லாலிவுட்
லாலிவுட் (Lollywood) என்பது பாக்கித்தானியத் திரைப்படத்துறையில் இருந்து பஞ்சாபி மற்றும் உருது மொழிமொழிகளில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும்.[1] இந்த துறை பாக்கித்தான் நாட்டில் கராச்சி மற்றும் லாகூர் போன்ற நகரங்களை மையாக வைத்து இயங்கி வருகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் லாகூர் நகரத்தில் பாக்கித்தானியத் திரைப்படத்துறையின் மையமாக இருந்து. இங்கிருந்தே இரு மொழிகளிளான பஞ்சாபி மற்றும் உருது மொழி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றது.
பாக்கித்தான் நாட்டிலிருந்து டாக்கா நகரம் பிரிக்கப்படாதபோது பாக்கித்தானியத் திரைப்படத்துறை டாக்கா நகரை மையமாக கொண்டு இயங்கி வந்தது. 1971 இல் பங்களாதேஷ் சுதந்திரம் அடைந்த பின்னர் டாக்கா நகரம் பங்களாதேஷ் நாட்டிற்கு சொந்தமானது. அதன் காரணமாக பாக்கித்தானியத் திரைப்படத்துறை லாகூர் நகருக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் 2007 முதல் கராச்சி நகரில் பெரும்பாலும் உருது மொழித் திரைப்பட தயாரிப்புகள் மூலம் லாகூரை முந்தியுள்ளது.
லாலிவுட் என்ற வார்த்தை "லாகூர்" மற்றும் "ஹாலிவுட்" என்ற சொற்களை இணைத்து 1989 ஆம் ஆண்டு 'லாலிவுட்' என்று அழைக்கப்பட்டது. இந்த துறை பெரும்பாலும் பஞ்சாபி மொழித் திரைப்படங்களையே தயாரிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகின்றது. பாக்கித்தான் பஞ்சாபி லாலிவுட் திரைப்படங்கள் 1960 களில் மிகவும் பிரபலமாக இருந்தன, அது லாலிவுட்டின் பொற்காலம் என்று கருதப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "If you thought Lollywood was booming, let 2016 remind you why it's not". Archived from the original on 2019-12-17. பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
- ↑ Awan, M. Saeed (6 July 2014). "Cinemascope: Pulling the plug on Punjabi films". DAWN.COM. Archived from the original on 15 September 2015. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- Search Punjabi films @ IMDB.com பரணிடப்பட்டது 2009-11-09 at the வந்தவழி இயந்திரம்