நாடின் கார்டிமர்

தென்னாப்பிரிக்க பெண் எழுத்தாளர்
(நடீன் கார்டிமர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாடின் கார்டிமர் (Nadine Gordimer, நதீன் கோர்டிமர், நடின் கோர்­டிமர் 20 நவம்பர், 1923 - சூலை 13, 2014) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆவார். தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறிக்கொள்கையை எதிர்த்து எழுதியவர். 1991 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர். 1974 இல் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்தோடு அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளிலும், சமூக அபி­வி­ருத்தி விட­யங்­க­ளிலும் ஊக்கம் காட்டியவர். தென்­னா­பி­ரிக்­காவில் வெள்­ளையர் ஆட்சி நடை­பெற்ற கால­கட்­டத்தில் சுதேச கறுப்பு இன­மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு இன ஒதுக்கல் முகங்­க­ளையும் 15 நாவல்கள், பல சிறு­க­தைத்­தொகுதி, கட்­டுரை நூல்கள் மற்றும் படைப்­புக்கள் மூலம் வெளிக்­கொ­ணர்ந்தவர்.

நாடின் கார்டிமர்
நாடின் கார்டிமர் (2010 இல்)
நாடின் கார்டிமர் (2010 இல்)
பிறப்பு(1923-11-20)20 நவம்பர் 1923
ஸ்பிரிங்ஸ், டிரான்ஸ்வால் மாகாணம், தென்னாப்பிரிக்கா
இறப்பு13 சூலை 2014(2014-07-13) (அகவை 90)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
தொழில்எழுத்தாளர்
மொழிஆங்கிலம்
தேசியம்தென்னாப்பிரிக்கர்
காலம்தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் காலம்
வகைபுதினங்கள், நாடகங்கள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Conservationist,
Burger's Daughter,
July's People
குறிப்பிடத்தக்க விருதுகள்புக்கர் பரிசு
1974
நோபல் பரிசு (இலக்கியம்)
1991

பிறப்பு

தொகு

தென்னாப்பிரிக்காவில் ஸ்பிரிங்க்சு என்னும் ஊரில் பிறந்தார். கார்டிமரின் தாய் தந்தையர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்[1][2]. கார்டிமரின் தாயார், கருப்பின மக்கள் கல்வி பெறமுடியாமல் அல்லல் உறுவதைக் கண்டு வருந்தி கருப்பினக் குழந்தைகளுக்காக மழலைப் பள்ளியைத் தொடங்கினார்[3]. தாயைப் போல கார்டிமரும் கருப்பின மக்கள் படும் துன்பதைக் கண்டு வருந்தினார். அந்தப் பரிவும் அன்பும் அவர் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்தன. அவருடைய புதினங்களிலும் கதைகளிலும் நிறவெறியினால் ஏற்படும் கறுப்பின மக்களின் அவலங்களை விவரித்து எழுதினார்.

கல்வி

தொகு

இவர் கத்­தோ­லிக்க கன்­னியர் மட பாட­சாலை ஒன்றிலேயே கல்வி கற்றார். பின்னர் விற்­வாட்­டர்ஸ்ரான்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஒரு­வ­ருட காலம் படித்தார். ஆனாலும் இவர் அங்கு தனது பட்ட படிப்பை பூர்த்தி செய்­ய­வில்லை.

