தொல்லியல் அருங்காட்சியகம், வைசாலி

தொல்லியல் அருங்காட்சியகம், வைசாலி, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தின், வைசாலி நகரத்தில் உள்ளது. இவ்வருங்காட்சியகத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்போது பெறப்பட்ட அரும்பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் 1971 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது நான்கு காட்சிக்கூடங்களைக் கொண்டது.

இங்கே களிமண்ணால் செய்யப்பட்ட பல வகை உருவங்கள், தாயும் பிள்ளையும், துர்க்கை, புத்தர் போன்ற சிற்பங்கள் என்பன உள்ளன. இவற்றுடன் முத்திரைகள், அணிகலன்களுக்குரிய மணிகள், நாணயங்கள் என்பனவும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனையும் காண்க

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு