தேவி பிரசாத் பால்

இந்திய அரசியல்வாதி

தேவி பிரசாத் பால் (Debi Prasad Pal) (1 நவம்பர் 1927 - 14 மே 2021) இந்திய உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் பயிற்சி பெற்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் முன்னாள் நிதியமைச்சராகவும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும், மக்களவையில் மூன்று முறை பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

Dr
தேவி பிரசாத் பால்
2010இல் பால்
முன்னாள் இந்திய நிதியமைச்சர்
பதவியில்
7 ஜனவரி 1995 – 22 மே 1996
கொல்கத்தா வடமேற்கு பக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1989–1998
முன்னையவர்அசோக் குமார் சென்
பின்னவர்சுதீப் பந்தோபாத்யாய்
தொகுதிகொல்கத்தா வடமேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-11-01)1 நவம்பர் 1927
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
இறப்பு14 மே 2021(2021-05-14) (அகவை 93)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இலட்சுமி ரானி பால்
வாழிடம்கொல்கத்தா
முன்னாள் கல்லூரிசுரேந்திரநாத் கல்லூரி (இரிப்பன் கல்லூரி)
கொல்கத்தா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
இணையத்தளம்Lok Sabha Bio Sketch

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

தேவி பிரசாத் பால், 1927இல் கொல்கத்தாவில்[2] புகழ்பெற்ற அறிஞரும் கல்வி அறிஞருமான அஸ்வினி குமார் பால் - சரளா பாலாஆகியோருக்குப் பிறந்தார். கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த இவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆங்கில இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்பிற்காக இவருக்கு மதிப்புமிக்க கடிதங்களின் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் தனது கல்வி வாழ்க்கை முழுவதும் முதல் இடத்தில் இருந்தார். இவர் சர்வதேச நீதிபதியாக இருந்த நீதிபதி இராதாவினோத் பாலின் மருமகனாவார்.

சட்டத் தொழில்

தொகு

முனைவர் பால், 1959இல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார். அதன்பிறகு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் சட்டப் பயிற்சியினை மேற்கொள்ள ஆறு மாதங்களுக்குள் பதவி விலகினார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1989இல் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். கொல்கத்தா வடமேற்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரசு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அரசியலிலும், சட்டத்திலும் தனது குருவாக இருந்த அசோக் குமார் சென்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இவரைத் அப்போதைய இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் மத்திய நிதியமைச்சராக தேர்ந்தெடுத்தார். இவர் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சரும், பிரதமருமான, மன்மோகன் சிங்குடனும் பணியாற்றினார். இவர் 1991 , 1996 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று அக்கட்சியில் சேர்ந்தார். ஆனால் விரைவிலேயே காங்கிரசுக்குத் திரும்பினார்.

மத்திய நிதி அமைச்சர்

தொகு

இவர் 1995 - 1996 வரை நரசிம்மராவ் அரசாங்கத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இந்தியாவின் பத்தாவது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

அறக்காரியங்கள்

தொகு

முனைவர் பால் தனது தொண்டு பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். இவர் இந்தியாவின் புற்றுநோய் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[4]

மூத்த வழக்கறிஞர்

தொகு

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் பயிற்சி செய்து வந்தார். வரிவிதிப்பு விஷயங்களில் இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் அதிக சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும், இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்திய ஒருவராவார்.[5]

நிதித்துறை சட்டமன்ற சீர்திருத்த ஆணைய உறுப்பினர்

தொகு

ஓய்வுபெற்ற நீதிபதி பி. என். சிறீகிருஷ்ணா தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட நிதித்துறை சட்டமன்ற சீர்திருத்த ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[6] [7] [8] [9] [10] [11]

மேற்கோள்கள்

தொகு
  1. Parliament of India Profile
  2. Short Bio-data as Member of Parliament
  3. "Biographical Sketch on the Lok Sabha website". Archived from the original on 3 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 November 2009.
  4. "Cancer Foundation of India". Archived from the original on 24 November 2009. பார்க்கப்பட்ட நாள் 16 November 2009.
  5. "Debi Prasad Pal represents Vedanta Resources and Sterlite Group". Archived from the original on 2 January 2010. பார்க்கப்பட்ட நாள் 18 November 2009.
  6. Resolution Nofifying Constitution of Financial Sector Legislative Reforms Commission (FSLRC) Issued
  7. Top bankers, regulators & legal experts to assist Sri Krishna in FSLRC
  8. Financial sector bills to be rejigged
  9. "Debi Prasad Pal joins financial sector reforms panel". Archived from the original on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 4 April 2011.
  10. Govt steps up to re-write and clean up financial-sector laws
  11. Financial Sector Legislative Reforms Commission (FSLRC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_பிரசாத்_பால்&oldid=3285781" இலிருந்து மீள்விக்கப்பட்டது