தோக் பிசின்

தோக் பிசின் (Tok Pisin) பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ஒரு கிரியோல் அல்லது கலப்பு மொழி ஆகும். இது பப்புவா நியூகினியாவின் உத்தியோக மொழியாக இருப்பதுடன் நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படும் மொழியாகவும் உள்ளது. எனினும், நாட்டின் மேற்கு மாகாணம், வளைகுடா மாகாணம், மத்திய மாகாணம், ஓரோ மாகாணம், மில்னே குடா மாகாணம் ஆகியவற்றில் தொக் பிசினின் பயன்பாடு குறுகிய வரலாற்றைக் கொண்டதுடன், நாட்டின் பிற பகுதிகளைப்போல் இப்பகுதிகளில் கூடிய அளவுக்கு, குறிப்பாக முதியோர் மத்தியில், பேசப்படுவதில்லை. இது ஒரு வணிகக் கலப்பு மொழியாக உருவாகியிருக்கக்கூடும் எனினும் இது இப்போது தனித்தன்மை வாய்ந்த மொழியாக ஆகியுள்ளது. ஆங்கிலம் பேசுவோர் இதை "நியூகினியா கலப்பு மொழி" (New Guinea Pidgin) என்றோ "கலப்பு ஆங்கிலம்" (Pidgin English) என்றோ அழைக்கின்றனர்.

தொக் பிசின்
நாடு(கள்)பப்புவா நியூகினியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,20,000  (2004)[1]
4 மில்லியன் L2 பேசுவோர் (தேதி இல்லை)[2]
[ஆங்கிலத்தை அடிப்படையாகக்கொண்ட கலப்பு மொழிகள்
  • பசிபிக்
    • தொக் பிசின்
இலத்தீன் எழுத்து (தொக் பிசின் எழுத்துக்கள்)
கலப்புமொழி பிரெய்லி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பப்புவா நியூ கினி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2tpi
ISO 639-3tpi
மொழிக் குறிப்புtokp1240[3]
Linguasphere52-ABB-cc
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

ஐந்து மில்லியனுக்கும் ஆறு மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான மக்கள் தொக் பிசின் மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இம்மொழியைச் சரளமாகப் பேசுவர் என்று சொல்லமுடியாது. பலர் இப்போது இந்த மொழியை முதல் மொழியாகப் பயின்று வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் மொழிகளைப் பேசும் பெற்றோரையோ, பெற்றோருக்குப் பெற்றோரையோ கொண்ட சிறுவர்கள் தோக் பிசினை முதல் மொழியாகக் கற்கின்றனர். நகரப் பகுதியில் வாழும் குடும்பங்களும், காவல்துறை, பாதுகாப்புத்துறையைச் சார்ந்தோரும் பெரும்பாலும் தொக் பிசின் மொழியிலேயே தம்முள் பேசிக்கொள்கின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைச் சரளமாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவோ, அல்லது உள்ளூர் மொழியொன்றை தோக் பிசினுக்குப் பின் இரண்டாவது மொழியாகக் கற்பவர்களாகவோ இருக்கின்றனர். ஒரு மில்லியன் மக்கள் தோக் பிசினை முதன்மை மொழியாகப் பயன்படுத்துகின்றனர் எனலாம். தோக் பிசின் மொழி, பப்புவா நியூகினியாவின் பிற மொழிகளைப் படிப்படியாப் புறந்தள்ளி வருகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. தொக் பிசின் at Ethnologue (18th ed., 2015)
  2. தோக் பிசின் at Ethnologue (15th ed., 2005)
  3. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Tok Pisin". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. A.V. (24 July 2017). "Papua New Guinea’s incredible linguistic diversity". தி எக்கனாமிஸ்ட். https://www.economist.com/blogs/economist-explains/2017/07/economist-explains-14. பார்த்த நாள்: 20 July 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்_பிசின்&oldid=2464764" இலிருந்து மீள்விக்கப்பட்டது