தொட்டகல்லாசந்திரா ஏரி

தொட்டகல்லாசந்திரா ஏரி (Doddakallasandra Lake) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் உள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

தொட்டகல்லாசந்திரா ஏரி
கர்நாடகாவில் ஏரி அமைவிடம்
கர்நாடகாவில் ஏரி அமைவிடம்
தொட்டகல்லாசந்திரா ஏரி
கர்நாடகாவில் ஏரி அமைவிடம்
கர்நாடகாவில் ஏரி அமைவிடம்
தொட்டகல்லாசந்திரா ஏரி
ஆள்கூறுகள்12°52′55.32″N 77°33′41.48″E / 12.8820333°N 77.5615222°E / 12.8820333; 77.5615222

பல்லுயிர் வளம் தொகு

இந்த ஏரி புலம்பெயர்ந்த பறவைகள் உட்படப் பல வகையான பறவைகளின் புகலிடமாக உள்ளது.[2] இங்கு வண்ணத்துப்பூச்சி இனங்கள் பலவும் காணப்படுகின்றன.[3] 2019ஆம் ஆண்டில் ஆக்சன் ஏட் என்னும் அரசு சாரா நிறுவனம் தயாரித்த பல்லுயிர் அறிக்கையின்படி, தொட்டகல்லாசந்திரா ஏரியில் 42 வகையான மரச்சிற்றினங்களும், 43 வகையான புதர் மற்றும் சிறு தாவரங்களும், 37 பட்டாம்பூச்சி சிற்றினங்கள் மற்றும் 11 வலசைப்போகும் பறவைகள் உட்பட 71 பறவை சிற்றினங்கள் இந்த ஏரியில் காணப்பட்டன. இவற்றில் இரண்டு பறவைகள் - பாம்புத் தாரா மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன் - பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அறிக்கையின் படி, அச்சுறுத்தப்பட்ட இனங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.[4]

ஏரி புத்துயிர்த் திட்டம் தொகு

மாசுபட்ட தொட்டகல்லாசந்திரா ஏரியினைச் சுத்தப்படுத்தும் பணி சூலை 2020-ல் தொடங்கியது. ஏரியின் கழிவுகள் அகற்றப்பட்டு ஏரிக்கரையில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.[5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Staff Reporter (2019-12-21). "Residents fear losing Doddakallasandra lake to real estate company" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/bangalore/residents-fear-losing-doddakallasandra-lake-to-real-estate-company/article30368825.ece. 
  2. Staff Reporter (2021-03-04). "Concerns over restoration process of Doddakallasandra lake" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/bangalore/concerns-over-restoration-process-of-doddakallasandra-lake/article33983036.ece. 
  3. Tejaswi (2019-07-14). "Butterfly survey at Doddakallasandra lake unearths promising results" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/bangalore/butterfly-survey-at-doddakallasandra-lake-unearths-promising-results/article28424733.ece. 
  4. "Lakes of Bengaluru: BBMP's apathy drowns efforts to revitalise Doddakallasandra lake". The Indian Express (in ஆங்கிலம்). 2022-02-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  5. Reporter, Staff (2021-03-04). "Concerns over restoration process of Doddakallasandra lake". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டகல்லாசந்திரா_ஏரி&oldid=3721615" இலிருந்து மீள்விக்கப்பட்டது