த. கி. சௌதா
தர்பே கிருஷ்ணானந்தா சௌதா (Darbe Krishnananda Chowta) (1 ஜூன் 1938 - 19 ஜூன் 2019)[1] ஓர் இந்தியத் தொழிலதிபரும், எழுத்தாளரும், கலைஞரும் மற்றும் நாடக ஆளுமையும் ஆவார்.[2]இவர் இறக்கும் போது கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.[3] இவர் இதற்கு முன்பும் இந்த அமைப்பில் பணியாற்றினார்.[4]
தர்பே கிருஷ்ணானந்தா சௌதா | |
---|---|
பிறப்பு | 1 ஜூன் 1938 கேரளம், இந்தியா |
இறப்பு | 19 ஜூன் 2019 (வயது 81) பெங்களூர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
பிள்ளைகள் | சந்தீப் சௌதா பிரஜ்னா சௌதா |
சுயசரிதை
தொகுசௌதா, கேரளாவின் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள தர்பே மெய்யப்படவு என்ற இடத்தில் துளு மொழி பேசும் பந்த் குடும்பத்தில் பிறந்தார்.[2]
மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் படிப்பை முடித்த பிறகு, சௌதா தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை கானா, நைஜீரியா மற்றும் இலண்டனில் கழித்தார்.[2] பின்னர் பெங்களூருக்குத் திரும்பி, ஏற்றுமதி உட்பட பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டார்.
இலக்கியம்
தொகுசௌதா ஆனந்த கிருஷ்ணா என்ற புனைப்பெயரில் எழுதினார்.[2] இவரது காரியவஜ்ஜெரென கதைக்குலு மற்றும் பிலிபதிகதாசு என்ற நாடகம் கர்நாடக அரசின் துலு சாகித்ய அகாடமியின் விருதுகளைப் பெற்றன.[5] பட்டு பஜ்ஜேலு, தர்மெட்டிமாயே, உரி உஷ்ணதா மாயே மற்றும் மிட்டபைலு யமுனாக்கா ஆகியவையும் இவரது பிற படைப்புகள்.[2] இவருக்கு மங்களூர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
சொந்த வாழ்க்கை
தொகுசௌதாவுக்கு சந்தீப் சௌதா (ஒரு இசைக்கலைஞர்) மற்றும் பிரஜ்னா சௌதா (ஒரு இனவியலாளர்) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mangaluru: Veteran theatre personality, author Dr D K Chowta passes away". Archived from the original on 21 June 2019. பார்க்கப்பட்ட நாள் 19 June 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Praveen Shivashankar (25 October 2013). "Keeping Tulu close to heart". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/keeping-tulu-close-to-heart/article5269471.ece. பார்த்த நாள்: 14 December 2014.
- ↑ Muralidhar Khajane (24 April 2014). "Chitrakala Parishath set to revive leather puppetry". The Hindu. http://www.thehindu.com/news/cities/bangalore/chitrakala-parishath-set-to-revive-leather-puppetry/article5941006.ece. பார்த்த நாள்: 14 December 2014.
- ↑ Anuradha Vellat (29 January 2014). "A coffee book table on art". Deccan Herald (Bangalore). http://www.deccanherald.com/content/383350/a-coffee-book-table-art.html. பார்த்த நாள்: 17 February 2014.
- ↑ Staff Correspondent (19 March 2011). "Chowta, Shantharam get Tulu academy awards". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110412034820/http://www.hindu.com/2011/03/19/stories/2011031961280500.htm. பார்த்த நாள்: 3 January 2012.
- ↑ Savitha Karthik (28 October 2010). "May we have the trumpets please". Deccan Herald. http://www.deccanherald.com/content/108716/may-we-have-trumpets-please.html. பார்த்த நாள்: 3 January 2012.