தொலைநோக்கி
தொலைநோக்கி (இலங்கை வழக்கு: தொலைக்காட்டி) தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப்பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க/அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை பயன்படுத்தும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது தகவல்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், ஒளிமுறிவு, பரவளைவு ஆடிகள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் அறிவியல் புரட்சிக்கு உதவின.
கலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார்.[1][2][3] கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.
தொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, மின்காந்த நிறமாலையின் பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.
வரலாறு
தொகுதொலைநோக்கியை உருவாக்கிய பெருமை மூவரைச் சார்ந்ததாகும். அவர்கள் ஹான்ஸ் லிப்பர் சே, ஜக்காரியாஸ் ஜான்சன், கலிலியோ கலிலி ஆகியோர் ஆவார்.
16 ஆம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் வில்லைகளை உருவாக்கிவிட்டனர்.1608 ஆம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படியான தொலை நோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன.
1609 ஆம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு வில்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் ஒரு சில நாட்களில் சிறப்பான வில்லைகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை கலிலியோ கலிலி வாணியல் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.[4]
தொலைநோக்கியின் வகைகள்
தொகுதொலைநோக்கி என்னும் பெயர் பல வகையான கருவிகளையும் குறிக்கப் பயன்படுகின்றது. இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு மின்காந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் மிகவும் பொதுவான வகை ஒளியியல் தொலைநோக்கி ஆகும். இதுவும், பிற வகைகளும் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
ஒளியின் ஒப்பீடு | |||||||
பெயர் | அலை நீளம் | அதிர்வு மீடிறன் (Hz) | ஒளியணுச் சக்தி (eV) | ||||
---|---|---|---|---|---|---|---|
காம்மா கதிர் | less than 0.01 nm | more than 10 EHZ | 100 keV – 300+ GeV | X | |||
எக்ஸ்-கதிர் | 0.01 to 10 nm | 30 PHz – 30 EHZ | 120 eV to 120 keV | X | |||
புற ஊதா | 10 nm – 400 nm | 30 EHZ – 790 THz | 3 eV to 124 eV | ||||
பார்க்கக் கூடியது | 390 nm – 750 nm | 790 THz – 405 THz | 1.7 eV – 3.3 eV | X | |||
அகச்சிவப்புக் கதிர் | 750 nm – 1 mm | 405 THz – 300 GHz | 1.24 meV – 1.7 eV | X | |||
நுண்ணலை | 1 mm – 1 meter | 300 GHz – 300 MHz | 1.24 meV – 1.24 µeV | ||||
ரேடியோ | 1 mm – km | 300 GHz – 3 Hz | 1.24 meV – 12.4 feV | X |
ஒளியியல் தொலைநோக்கி
தொகுஒளியியல் தொலைநோக்கி பெரும்பாலும் கட்புலனாகும் மின்காந்த அலைகளைப் பெற்றுக் குவியச் செய்வதன் மூலம் தொலைவிலிருக்கும் பொருட்களின் தெளிவான விம்பத்தை உருவாக்குகிறது. இவ்வகைத் தொலைநோக்கிகள், தொலைவில் உள்ள பொருட்களின் தோற்றக் கோணத்தைக் கூட்டுவதுடன், அவற்றின் ஒளிர்வையும் கூட்டுகிறது. ஒளியியல் தொலைநோக்கிகளின் முக்கிய கூறுகள் பெரும்பாலும் கண்ணாடியால் செய்யப்படும் வில்லைகளும், ஆடிகளும் ஆகும். இவை ஒளியைக் குவித்து உருவாக்கும் விம்பங்களைக் கண்ணால் நேரடியாகப் பார்க்கலாம், அல்லது ஒளிப்படமாகப் பிடித்தோ, தகவல்களைக் கணினிகளுக்கு அனுப்பியோ ஆய்வு செய்யலாம். ஒளியியல் தொலைநோக்கிகள் வானியல் துறையில் பெருமளவு பயன்படுவது மட்டுமன்றி, வானியல் அல்லாத பிற துறைகளில் தேவைப்படும் கருவிகளிலும் பயன்படுகின்றது. ஒளியியல் தொலைநோக்கிகள் மூன்றுவகையாக உள்ளன.
