மூலக்கொத்தளம்
மூலக்கொத்தளம் (ஆங்கில மொழி: Moolakothalam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5] 50 வருடங்களுக்கு மேலாக, மீன் கருவாட்டு சந்தை ஒன்று மூலக்கொத்தளம் பகுதியில் இயங்கி வருகிறது.[6]
மூலக்கொத்தளம்
Moolakothalam மூலக்கொத்தளம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°06′25″N 80°16′26″E / 13.107000°N 80.273800°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 29 m (95 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600021 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. எஸ். அமிர்த ஜோதி, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | தயாநிதி மாறன் |
சட்டமன்ற உறுப்பினர் | பி. கே. சேகர் பாபு |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலக்கொத்தளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′25″N 80°16′26″E / 13.107000°N 80.273800°E ஆகும். பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு ஆகியவை மூலக்கொத்தளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
மூலக்கொத்தளத்தில் 120 ஆண்டுகள் பழமையான மயானம் உள்ளது.[7] இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் இறுதி இளைப்பாறும் இடமான இந்த மயானம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். மேலும், சமூக ஆர்வலரும் சீர்திருத்தவாதியுமான சா. தருமாம்பாளுக்கு இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.[8] இந்த மயானத்தின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர்.[9] மூலக்கொத்தளம் மயானத்தின் அருகே, ஆதிதிராவிட மக்களின் நலன் கருதி, பல அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட, தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.[10] இதற்கு ம. தி. மு. க., சி. பி. எம்., வி. சி. க., போன்ற சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இங்குள்ள மயானத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்த, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.[11] அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படும் 1,044 குடியிருப்புகளின் திட்டச் செலவு சுமார் ரூ.138.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.[12]
மூலக்கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மூர்த்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hedlund, Roger E. (2000). Quest for Identity: India's Churches of Indigenous Origin: the "Little Tradition" in Indian Christianity (in ஆங்கிலம்). ISPCK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7214-525-5.
- ↑ Govardhan, Ram (2011-04-01). Rough with the Smooth (in ஆங்கிலம்). One Point Six Technology Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81115-61-9.
- ↑ Madras (India : Presidency) Forest Dept (1911). Annual Administration Report (in ஆங்கிலம்).
- ↑ Gandhirajan, C. K. (2004). Organized Crime (in ஆங்கிலம்). APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-481-7.
- ↑ Madras (India : State) Forest Department (1910). Administration Report (in ஆங்கிலம்). Superintendent, Government Press.
- ↑ "Moolakothalam's legendary dry fish market soldiers on". The Hindu (in Indian English). 2014-04-15. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ "மயானத்தை அகற்றுவதற்கு எதிர்ப்புதெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ "'Don't destroy historic burial ground in Chennai': Opposition to TN govt proposal". The News Minute (in ஆங்கிலம்). 2018-03-16. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ மாலை மலர் (2018-03-11). "மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவதை கண்டித்து ம.தி.மு.க. போராட்டம் - வைகோ அறிக்கை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ DTNext. "Jayakumar accuses Vaiko of stalling Moolakothalam project". DT next (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ "Vaiko opposes construction of flats on Moolakothalam burial ground". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ Deccan Chronicle (2018-03-22). "Over 1,000 dwelling units to be built at Moolakothalam". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
- ↑ "Arulmigu Moorthi Vinaygar Temple, Moolakothalam, Chennai - 600021, Chennai District [TM000747].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.