தோல் சிவத்தல் தொற்று

மனித நோய்

தோல் சிவத்தல் தொற்று (erythema infectiosum or fifth disease) என்பது பர்வோவைரசு பி 19 என்ற வகை வைரசின் பல்வேறு வெளிப்பாடுகளில் ஒன்றாகும். இதை ஐந்தாவது நோய் என்ற பெயராலும் குறிப்பிடுவர்.[3]

தோல் சிவத்தல் தொற்று
Erythema infectiosum
ஒத்தசொற்கள்கன்ன நோய்[1][2]
தோல் சிவத்தால் தொற்றால் பாதிக்கப்பட்ட 16-மாத வயது குழந்தை
சிறப்புதொற்று நோய்
அறிகுறிகள்சிவப்பு சொறி குறிப்பாக கன்னங்களில்
காரணங்கள்வைரசு

தோலில் சொறி போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் குழந்தை பருவ நோய்களின் நிலையான பட்டியலில் தோல் சிவத்தல் தொற்று என்ற இந்தநோய் ஐந்தாவது இடத்தைப் பிடிப்பதால் ஐந்தாவது நோய் என்ற பெயர் இதற்கு வைக்கப்பட்டது. தட்டம்மை, செங்காய்ச்சல், ரூபெல்லா, டியூக்சு நோய் போன்ற நோய்கள் முறையே முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள தொற்று நோய்களாகும். ரோசியோலா எனப்படும் செம்புள்ளி தொற்று நோய் இவ்வரிசையில் ஆறாம் இடத்தைப் பிடிக்கிறது. நான்காம் நோய் எனப்படும் டியூக்சு நோயை வரிசைப்படுத்தியதில் மட்டும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.

அறிகுறிகள்

தொகு

மிதமான காய்ச்சல், தலைவலி, சொறி, மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு போன்ற ஈரம் தொடர்பான அறிகுறிகள் ஐந்தாவது நோயான தோல் சிவத்தல் தொற்றின் அறிகுறிகளாகும். அறிகுறிகள் தென்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சொறி தோன்ற தொடங்கும். முகத்தில் பிரகாசமான சிவப்பு நிறசொறி அதிலும் குறிப்பாக கன்னங்களில் தோன்றும். இந்த அறிகுறி ஒரு குழந்தையிடத்தில் தோன்றினால் அக்குழந்தை தோல் சிவத்தல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என வரையறுக்கலாம். நோயின் பாதிப்பால் குழந்தையின் கன்னம் அறையப்பட்ட கன்னம் போல தோன்றும். எனவே இதை கன்ன நோய் என்றும் அழைப்பர். எப்போதாவது இச்சொறி மூக்குத் தண்டின் மீது அல்லது வாயைச் சுற்றியும் கூட விரிவடையும். சிவப்பு கன்னங்களுக்கு மேலதிகமாக குழந்தைகள் உடலின் மற்ற பகுதிகளான மேல் கைகள், உடல் மற்றும் கால்கள் போன்ற மிகவும் பொதுவான இடங்களிலும் நோயின் பாதிப்பு இருப்பதுண்டு. இத்தோல் சிவப்பு பொதுவாக சில நாட்கள் நீடிக்கும். நமைச்சல் ஏற்படுத்தும். ஒரு சில குழ்ந்தைகளுக்கு சிலவாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அறியப்படுகிறது. தோல் சிவத்தல் நோய் பொதுவாக ஒரு தொற்றுநோயாக இருப்பதில்லை[1][2]

பதின்வயதினர் மற்றும் பெரியவர்கள் சுயாதீனமாக கட்டுப்படுத்திக் கொள்ளத்தக்க மூட்டு வீக்கத்துடன் இருக்கலாம். இத்தகையவர்கள் மூட்டுவலிக்கு ஒத்ததாக உணரும் வகையில் மூட்டுகளின் இணைப்புகளில் வலியுடன் கூடிய வீக்கத்தில் இந்நோய் வெளிப்படுகிறது. ஐந்தாவது நோயால் பாதிக்கப்பட்ட பெரிய குழந்தைகள், வயதானவரகள் போன்றவர்களுக்கு நடப்பது கடினமாக இருக்கும். மணிக்கட்டு, முழங்கால்கள், கணுக்கால், விரல்கள் மற்றும் தோள்கள் போன்ற மூட்டுகளை வளைப்பதும் சிரமாக இருக்கும்.[1][2].