- அலைமுறிவுவகைத் தொலைநோக்கி: இது வில்லைகள் மூலம் விம்பத்தை உருவாக்குகிறது.
- அலைதெறிப்புவகைத் தொலைநோக்கி: இது ஆடிகளைப்பயன்படுத்தி விம்பம் உண்டாக்குகிறது.
- கலப்புத் தொலைநோக்கி: இது ஆடியுடன், வில்லைகளையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றது.
வானொலித் தொலைநோக்கி
தொகுவானொலித் தொலைநோக்கி என்பது, பரவளைவு வடிவிலான திசைசார் வானொலி அலைவாங்கி ஆகும்.
எக்ஸ்-கதிர் மற்றும் காம்மா கதிர்த் தொலைநோக்கி
தொகுதொலைநோக்கி வகைகள்
தொகு- ஒளியியல் தொலைநோக்கி
- பெரிய ஒளித்தெறிப்பு தொலைநோக்கி
- ஒளி முறிவுத் தொலைநோக்கிகள்
- கதிர்வீச்சுத் தொலைநோக்கிகள்
- சூரியத் தொலைநோக்கிகள்
- விண்வெளித் தொலைநோக்கிகள்
நிறமாலை மூலம்
தொகுமின்காந்த நிறமாலை மூலம் தொழிற்படும் தொலைநோக்கிகள்:
பெயர் | தொலைநோக்கி | வானியல் விஞ்ஞானம் | அலை நீளம் |
---|---|---|---|
ரேடியோ | ரேடியோ தொலைநோக்கிகள் | ரேடியோ வானியல் (ரேடர் வானியல்) |
more than 1 mm |
உப மில்லிமீற்றர் | உப மில்லிமீற்றர் தொலைநோக்கிகள் | உப மில்லிமீற்றர் வானியல் | 0.1 mm – 1 mm |
அப்பாலை அகச்சிவப்புக் கதிர் | – | அப்பாலை-அகச்சிவப்புக் கதிர் வானியல் | 30 µm – 450 µm |
அகச்சிவப்புக் கதிர் | அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கிகள் | அகச்சிவப்புக் கதிர் வானியல் | 700 nm – 1 mm |
பார்க்கக் கூடியது | கட்புலனாகும் நிறமாலை தொலைநோக்கிகள் | புலப்படும் ஒளி வானியல் | 400 nm – 700 nm |
புற ஊதாக்கதிர் | புற ஊதாக்கதிர் தொலைநோக்கிகள்* | புற ஊதாக்கதிர் வானியல் | 10 nm – 400 nm |
எக்ஸ்-கதிர் | எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகள் | எக்ஸ்-கதிர் வானியல் | 0.01 nm – 10 nm |
காம்மாக் கதிர் | காம்மாக் கதிர்த் தொலைநோக்கி | காம்மாக் கதிர் வானியல் | less than 0.01 nm |
மேற்கோள்கள்
தொகு- ↑ archive.org "Galileo His Life And Work" BY J. J. FAHIE "Galileo usually called the telescope occhicde or cannocchiale ; and now he calls the microscope occhialino. The name telescope was first suggested by Demisiani in 1612"
- ↑ Sobel (2000, p.43), Drake (1978, p.196)
- ↑ Rosen, Edward, The Naming of the Telescope (1947)
- ↑ எஸ். சுஜாதா (20 சூன் 2018). "கண்டுபிடிப்புகளின் கதை: டெலஸ்கோப்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2018.
வெளியிணைப்புகள்
தொகு- Galileo to Gamma Cephei – The History of the Telescope
- The Galileo Project – The Telescope by Al Van Helden
- "The First Telescopes". Part of an exhibit from Cosmic Journey: A History of Scientific Cosmology பரணிடப்பட்டது 2008-04-09 at the வந்தவழி இயந்திரம் by the American Institute of Physics
- Timeline of telescopic technology பரணிடப்பட்டது 2013-10-02 at the வந்தவழி இயந்திரம்
- Outside the Optical: Other Kinds of Telescopes
- Gray, Meghan (2009). "Telescope Diameter". Sixty Symbols. Brady Haran for the University of Nottingham.
{{cite web}}
: Unknown parameter|coauthors=
ignored (help)