நஜ்மா (Najma) என்பவர் பாக்கித்தான் முன்னாள் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1970 மற்றும் 1980களில் 100க்கும் மேற்பட்ட உருது மற்றும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக ஜீனத் (1975), டூஃபான் (1976), சார்ஜென்ட் (1977), ஷோலா (1978), வெஹ்ஷி குஜ்ஜர் (1979) உள்ளது. 1978-ல் சிறந்த நடிகைக்கான நிகர் விருதை வென்றார்.

நஜ்மா
தாய்மொழியில் பெயர்نجمہ
தேசியம்பாகிஸ்தானி
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1972 – 1994
அறியப்படுவதுஉருதும் பஞ்சாபிப் பட நடனம்
வாழ்க்கைத்
துணை
குலாம் முஸ்தபா ரிண்ட்
விருதுகள்சிறந்த நடிகைக்கான நிகர் விருது (1978)

தொழில் தொகு

நஜ்மா தனது திரைத்துறை வாழ்க்கையை 1972-ல்[1] ஹீரா என்ற பஞ்சாபி திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்ததன் மூலம் தொடங்கினார். ஆனால் இவரது முதல் குறிப்பிடத்தக்கத் திரைப்படம் "கன்சாதா" 1975-ல் வெளியாகியது. இந்தப் படத்தில் துணை கதாநாயகியாக நடித்தார். இப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றது. மேலும் இதன் மூலம் லாலிவுட்டில் நடிக்க நஜ்மாவுக்கு வழி கிடைத்தது. பின்னர், இவர் பல உருது மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்தார்.[2] அசுலாம் இராணி இயக்கிய "சார்ஜென்ட்" (1977) என்ற அதிரடி உருது திரைப்படம் இவரது குறிப்பிடத்தக்கப் படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படத்தில் விடுதி நடன மங்கையாக இவரது கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஆசிப்கானுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.[3][4] ஒரு வருடம் கழித்து, இவர் மற்றொரு வெற்றிகரமான பஞ்சாபி திரைப்படமான "ஷோலா"வில் நடித்துச் சிறந்த நடிகைக்கான நிகர் விருதை வென்றார்.[2]

நஜ்மாவின் கடைசித் திரைப்படம் "தகண்ட் கபனோ பலார் ஆகும். இது 1994-ல் வெளியானது.[5]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

நஜ்மாவின் கடைசி பாஷ்டோ திரைப்படம் வெளியான பிறகு, நஜ்மா மெஹ்ரான், சிந்துவைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ பிரபு குலாம் முஸ்தபா ரிண்டை மணந்து லாலிவுட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினார்.[2]

திரைப்படவியல் தொகு

நஜ்மா 29 உருது, 83 பஞ்சாபி மற்றும் 7 பாஷ்டோ மொழித் திரைப்படங்கள் உட்பட 119 படங்களில் நடித்துள்ளார்.[5]

  • 1975: கன்சாடா (பஞ்சாபி)
  • 1975: ஹத்காரி (பஞ்சாபி)
  • 1976: பகாவத் (பஞ்சாபி)
  • 1976: தூஃபான் (பஞ்சாபி)
  • 1976: பாகி டே ஃபராங்கி (பஞ்சாபி)
  • 1976: உரிமம் (பஞ்சாபி)
  • 1976: ஜட் குரியன் துன் தர்தா (பஞ்சாபி)
  • 1976: மொஹபத் அவுர் தோஸ்தி (உருது)
  • 1976: ஹஷர் நஷர் (பஞ்சாபி)
  • 1977: 2 சோர் (பஞ்சாபி)
  • 1977: உஃப் யே பிவியான் (உருது)
  • 1977: தில்தார் சட்கே (பஞ்சாபி)
  • 1977: 3 பாட்ஷா (பஞ்சாபி)
  • 1977: ஜீரா சைன் (பஞ்சாபி)
  • 1977: சார்ஜென்ட் (உருது)
  • 1977: சோர் சிபாஹி (பஞ்சாபி)
  • 1977: ஜப்ரூ (பஞ்சாபி)
  • 1977: கானூன் (பஞ்சாபி)
  • 1977: சுஹா ஜோரா (பஞ்சாபி)
  • 1977: அஜ் டியான் குர்ரியன் (பஞ்சாபி)
  • 1978: தக்ராவ் (உருது)
  • 1978: ஷோலா (பஞ்சாபி)
  • 1978: ஊரடங்கு உத்தரவு (பஞ்சாபி)
  • 1978: புறக்கணிப்பு (பஞ்சாபி)
  • 1978: ஷெரீப் ஜித்தி (பஞ்சாபி)
  • 1979: வெஹ்ஷி குஜ்ஜர் (பஞ்சாபி)
  • 1979: கெஹ்ரே ஜகாம் (உருது)

விருதுகள் தொகு

ஆண்டு விருது வகை முடிவு திரைப்படம் Ref.
1978 நிகர் விருது சிறந்த நடிகை வெற்றி ஷோலா [2][6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Punjabi film: Heera". Pakistan Film Magazine. பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.
  2. 2.0 2.1 2.2 2.3 "Najma". Nigar Magazine Weekly Golden Jubilee Number (2000): 175 – 176. 
  3. Nehash, Sarfraz Farid (12 April 2022). "ایکشن سے بھرپور ماضی کی سپر ہٹ فلم ’’سارجنٹ‘‘" (in ur). Daily Jang. https://jang.com.pk/news/1070144. 
  4. "Urdu film: Sargent". Pakistan Film Magazine. பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.
  5. 5.0 5.1 "Najma". Pakistan Film Magazine. Archived from the original on 12 May 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.
  6. "Pakistan's "Oscars"; The Nigar Awards". Desi Movies Reviews. Archived from the original on 15 March 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  7. "THE NIGAR AWARDS 1972 - 1986". TheHotSpotOnline. Archived from the original on 14 May 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜ்மா&oldid=3694421" இலிருந்து மீள்விக்கப்பட்டது