தோல் சிவத்தல் நோய் பொதுவாக ஆபத்து அற்றதாகும்.[4] ஆனால் சில ஆபத்தான கூட்டு நோய்களுடன் சேரும் போது இந்நோய் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

  • கர்ப்பிணிப் பெண்களின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் இத்தொற்று பனிக்குடத்தில் நீர்ப்பெருக்கு மிகுதலுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தன்னிச்சையான கருச்சிதைவு ஏற்படுகிறது.
  • அரிவாள்செல் சோகை எனப்படும் இரத்தச் சிவப்பணு நோய் அல்லது உருண்டைச் சிவப்பணு மிகை போன்ற நாள்பட்ட பரம்பரை இரத்தசோகை நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு உறுப்புகளற்ற குறைப்பிரசவ நெருக்கடியைத் ஏற்படுத்தும்.[1][2]
  • நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோய்களான எயிட்சு மற்றும் வேதிச்சிகிச்சை பெறும் நோயாளிகள் தோல் சிவத்தல் நோய்க்கு உட்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படலாம்.[5]

பரவுதல்

தொகு

ஐந்தாவது நோயான தோல் சிவத்தல் நோய் சுவாச சுரப்பிகளான உமிழ்நீர், சளி போன்றவைகளின் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட இரத்தத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் பரவுகிறது. ஆரம்ப நோய்த்தொற்றுக்கும் அறிகுறிகளின் தொடக்கத்திற்கும் இடையிலான அடைகாப்புக் காலம் பொதுவாக 4 முதல் 21 நாட்கள் வரையிலான காலமாகும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னர் ஐந்தாவது நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொற்று நோயாளிகளாகவே உள்ளனர். பள்ளி குழந்தைகள், பகல்நேரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும்பாலும் இவ்வைரசால் பாதிக்கப்படுகிறார்கள். நோயின் அறிகுறிகள் தென்படும்போது பரவும் ஆபத்து குறைவேயாகும். எனவே அறிகுறி தென்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.[1][2]

சிகிச்சை

தொகு

நோயாளியின் உடல் ஒத்துழைத்தால் சிகிச்சை மூலம் தொற்றை கட்டுப்படுத்த முடியும். எளிய காய்ச்சலடக்கி மருந்துகள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. . சிவந்து போதல் நோயில் பொதுவாக நமைச்சல் இருக்காது ஆனால் லேசான வலி வேதனை தரக்கூடியதாக இருக்கும். இந்த நோய்க்கு குறிப்பிட்ட சிரப்பு சிகிச்சை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

தொற்றுநோய்

தொகு

குழந்தைகள் அனைவருக்குமான பொதுவான நோயென்றாலும் 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளே இந்நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றர்.[6]. பொதுவாக இந்த நோயால் இளம்வயதில் பாதிக்கப்படுபவர்கள் முதிர்வயது அடையும் நேரத்தில் முன்னதாக நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களே நோயெதிர்ப்பு சக்தியாக மாறியிருப்பார்கள்.[1][2] குறிப்பாக மழலையர் பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நோய்தொற்று பெருமளவில் உண்டாகிறது. தோல் சிவந்து போதல் நோய்த் தொற்றுநோய் பள்ளிகள் மற்றும் பகல்நேரக் குழந்தைகள் காப்பக பணியாளர்களுக்கு ஒரு தொழில் சவாலாக அமைகிறது.[7] மனித பர்வோவைரசு பி 19 தொற்றுக்கு தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.[2] இருப்பினும் தடுப்பூசி ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[8]

