தொட்டபல்லாபூர்
தொட்டபல்லாபூர் (Doddaballapura) என்பது தென்னிந்திய மாநிலமான கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரு ஊரக மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சிப் பகுதியாகும். 'தொட்டா' என்பது கன்னடத்தில் "பெரியது" என்று பொருள்படும். இது பெங்களூரில் இருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள பல தேசிய நிறுவனங்களைக் கொண்ட ஒரு தொழில் நகரமாகும்.
தொட்டபல்லாபூர்
தொட் பல்லாபூர் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): டி.பி. பூர் | |
ஆள்கூறுகள்: 13°17′31″N 77°32′35″E / 13.292°N 77.543°E | |
நாடு | பெங்களூரு ஊரக மாவட்டம் இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | பெங்களூரு ஊரக மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சிக் குழு |
ஏற்றம் | 880 m (2,890 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,99,594 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 561 203 |
தொலைபேசி இணைப்பு எண் | 080 |
வாகனப் பதிவு | கே-43 கே–50 |
இணையதளம் | http://bangalorerural.kar.nic.in/doddaballapura.asp |
உள்ளூர் ஆதிநாராயண கோவிலில் கிடைத்துள்ள கி.பி. 1598 தேதியிட்ட ஒரு கல்வெட்டில் இந்த இடம் பல்லாலபுரம் தாண்டா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போசளப் பெயரான பல்லாலிலிருந்து தோன்றி, பின்னர் பல்லாபுரம் என சிதைந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட எறும்புப் புற்றின் மீது ஒரு பசு 'பாலை' சுரக்கும் சூழ்நிலையிலிருந்து இந்த கிராமம் அதன் பெயரைப் பெற்றதாகவும், இந்த சகுனம் நகரத்தின் அடித்தளத்திற்கு வழிவகுத்ததாகவும் நம்பப்படுகிறது. 'பல்லா' என்பதிலிருந்து பல்லாபுரம் என்ற பெயர் இவ்வாறு பெறப்பட்டது.
பொருளாதாரம்
தொகுபெங்களூரிலிருந்து வடக்கு நோக்கி பெங்களூர்-இந்துப்பூர் மாநில நெடுஞ்சாலையில் (SH-9) 40 கிமீ தொலைவில் தொட்டபல்லாபூர் உள்ளது. இந்த நகரம் பட்டுப் புடவை நெய்தலுக்குப் பெயர் பெற்றது. வட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் இன்னமும் விவசாயத்தை முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர். நகரப் பகுதியில் மக்கள் நெசவு தொடர்பான தொழிலை (முக்கியமாக விசைத்தறி) சார்ந்துள்ளனர். தினசரி ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலைக்காக பெங்களூரு செல்கின்றனர்.
இந்த நகரத்தில் இராசத்தானில் இருந்து வந்த ஏராளமான மார்வாடி மக்கள் உள்ளனர். நகைக்கடைகள், அடகு தரகு கடைகள், மின்சாதன கடைகள், துணி/ஆயத்த ஆடை கடைகள், உள்ளூர் மக்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளை வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவற்றை நம்பியுள்ளது. பசெட்டிஅள்ளி பல தொழிற்சாலைகளைக் கொண்ட அருகிலுள்ள நகரமாகும்.[1]
ஒரு பெரிய ஆயத்த ஆடை பூங்கா உட்பட தொழில்துறை பகுதியில் பல தேசிய மற்றும் பன்னாட்டு ஆடை தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன - கௌரிபிதானூரில் இருந்து தினமும் தொழில்துறை பகுதிக்கு பயணிக்கும் மக்கள் உட்பட தொட்டபல்லாபூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள்.
- வரவிருக்கும் திட்டங்கள்
$22 பில்லியன் முதலீட்டில் , 12,000-ஏக்கர் (49 கிமீ2) பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பகுதியும் கருநாடகாவின் வரலாற்றில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டம் ஒன்று இங்கு வரவுள்ளது.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Doddaballapur Industries Association, Bangalore". www.dia-association.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
- ↑ "State Cabinet approves IT park near Devanahalli airport". The Hindu. 2010-01-29. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.