படைப்புகள்

தொகு

இளம் அகவையிலேயே எழுதத் தொடங்கினார். இவ­ரது இரு­தயம் பல­வீ­ன­மாக இருந்­தது எனக்­கா­ரணம் காட்டி இவரது தாயார் இவரை பெரும்­பாலும் வெளியில் செல்­லாத­வாறு வீட்­டி­லேயே தங்­க­வைத்தார். தனி­யாக வீட்­டுக்குள் அடைபட்டு கிடந்த நடின் கோர்­டிமர் கதைகள் எழுத ஆரம்­பித்தார். இவர் தனது 15 வது வய­தி­ல், 1937 இல் சிறுகதை எழுத ஆரம்பித்தார். 16 வது வய­தி­ல் வாழ்ந்­தோ­ருக்கான இவரது படைப்பு பிரசுரமானது. கார்டிமரின் முதல் கதை அவருடைய 15 ஆம் அகவையில் வெளி வந்தது[4]. 24 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் புதினங்கள் மட்டும் 15 ஆகும். மூன்று புத்தகங்கள் நிறவெறி அரசினால் தடை செய்யப்பட்டன. இவருடைய படைப்புகள் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முனைவர் பட்டங்கள் 15 க்கும் மேல் இவருக்கு வழங்கப்பட்டன. இவரது கதைகள் பெரும்­பாலும் உள்ளூர் தென்­னா­பி­ரிக்க சஞ்­சி­கை­களில் பிர­சு­ர­மா­கின. இச்­சி­று­க­தை­களில் பல தொகுக்­கப்­பட்டு "நேருக்கு நேர்" (Face To Face) என்னும் பெயரில் 1947 இல் பிர­சு­ரிக்­கப்­பட்­டது. 1951 இல் நியூயோக்கர் பத்­தி­ரிகை இவர் எழு­திய ஏ வாட்சர் ஒவ் த டெட் என்ற கதையை ஏற்றுப் பிர­சு­ரித்­தது. இதன் மூலம் இவர் பர­வ­லாக பொது­மக்­களால் அறி­யப்­பட்ட ஒரு எழுத்­தா­ளரானார். இவரின் முத­லா­வது நாவலான தி லையிங் டேயிஸ் 1953ஆம் ஆண்டு நூலாகப் பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

வாழ்க்கை

தொகு

இவர் 1949 இல் ஜெரால்ட் காவ்றன் என்ற பல் வைத்­தி­யரை திருமணம் ­பு­ரிந்தார். இத்­தி­ரு­ம­ணத்தின் மூலம் 1950 இல் இவரது மகள் ஒறியன் பிறந்தாள் (1950). மூன்று வரு­டத்தின் பின் இவரது மணவாழ்வு முறிந்து விட்டது. 1954 இல் மீண்டும் இவர் மிகவும் மதிப்­புப்­பெற்ற ஓவிய வியா­பா­ரியான றீன்ஹோல்ட் கஸ்ஸிறர் என்­ப­வரைத் திரு­மணம் புரிந்தார். இம்­மண வாழ்க்கை றீன்ஹோல்ட் கஸ்ஸிறர் 2001 இல் நோயுற்று இறக்­கும்­வரை நீடித்­தது. இத்­தி­ரு­ம­ணத்தின் மூலம் 1955 இல் இவரது மகன் ஹூகோ பிறந்தான். ஹூகோ நியூ­யோர்க்கில் திரைப்­படத் தயா­ரிப்­பா­ள­ராக உள்ளார்.

பிற ஈடுபாடுகள்

தொகு

எழுத்து உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுத்தார். எச் ஐ வி, எயிட்சு போன்ற நோய்களை ஒழிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒரு தனி நாடோ, சமுதாயமோ, கண்டமோ தனித்த ஒரு மனிதப் பண்பாட்டைப் பிற நாடுகளுக்குப் போதிப்பதும் பரப்புவதும் கூடாது என்னும் கருத்தை வலியுறுத்தினார். கார்டிமர் தனிமையை விரும்புபவர். எளிதில் நட்புக் கொள்ள மாட்டார். பல ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற நெல்சன் மண்டேலாவை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

ஆவணப்படங்கள்

தொகு

நடின் கோர்­டிமர் தனது மக­னுடன் இணைந்து இரண்டு ஆவ­ணப்­ப­டங்­களைத் தயா­ரித்­தி­ருக்­கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ettin, Andrew Vogel (1993). Betrayals of the Body Politic: The Literary Commitments of Nadine Gordimer. Charlottesville: University Press of Virginia. pp. 29, 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8139-1430-5. although she had always referred to her father as Lithuanian, in recent years she has noted that his parents lived and worked in Riga, and now she identifies him as Latvian.
  2. Newman, Judie, ed. (2003). Nadine Gordimer's 'Burger's daughter': A Casebook. New York: Oxford University Press. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514717-9. She believed for many years that he was Lithuanian (like many South African Jewish immigrants) and only discovered later in life that he was Latvian.
  3. Wästberg, Per (26 April 2001). "Nadine Gordimer and the South African Experience". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 16 August 2010.
  4. Nadine Gordimer, Guardian Unlimited (last visited 25 January 2007).

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடின்_கார்டிமர்&oldid=3455982" இலிருந்து மீள்விக்கப்பட்டது