தொம்மன்குத்து
கேரள அருவி
தொம்மன்குத்து (மலையாளம்: തൊമ്മന്കുത്ത്) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா வட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவி ஆகும்.[1] இது மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், கேரளத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலாவின் முக்கிய மையமாகவும் உள்ளது.[2] இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. தொம்மன்குத்து அருவி ஒற்றை அருவி அல்ல, ஆனால் 5 கி.மீ தொலைவில் 12 அருவிகளின் தொடர் ஆகும்.[3]
தொம்மன்குத்து
തൊമ്മന്കുത്ത് | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 9°54′0″N 76°47′0″E / 9.90000°N 76.78333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி மாவட்டம் |
ஏற்றம் | 40 m (130 ft) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 685581 |
தொலைபேசி குறியீட்டு எண் | 04862 |
அருகில் உள்ள நகரம் | தொடுபுழா |
மக்களவை தொகுதி | இடுக்கி |
தட்பவெப்ப நிலை | கேரளம் முழுவதும் ஏறக்குறைய ஒரே வெப்பநிலை (கோப்பென்) |
அமைவிடம்
தொகுதொம்மன்குத்து தொடுபுழாவிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நகரங்களான கரிமண்ணூர், வன்னப்புரம், உடும்பன்னூர் ஆகியவை கிட்டத்தட்ட 10 கி.மீ தொலைவில் உள்ளன.
மலையேற்றம்
தொகுதொம்மன்குத்து அருவி காடுகளில் அமைந்துள்ள ஏழு படிகள் கொண்ட அருவியாகும். காடுகள் வழியாக 12 கி.மீ தொலைவுக்கு மலையேற்றம் சாத்தியமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thommankuthu Waterfalls, Idukki - An Eco Tourism Centre of Kerala". SreesTours Official Blog About Kerala Tourism (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
- ↑ "Thommankuthu: Heavens fall here". The New Indian Express. 5 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
- ↑ "THOMMANKUTHU- ECO TOURISM". Kerala Forest Department.
வெளி இணைப்புகள்
தொகு- தொம்மக்குத்து அருவி, keralatourism.org
- தொம்மங்குத்து அருவி பரணிடப்பட்டது 2017-07-02 at the வந்தவழி இயந்திரம்
- தொம்மங்குத்துக்கு மலையேற்றம் பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம்