றியின் ஆறாவது மைத்துனர்

அகல்யா வெங்கடேசன் - வெற்றியின் சகோதரி

சென்பகம் - வெற்றியின் சகோதரி

சிந்து - வெற்றியின் சகோதரி

சரண்யா- வெற்றியின் சகோதரி

அகிலா - வெற்றியின் சகோதரி

வேலா ராம மூர்த்தி - கல்யாணி தேவர், வெற்றியின் தந்தை

ஜி. ஞான சம்பந்தம் - போஜராஜன்

சந்துரு சுஜன் - தெய்வம், கனேசனின் மகன்

வீரன் செல்வராஜன் - வீரன்

ஹலோ கந்தசாமி - வனிதாவின் தந்தை

ரகு ஆதித்யா - முண்ணா

வெளியீடு மற்றும் விமர்சனம் தொகு

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஒரு நல்ல துவக்கத்தைப் பெற்றது. ஆனால் வன்முறை மற்றும் ஆண் பேரினவாதத்தை மகிமைப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Devarattam (2018) | Devvarattam Tamil Movie | Devarattam Review, Cast & Crew, Release Date, Photos, Videos". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  2. MC,SS<DW<MSGuru (2018-10-31). "Devarattam Tamil Movie 2018 | Cast | Songs | Teaser | Trailer | Review". News Bugz. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
  3. Devarattam | Devarattam Cast and Crew, Release Date and more (in ஆங்கிலம்), archived from the original on 2018-12-14, பார்க்கப்பட்ட நாள் 2018-12-11
  4. Suganth, M (1 May 2019). "Devarattam Movie Review". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/devarattam/movie-review/69125455.cms. பார்த்த நாள்: 3 May 2019. 
  5. https://www.thenewsminute.com/article/devarattam-review-another-tiring-muthiah-film-macho-hero-101028
  6. https://www.zeebiz.com/india/news-devarattam-box-office-collection-mass-hit-biggest-ever-opening-for-gautham-karthik-97795