மண்ணடி, சென்னை
மண்ணடி என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாவட்டத்திலுள்ள புறநகர்ப் பகுதியாகும். வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகமான நெருக்கத்துடன் இங்கு அமைந்துள்ளன. .[1]
மண்ணடி, சென்னை
மண்ணடி | |
---|---|
ஆள்கூறுகள்: 13°05′37.7″N 80°17′20.8″E / 13.093806°N 80.289111°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 33 m (108 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 001 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | தயாநிதி மாறன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | பி.கே. சேகர் பாபு |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மண்ணடி நகரின் புவியியல் ஆள்கூறுகள் 13°05'37.7"N 80°17'20.8"E (அதாவது, 13.093800°N 80.289100°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
தொகுபாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார் பேட்டை ஆகியவை இந்நகரின் அருகிலுள்ள ஊர்களாகும்.
போக்குவரத்து
தொகுசாலைப் போக்குவரத்து
தொகுஇராஜாஜி சாலை, பிரகாசம் சாலை (பிராட்வே), நேதாஜி சுபாஷ் சந்திர (NSC) போஸ் சாலை வழியாக இயக்கப்படும் சென்னை மாநகரப் பேருந்துகள் ஏராளம். இவற்றினால் மண்ணடி வந்து செல்வோரின் பயணங்கள் எளிதாக இருக்கின்றன.
தொடருந்து போக்குவரத்து
தொகுசென்னைக் கடற்கரை தொடருந்து நிலையம் வழியாகப் பயணிப்பவர்கள் மண்ணடி வந்து செல்வது சுலபம்.
மெற்றோ வழித்தடம்
தொகுசென்னை மெற்றோவின் நீல, சுரங்கப்பாதை வழித்தடம் மண்ணடி வழியாகச் செல்வதுடன், மண்ணடி மெட்ரோ நிலையம் மண்ணடியில் அமைந்து, இங்குள்ள மக்களின் பயன்பாட்டில் பெரும்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம்
தொகு'சென்னை நேஷனல் மருத்துவமனை' என்ற பெயரில் ஜாஃபர் சரங் தெருவில், பல்நோக்கு மருத்துவமனை ஒன்று உள்ளது.[2]
ஆன்மீகம்
தொகுமராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மற்றும் மகாகவி பாரதியார் வழிபட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற கோயிலான காளிகாம்பாள் கோவில்,[3] மற்றும் பாரம்பரிய எழில்மிகு கட்டிடங்களில் ஒன்று என 'சிஎம்டிஏ' (CMDA) அமைப்பால் அறிவிக்கப்பட்ட கச்சாலீசுவரர் கோவில், ஜார்ஜ் டவுன், சென்னை,[4] ஆகியன மண்ணடியில் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? - சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/897842-nia-police-intensive-search-at-5-places-in-chennai.html.
- ↑ "Chennai National Hospitals". www.chennainationalhospital.com. Archived from the original on 2022-11-24. பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.
- ↑ மாலை மலர் (2016-11-12). "காளிகாம்பாள் கோவில் வரலாறு". Maalaimalar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.
- ↑ "பார்த்தசாரதி கோயில், பெரிய மசூதி உள்பட 42 பாரம்பரிய கட்டிடங்கள் - சிஎம்டிஏ பட்டியல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.