தோல்குருவி
தோல்குருவி (Oriental pratincole, Glareola maldivarum) என்பது கிளாரியோலிடீ எனப்படும் தோல்குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கரைப்பறவை[2]. கரைப்பறவை என வகைப்படுத்தப்பட்டு இருப்பினும் நீண்ட கூறிய இறக்கைகள், பிளவுபட்ட வால், பறக்கும்போதே உணவைப் பிடிக்கும் இயல்பு ஆகிய பண்புகள் இதைத் தகைவிலான் எனத் தோன்ற வைக்கும்.
தோல்குருவி | |
---|---|
மத்திய தாய்லாந்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | G. maldivarum
|
இருசொற் பெயரீடு | |
Glareola maldivarum Forster, 1795 |
உடல் தோற்ற அமைப்பு
தொகுஅனைத்து விதங்களிலும் கருவளையத் தோல்குருவியைப் போன்று இருக்கும் இதன் வால் பிளவு மட்டும் சற்று குறைவாக இருக்கும்; கையில் (அல்லது தெளிவான புகைப்படத்தை) வைத்துப் பார்த்தால் தான் இரண்டிற்குமான வேறுபாடு தெரியும்[3]. 23 முதல் 25 செ.மீ. வரை வளரும்; 60 – 100 கிராம் எடை இருக்கும் இக்குருவியின் ஆண் பெண் இரு பாலுமே ஒரே தோற்றமுடையவை.
மேற்பாகம். கருப்பு அலகு -- அதன் அடிப்பாகம் அடர் சிவப்பு நிறம். தலை, கழுத்தின் பின்பகுதி முதல் பிட்டத்தின் மேற்பகுதி வரை கரும்பழுப்பு நிறம் கொண்டது. வாலின் மேலிறகுகள் வெள்ளை.[2].
அடிப்பாகம். பழுப்பு கலந்த மஞ்சள் நிறத் தொண்டை; அதைச் சுற்றியவாறு, கண் அலகிடைப் பகுதியிலிருந்து தொடங்கும் கருப்புப் பட்டை. மார்பின் மேற்பகுதி பழுப்பு; கீழே செல்லச்செல்ல காவி நிறத்திற்கு மாற்றம் அடையும். வயிறும் வாலின் கீழிறகுகளும் வெள்ளையாக இருக்கும்[3].
பரவலும் வாழ்விடமும்
தொகுபரவல்
தொகுஇந்தியா, இலங்கை தொடங்கி மயன்மார், வியட்நாம், மலேசியா, தாய்வான், ஜப்பான் உள்ளிட்ட பல ஆசியப் பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதிகளிலும் ஐரோப்பாவின் ஸ்காண்டிநேவியா உள்ளிட்ட சில பகுதிகளிலும் தோல்குருவிகள் காணப்படுகின்றன[4].
திரளுதல்
தொகுவடமேற்கு ஆஸ்திரேலியாவின் எண்பது மைல் கடற்கரைப் பகுதியில் கிட்டத்தட்ட 3 மில்லியன் தோல்குருவிகள் ஒன்று திரண்ட நிகழ்வு 2004ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது[5]. 2010ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட 5 லட்சம் தோல்குருவிகள் அதே இடத்தில் ஒன்று திரண்ட நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது[6].
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Glareola maldivarum". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22694132/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ 2.0 2.1 "indianbirds.thedynamicnature.com/". indianbirds.thedynamicnature.com/. பார்க்கப்பட்ட நாள் 24-04-2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 3.0 3.1 சாலிம் அலி, டில்லன் ரிப்ளி (1978). Handbook of the Birds of India & Pakistan (Vol. 3). பக்கம். 14:443. OUP, Delhi.
- ↑ "ebird -- range map". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 25-04-2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Birds Australia - Western Australia Inc. -- millions of pratincoles" (PDF). birdswa.com.au. பார்க்கப்பட்ட நாள் 25-04-2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Record numbers of grasshopper-eating waders ..." பார்க்கப்பட்ட நாள் 25-04-2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help)