வரலாறு

தொகு

தோல் சிவத்தல் தொற்று நோய் அல்லது இதைப்போல தோன்றும் ஒருவகை நோயை முதன்முதலில் ராபர்ட் வில்லன் 1799 ஆம் ஆண்டில் ருபியோலா, சைன் கேடார்கா என்று விவரித்தார்[9].1889 ஆம் ஆண்டில் அன்டன் திச்சாமர் இதை ரூபெல்லாவின் ஒரு மாறுபாடு என்றார்[10].1896 ஆம் ஆண்டில் இது தனித்துவம் மிக்கதென அடையாளம் காணப்பட்டது. 1899 ஆம் ஆண்டில் எரித்மா இன்பெக்டியோசம் என்ற பெயர் இதற்கு அளிக்கப்பட்டது. ஐந்தாவது நோய்" என்ற சொல் 1905 ஆம் ஆண்டில் உருசிய-பிரெஞ்சு மருத்துவர் லியோன் செயின்னிசேவால் உருவாக்கப்பட்டது. இவர் மிகவும் பொதுவாக எண்ணிக்கை அடிப்படையிலான ஆறு முக்கியமான குழந்தைப்பருவ அரும்புகளின் வகைப்பாட்டையே முன்மொழிந்தார். [11][9][12][13][14] இந்த வைரசு முதன்முதலில் 1957 ஆம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வெர்னர், பிராச்மேன் மற்றும் பலரால் விவரிக்கப்பட்டது.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Parvovirus B19 infections". Am Fam Physician 60 (5): 1455–60. October 1999. பப்மெட்:10524489. http://www.aafp.org/afp/991001ap/1455.html. பார்த்த நாள்: 2009-11-06. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Clinical presentations of parvovirus B19 infection". Am Fam Physician 75 (3): 373–6. February 2007. பப்மெட்:17304869. http://www.aafp.org/afp/20070201/373.html. பார்த்த நாள்: 2009-11-06. 
  3. Weir E (March 2005). "Parvovirus B19 infection: fifth disease and more". CMAJ 172 (6): 743. doi:10.1503/cmaj.045293. பப்மெட்:15767606. பப்மெட் சென்ட்ரல்:552884. http://www.cmaj.ca/cgi/pmidlookup?view=long&pmid=15767606. 
  4. "Erythema infectiosum (fifth disease) and pregnancy". Can Fam Physician 45: 603–5. March 1999. பப்மெட்:10099795. 
  5. Yoto, Y., et al., (2003). "Retrospective study on the influence of human parvovirus B19 infection among children with malignant diseases". Acta Haematol pg.8–12, PubMed
  6. Kwon, Kenneth T (March 19, 2009). "Pediatrics, Fifth Disease or Erythema Infectiosum". eMedicine. பார்க்கப்பட்ட நாள் November 7, 2009.
  7. Gillespie, S. M.; Cartter, M. L.; Asch, S; Rokos, J. B.; Gary, G. W.; Tsou, C. J.; Hall, D. B.; Anderson, L. J. et al. (1990). "Occupational risk of human parvovirus B19 infection for school and day-care personnel during an outbreak of erythema infectiosum". JAMA 263 (15): 2061–5. doi:10.1001/jama.1990.03440150069028. பப்மெட்:2157074. 
  8. "Safety and immunogenicity of a recombinant parvovirus B19 vaccine formulated with MF59C.1". J Infect Dis 187 (4): 675–8. 2003. doi:10.1086/368382. பப்மெட்:12599085. 
  9. 9.0 9.1 David M. Morens. Fifth Disease: Still Hazy After All These Years
  10. Altman, Lawrence K (November 30, 1982). "THE DOCTOR'S WORLD". The New York Times. https://www.nytimes.com/1982/11/30/science/the-doctor-s-world.html?pagewanted=all. பார்த்த நாள்: November 7, 2009. 
  11. Robert R. Briney. Primary Cutaneous Actinomycosis
  12. Dictionary of Virology
  13. St. Louis Courier of Medicine (1906)
  14. Principles and Practice of Clinical Virology
  15. Werner, Georges H.; Brachman, Philip S.; Ketler, Albert; Scully, John; Rake, Geoffrey (1957). "A new viral agent associated with Erythema Infectiosum". Viruses in Search of Disease. Annals of the New York Academy of Sciences. Vol. 67. pp. 338–345. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1749-6632.1957.tb46058.x. PMID 13411972.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_சிவத்தல்_தொற்று&oldid=3955326" இலிருந்து மீள்விக்கப்பட்டது