நஜ்மா மெகபூப்

நஜ்மா மெகபூப் (Najma Mehboob)(1949 - 6 டிசம்பர் 1983) என்பவர் பாக்கித்தான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் உருது மற்றும் பஞ்சாபி மொழிகளில் நாடகங்கள் மற்றும் படங்களில் தாய் வேடத்தில் நடித்தார்.[1] 1983-ல் திரைப்பட படப்பிடிப்பின் போது தொடருந்து விபத்தில் இறந்தார்.

நஜ்மா மெகபூப்
Najma Mehboob
نجمہ محبوب
தாய்மொழியில் பெயர்نجمہ محبوب
பிறப்பு1949
இராவல்பிண்டி, பாக்கித்தான்
இறப்பு6 திசம்பர் 1983(1983-12-06) (அகவை 33–34)
லாகூர், பாக்கித்தான்
இறப்பிற்கான
காரணம்
தொடருந்து விபத்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1969 – 1983
வாழ்க்கைத்
துணை
முதமது நிசார் உசைன் (கணவர்)
பிள்ளைகள்1

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

நஜ்மா 1949-ல் பாக்கித்தானின் இராவல்பிண்டியில் பிறந்தார். ஆரம்பத்தில், இவர் மேடை நாடகங்களில் நடித்தார்.[2]

தொழில்

தொகு

மெகபூப் 1969-ல் பாக்கித்தான் தொலைக்காட்சி, லாகூரில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஹாதி டான்ட் என்ற நாடகம் மூலம் தொலைக்காட்சிக்கு வந்தார். பின்னர், இவர் பல தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்.[3] இவர் 82 படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் ஜியோ தோலா (1969) மற்றும் நாசக் ரிஷ்டே (1987) கடைசி படம்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நஜ்மா தொலைக்காட்சி தயாரிப்பாளர் முகமது நிசார் உசைனை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு குழந்தை இருந்தது.[2]

இறப்பு

தொகு

நஜ்மா மெகபூப், 1983ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் தேதி, லாகூரில் பஞ்சாபி திரைப்படமான ரிக்ஷா டிரைவரின் படப்பிடிப்பின் போது ஓடும் தொடருந்தில் குழந்தையைக் காப்பாற்ற முயன்று அடிபட்டு இறந்தார்.[4][5]

திரைப்படவியல்

தொகு

தொலைக்காட்சி தொடர்

தொகு
ஆண்டு தொடர் வேடம் தொலக்காட்சி
1969 ஹாதி டான்ட் ஹினா பாக்கித்தான் தொலைக்காட்சி
1980 சானன் டே தர்யா ஜுக்னு பாக்கித்தான் தொலைக்காட்சி
1981 டெஹ்லீஸ் சல்மா பாக்கித்தான் தொலைக்காட்சி
1982 சரப் ராபியா பாக்கித்தான் தொலைக்காட்சி
1982 Badzeed சோபியா பாக்கித்தான் தொலைக்காட்சி
1982 சோனா சண்டி ஃப்ரசாத் அலிகானின் தாய் பாக்கித்தான் தொலைக்காட்சி
1983 கசாய் அவுர் மெஹங்காய் ஜோஹ்ரா பாக்கித்தான் தொலைக்காட்சி
1983 ஷிகயாடைன் ஹகாயதைன் அபிதா பாக்கித்தான் தொலைக்காட்சி

திரைப்படம்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி
1969 ஜியோ தோலா பஞ்சாபி
1972 காலிஷ் உருது
1973 ஆஸ் உருது
1973 ரங்கீலா அவுர் முனாவர் ஜரீஃப் உருது
1973 திரு.புது உருது [6]
1974 ஐனா அவுர் சூரத் உருது
1974 நௌகர் வொஹ்தி டா பஞ்சாபி
1974 பூல் உருது
1975 சுல்தானா டகு பஞ்சாபி
1975 குட்டி பஞ்சாபி [7]
1975 ஜப் ஜப் பூல் கிலே உருது
1975 ஜீனத் உருது
1976 சித்ரா தே ஷேரா பஞ்சாபி
1976 அண்டாடா உருது
1976 ஆஜ் அவுர் கல் உருது
1977 ஆஷி உருது [8]
1978 காஜி இலமுதீன் ஷஹீத் பஞ்சாபி
1978 துஷ்மன் கி தலாஷ் பஞ்சாபி / பாஷ்டோ
1979 தக்த் யா தக்தா பஞ்சாபி
1979 ஹர் ஃபன் மௌலா பஞ்சாபி
1980 ஹாம் டோனோ உருது
1980 சைமா உருது
1980 ரிஷ்டா உருது
1981 சாலா சாஹிப் பஞ்சாபி
1981 குர்பானி உருது
1981 முஃப்ட்பார் பஞ்சாபி
1981 சாலா சாஹிப் உருது
1982 பாஸ்பான் உருது
1982 சர்தா சுராஜ் பஞ்சாபி
1983 சாஹிப் ஜீ பஞ்சாபி
1983 முராத் கான் பஞ்சாபி
1983 தில்லான் நாள் சௌடே பஞ்சாபி
1983 முராத் கான் பஞ்சாபி
1983 ரிக்ஷா டிரைவர் பஞ்சாபி
1987 நாசாக் ரிஷ்டாய் பஞ்சாபி

விருது

தொகு
ஆண்டு விருது வகை முடிவு தலைப்பு Ref.
1983 பாக்கித்தான் தொலைக்காட்சி சிறந்த நடிகை வெற்றி ஷிகயாடைன் ஹகாயதைன் [9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Spotlight: World's greatest mums". Dawn News. October 15, 2022.
  2. 2.0 2.1 2.2 "Najma Mehboob". Pak Film Magazine. Archived from the original on 19 August 2022. பார்க்கப்பட்ட நாள் 19 August 2022.
  3. "نجمہ محبوب کی وفات". Tareekh-e-Pakistan. March 19, 2023. Archived from the original on மார்ச் 20, 2023. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 29, 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "Celebrated Pakistanis who met unnatural deaths". https://www.thenews.com.pk/print/171065-Celebrated-Pakistanis-who-met-unnatural-deaths. 
  5. "34th death anniversary of Najma Mahboob". https://www.app.com.pk/showbiz/34th-death-anniversary-of-najma-mahboob/. 
  6. Pakistan Cinema, 1947-1997.
  7. Pakistan Cinema, 1947-1997.
  8. Pakistan Cinema, 1947-1997.
  9. "And the award goes to ..." Herald Dawn. January 22, 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜ்மா_மெகபூப்&oldid=4110140" இலிருந்து மீள்விக்கப்பட்டது