தேவேந்திரப்பா

இந்திய அரசியல்வாதி

யாரபாசி தேவேந்திரப்பா (Yarabasi Devendrappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். [2]

தேவேந்திரப்பா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
18 சூன் 2019
முன்னையவர்வி.எசு. உக்ரப்பா
தொகுதிபெல்லாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மே 1951 (1951-05-07) (அகவை 73)[1]
அர்சிக்கேரி,[1] அர்பனகள்ளி தாலுக்கா, பெல்லாரி மாவட்டம், சென்னை மாநிலம் (Now கருநாடகம்)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
வாழிடம்அர்சிக்கேரி[1]
மூலம்: [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

தேவேந்திரப்பா கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அரசிகெரேவில் பிறந்தார். [3]

அரசியல் வாழ்க்கை

தொகு

தேவேந்திரப்பா முதலில் காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 2010 ஆம் ஆண்டில் இயகலூரில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2018 ஆம் ஆண்டில் பெல்லாரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது இவர் சாத்தியமான காங்கிரசு வேட்பாளராக பெயரிடப்பட்டார். தேவேந்திரப்பா கர்நாடக அமைச்சரான இரமேசு இயார்கிகோலியின் உறவினரும் விசுவாசியுமாவர். அந்த நேரத்தில் இவர் காங்கிரசு கிளர்ச்சியாளராகவும் நெருங்கிய பாரதிய சனதா ஆதரவாளராகவும் இருந்தார். இதன் காரணமாக அவர் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார், பெல்லாரி பாரதிய சனதாவின் பலமான பி சிறீராமுலுவாலும் அங்கீகரிக்கப்பட்டார். இரமேசு இயார்க்கோலியும் இவரை ஆதரித்தார். [4] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரசு இவரை வேட்பாளராக அங்கீகரிக்காததால் இவர் வி.எசு. உக்ரப்பாவை தோற்கடித்து, பெல்லாரி தொகுதியில் பாரதிய சனதா வேட்பாளராக வெற்றி பெற்றார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Members : Lok Sabha".
  2. "Lok Sabha Results 2019: BJP sweeps in Karnataka, leaves ruling coalition in tizzy". News Nation. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Devendrappa Y | National Portal of India". பார்க்கப்பட்ட நாள் 21 February 2021.
  4. Malagi, Shivakumar G. (2019-03-23). "Ballari BJP nominee Devendrappa is a 'proxy' of Congress rebel Jarkiholi!" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.
  5. "Snubbed for another, Devendrappa gets his revenge on Congress". பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திரப்பா&oldid=3832819" இலிருந்து மீள்விக்கப்பட்டது