த. உதயகுமார்

உதயகுமார் தர்மலிங்கம் (Udaya Kumar Dharmalingam) ஒரு இந்திய கல்வியாளர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார். இவர் இந்திய ரூபாய்க் குறியீட்டை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. [1] 3,000 பேருக்கு மேல் வடிவமைப்புகளிலிருந்து ஐந்து பேருைடய வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது அதில் இவருடையது ஒன்று ஆகும். [2] குமாரின் கூற்றுப்படி, இந்த வடிவமைப்பு இந்திய மூவர்ணத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

த. உதயகுமார்
பிறப்பு1978
கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிதுணை பேராசிரியர், இ.தொ.க. குவகாத்தி
அறியப்படுவது2010 ஆம் ஆண்டு இந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைத்தவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இந்திய ரூபாய்க் குறியீடு

தொடக்க வாழ்க்கை

தொகு

உதயகுமார், 1978 இல் கள்ளக்குறிச்சியில் (தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகர்) பிறந்தார். இவரது தந்தை என். தர்மலிங்கம், 1971-76 காலகட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சார்பில் பணியாற்றினார்.[3]

ஆராய்ச்சி

தொகு
 
இந்திய ரூபாய்க் குறியீடு

உதயகுமார், வரைபட வடிவமைப்பு, அச்சுக்கலை, வடிவமைப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் ஆவல் கொண்டுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rupee gets a new symbol". பார்க்கப்பட்ட நாள் 19 November 2011.
  2. "Final Selection for the Symbol for Indian Rupee – List of Five Entries: Ministry of Finance, Government of India". Finmin.nic.in. Archived from the original on 25 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-30.
  3. "'My son has brought glory to TN'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._உதயகுமார்&oldid=3739470" இலிருந்து மீள்விக்கப்பட்டது