மகாராஜாதிராஜா லட்சுமிஷ்வர் சிங் அருங்காட்சியகம், தர்பங்கா

மகாராஜாதிராஜ் லக்மேஷ்வர் சிங் அருங்காட்சியகம், தர்பங்கா இந்திய மாநிலமான பீகாரில் உள்ள தர்பங்காவில் அமைந்துள்ள அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம், இந்தியாவிலேயே யானைத் தந்தத்தால் ஆன கைவினைப்பொருள்களை அதிகமான எண்ணிக்கையில் கொண்ட பெருமையுடையது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய யானைத்தந்தங்களால் செய்யப்பட்ட 155 க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஜாதிராஜா லட்சுமிஷ்வர் சிங் அருங்காட்சியகம்
வகைகலை அருங்காட்சியகம்
அமைவிடம்தர்பங்கா
ஆரம்பம்1979
Owned byபீகார் அரசு

வரலாறு தொகு

இந்த அருங்காட்சியகம் பீகார் அரசால் 1979ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தர்பங்கா ராஜ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் பீகார் அரசுக்கு நன்கொடையாகத் தரப்பட்ட கலைப்பொருட்கள் அளிக்கப்பட்டன. அவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் தொகு

இந்த அருங்காட்சியகத்தில் எட்டு வெவ்வேறு அறைகளில் தங்கம், வெள்ளி மற்றும் தந்தங்களால் செய்யப்பட்ட ஏராளமான அரிய பொருள்கள் மற்றும் ஆயுதங்களின் அரிய சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள ராஜ் சிங்காசன் மண்டபத்தில் தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட மகாராஜா ராமேஸ்வர் சிங்கின் அரச சிம்மாசனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தர்பங்கா ராஜ் ஆட்சியாளர்களால் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட ராஜ சிம்மாசனம் உள்ளது. அது தந்தங்களால் செய்யப்பட்டதாகும். தங்க மெருகூட்டப்பட்ட அந்த நாற்காலியுடன், கட்டிலும் உள்ளது. உலோகத்தால் ஆன கலைப்பொருட்கள் தாமிரத்தால் செய்யப்பட்டவையாக உள்ளன. மேலும் வட்ட வடிவிலான கவசமும் உள்ளது. அரிய ஆயுதங்களையும், மர கலைப்பொருள்களையும் காட்சிப்படுத்துவதற்காக தனித்தனி காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு தொகு

தர்பங்கா நகரமானது தர்பங்கா மன்னரோடும் ராஜ குடும்பத்தோடும் தொடர்புடைய பெருமையையுடையதாகும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் வகையில் தர்பங்காவிலுள்ள அருங்காட்சியகம் காணப்படுகிறது. வரலாற்றில் இப்பகுதியின் கலை மற்றும் பண்பாடு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தர்பங்காவில் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் காணப்படுகின்றன. பண்பாட்டு எச்சங்களை அதிகமாகக் கொண்டுள்ள வகையில் தர்பங்கா பீகாரின் பண்பாட்டுத் தலைநகரம் என்ற சிறப்பான பெயரைப் பெற்றுத் திகழ்கிறது. ஆதலால் முக்கியமான சுற்றுலாத்தலமாக இவ்விடம் கருதப்படுகிறது. தர்பங்கா ஆட்சியாளர்கள் கலை மற்றும் பண்பாடு சார்ந்த பல நிகழ்வுகளை தர்பங்காவிலும் சுற்றியுள்ள பகுதியிலும் நடத்தினர்.

ராஜ சிம்மாசனம் தொகு

முதல் காட்சிக்கூடத்தில் பெருமைமிக்க ராஜ சிம்மாசனம் உள்ளது. அது மரத்தால் சதுர வடிவில் அமைந்துள்ளது. தந்தத்தால் ஆன பூக்களும் இலைகளும் அதனை அழகு செய்கின்றன. அதன் அமைப்பினையும் அழகினையும் பார்க்கும்போது உண்மையான பூக்களைப் பார்ப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது. அந்த சிம்மாசனத்தில் மரத்தால் ஆன பகுதிக்கு சற்று மேலாக சிம்மாசனத்தினைச் சுற்றி ஆறு அங்குல வெள்ளித் தகடு பொருத்தப்பட்டுள்ளது. அந்தத் தகட்டில் அதிக எண்ணிக்கையிலான சிறிய வடிவிலான யானைகள் செதுக்கப்பட்டுள்ளன. சிறிதாக இருந்தாலும் அவை பார்ப்பதற்கு அருமையாக உள்ளன. அடுத்தபடியாக அந்தத் வெள்ளித்தகட்டிற்கு மேலாக இரண்டு அடி தூரத்தில் ஒவ்வொரு மூலையிலும் அவை சிம்மாசனத்தில் காணப்படுகின்றன.அனைத்து யானைகளின் பின்புறத்திலும் துவாரங்கள் காணப்படுகின்றன. இந்த அமைப்பானது சிம்மாசனத்தை அலங்கரிப்பதற்காக அமைக்கப்பட்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. அதற்கு அடுத்தபடியாக தங்கத்திலும், வெள்ளியானாலும் தகடுகளைக் காணமுடிகிறது. அவை சிம்மாசனத்தைச் சுற்றிலும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.அதில் பலவிதமான விலங்குகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. இயற்கையான தோற்றங்களில் அவை அமைந்துள்ளன. கர்ஜிக்கும் சிங்கங்கள், சண்டையிடும் எருதுகள், நீரில் விளையாடும் யானைகள், மரத்தில் ஏறும் சிறுத்தை, ஓடிக்கொண்டிருக்கும் மான் உள்ளிட்ட பல விலங்குகள் அங்கு காணப்படுகின்றன.[1]

மேலும் காண்க தொகு

குறிப்பு தொகு

வெளியிணைப்புகள் தொகு