தொல்லியல் அருங்காட்சியகம், புத்தகாயா

தொல்லியல் அருங்காட்சியகம், புத்தகாயா, இந்தியாவின் பீகார் மாநிலத்தில், காயா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இதி 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்குள்ள அரும்பொருட்கள், இரண்டு காட்சிக்கூடங்கள், இரண்டு விறாந்தைகள், ஒரு திறந்த வெளி முற்றம் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாலர் காலத்தைச் சேர்ந்த இந்து, பௌத்த மதங்கள் சார்ந்த வெண்கலம், கல் முதலியவற்றால் செய்யப்பட்ட சிலைகள்; பௌத்த மதம் சார்ந்த சிற்பப் பலகைகள், இராசிக் குறியீடுகள் செதுக்கப்பட்ட கைப்பிடிச் சுவர்கள் என்பன இங்குள்ளவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

முதல் காட்சிக்கூடம், நின்ற நிலையில் உள்ள இயக்கி ஒருத்தியின் சிலை, முடிசூட்டப்பட்ட புத்தர், மைத்திரேயர், புத்தர் சிலைகள், மஞ்சுசிரி நின்ற நிலையிலான சிலை போன்ற பொருட்களைக் கொண்டுள்ளது. இரண்டாம் காட்சிக்கூடத்தில் எழுகன்னிகைகள், திக்குப்பாலர்கள், திருமாலின் தசாவதாரம் ஆகியவற்றைக் காட்டும் இந்து, பௌத்தத் தொடர்புள்ள சிற்பங்கள் உள்ளன.

இதனையும் காண்க

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு