நங்கவள்ளி நாடு
நங்கவள்ளி வரலாறு
தொகுசேலம் பகுதி பாண்டியர், பல்லவர், சோழர், சேரர், விசயநகரப் பேரரசு, அதியமான், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம் என சேலம் அழைக்கப்பட்டது[சான்று தேவை]. சைலம் என்பதே சேலம் என மாறியது[சான்று தேவை]. இது மலைகள் சூழ்ந்தப் பகுதி என்பதாகும். சேலத்தின் முக்கிய மையப்பகுதியாகவும், காவிரி கரையோரம் அமைந்தப் பகுதியாகவும் நங்கவள்ளி உள்ளது.
ஒய்சாளர்கள்
தொகுகி.பி. 13 ஆம் நூற்றாண்டில் நங்கவள்ளி ஒய்சாளர்கள் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. ஒய்சாள மன்னன் இரண்டாம் வீரநரசிம்மன் (1220-1238) என்பவரின் மகன் வீரசோமேஸ்வரன் (1233- 1267) என்பவரால் நங்கவள்ளி சோமேஸ்வரர் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
விஜயநகர பேரரசு
தொகுகி.பி.14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசின் கீழ் நங்கவள்ளி இருந்திருக்கிறது. நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவிலின் கட்டமைப்பைப் பார்க்கும்போது இது புலனாகிறது.