தோசாலி
தோசாலி (Tosali or Toshali) தற்கால இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள வரலாற்று கால கலிங்க நாட்டின் தலைநகரம் ஆகும்.[1] புவனேஸ்வர் நகரத்திற்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோசாலி அருகே தௌலி மற்றும் சிசுபால்கர் தொல்லியல் களங்கள் உள்ளது.[2][3]
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பாயும் பிராம்மணி ஆறு சமவெளியில் அமைந்த தோசாலி தொல்லியல் களத்தில் அண்மையில் நடைபெற்ற அகழாய்வுகளில் சிதிலமடைந்த கோட்டைச் சுவர்கள், பண்டைய போர்க்கருவிகள், கல்வெட்டுக்கள் மற்றும் குசானப் பேரரசு காலத்திய தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[4][5]
சிசுபால்கர் தொல்லியல் களம்
தொகுஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியலாளர் பி. பா. லால் 1948-இல் சிசுபால்கர் தொல்லியல் களத்தில் நடத்திய அகழாய்வில் கிமு 2-ஆம் நூற்றாண்டு காலத்திய கோட்டையின் சிதிலமடைந்த 18 தூண்களை கண்டெடுத்தார்.[6] மேலும் சிசுபால்கர் தொல்லியல் களததில் கிமு 300 முதல் கிபி 350 முடிய உள்ள காலத்திய தொல்பொருட்களை கண்டுபிடித்தார்.[7]
இராதாநகர் தொல்லியல் களம்
தொகுசீன பௌத்த யாத்திரயாளாரான யுவான் சுவாங் தமது குறிப்புகளில் குறிப்பிட்ட அசோகரின் 10 தூபிகள் இத்தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Thapar, R. (2001) Aśoka and the Decline of the Mauryas, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X, p.100
- ↑ Thapar, R. (2001) Aśoka and the Decline of the Mauryas, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X, p.230
- ↑ Dhauli: An early Historic Urban Centre of Orissa பரணிடப்பட்டது 2008-10-10 at the வந்தவழி இயந்திரம் in Orissa Review, July, 2006
- ↑ Sudarsan, Surabhi (August 7, 2020). "India: Odisha farmer finds gold coin dating back to second century". https://gulfnews.com/world/asia/india/india-odisha-farmer-finds-gold-coin-dating-back-to-second-century-1.1596814365162.
- ↑ "This excerpt from a new book recasts Emperor Ashoka reputation as a pacifist". August 7, 2016. https://www.hindustantimes.com/this-excerpt-from-a-new-book-recasts-emperor-ashoka-reputation-as-a-pacifist/story-TqfYHU3yhLxt3SXFfqUK5J.html.
- ↑ Barik, Satyasundar (8 February 2008). "Sisupalgarh had a flourishing urban life: researchers". தி இந்து இம் மூலத்தில் இருந்து 11 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080211093450/http://www.hindu.com/2008/02/08/stories/2008020859211100.htm. பார்த்த நாள்: 7 August 2010.
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. New Delhi: Pearson Education. p. 338. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1677-9.
- ↑ Das, Prafulla (October 7, 2005). "Exploring an ancient kingdom". https://frontline.thehindu.com/other/article30206484.ece.