இல. நடராசன்

(நடராசன் (இந்தி எதிர்ப்பு போராளி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இல. நடராசன் (1919 - சனவரி 15, 1939)[1] என்பவர் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான இராசாசி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து, 1937இல்நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாக உயிர்விட்ட போராளி ஆவார்.[2]

குடும்பம்தொகு

சென்னை ஜார்ஜ் டவுன், போர்த்துகீசு தெருவைச் சேர்ந்த இலட்சுமணன், குப்பம்மாள் என்கிற பறையர் இன பெற்றோருக்குப் பிறந்தவர் நடராசன்.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்தொகு

கட்டாய இந்தித் திணிப்பைக் கண்டு கொதித்த நடராசன், 05.திசம்பர். 1938 அன்று, சென்னை சௌகார் பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டார்.

சிறைத்தண்டனைதொகு

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நடராசன் உள்ளிட்டோருக்கு ஏழரை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்றுவலிகாரணமாகத் திசம்பர் 30 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் நடராசன் சேர்க்கப்பட்டார். மன்னிப்புக் கடிதத்தை அளித்தால் விடுதலைசெய்வதாக அரசு கூறியபோது அதற்கு நடராசன் மறுத்துவிட்டார்.

மரணம்தொகு

மருத்துவமனையில் உடல் நிலை மோசமாகி, தண்டனைக் கைதியாகவே 1939,சனவரி.15 இல் காலமானார். இவரது உடல் சென்னை மூலக்கொத்தளம் சுடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

விளைவுதொகு

மொழிக்கான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு கைதியாக இருந்த போதே ஒருவர் இறந்தது அதுவே முதல் முறை. அந்தவகையில் மொழிப் போராட்டத்தில் முதல் தியாகி நடராசன். நடராசனின் மரணம் சூழலை உணர்வு பூர்வமாக்கிவிட்டது போராட்டத்தை மேலெடுத்துச்செல்ல இம்மரணம் அடிக்கல்லானது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையவே, இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 1940. பெப்ரவரி 21 இல் அன்று அரசு திரும்பப் பெற்றது.[3]

இவர்களின் நினைவைப் போற்றும்வகையில் சென்னையில் தமிழக அரசு அரசுக் கட்டடம் ஒன்றிற்கு தாளமுத்து நடராசன் மாளிகை என்று பெயர் சூட்டியுள்ளது.[4]

இதனையும் காண்கதொகு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

குறிப்புகள்தொகு

  1. [1]
  2. "உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்". தி இந்து (தமிழ் ) (சனவரி, 25, 2015). பார்த்த நாள் 25 ஏப்ரல் 2016.
  3. வாலாசா வல்லவன் (09 ஜூன் 2017). "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -50". கட்டுரை. கீற்று. பார்த்த நாள் 11 சூன் 2017.
  4. தி இந்து தமிழ் 24.1.2015 மொழிப்போர்;வரலாறு வரிசையிலும் இருக்கிறது கட்டுரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இல._நடராசன்&oldid=2632066" இருந்து மீள்விக்கப்பட்டது