நட்வர்லால்
நட்வர்லால் (Natwarlal) (பிறப்பு மிதிலேசு குமார் சிறீவஸ்தவா; 1912 — 25 சூலை 2009) இந்தியாவில் பிறந்த ஒரு மோசடிப் பேர்வழி ஆவார். இவர் பல உயர் வகைக் குற்றங்கள் மற்றும் சிறையிலிருந்து தப்பியோடுதல் போன்ற நடவடிக்கைகளுக்காகவும், தாஜ் மகால், செங்கோட்டை, குடியரசுத் தலைவர் இல்லம், மற்றும் இந்தியப் பாராளுமன்றக் கட்டிடம் ஆகியவற்றை மோசடியாக மீண்டும் மீண்டும் விற்றது தொடர்பான குற்றச் செயல்பாடுகளால் நன்கு அறியப்பட்டவர் ஆவார். [1][2][3]
நட்வர்லால் | |
---|---|
பிறப்பு | மிதிலேசு குமார் சிறீவத்சவா 1912 பாக்ரா, சீவான் மாவட்டம், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
காணாமல்போனது | 24 சூன் 1996 புது தில்லி தொடருந்து நிலையம், புது தில்லி, தில்லி, இந்தியா |
இறப்பு | 25 சூலை 2009 | (அகவை 97)
நினைவகங்கள் | பாங்ராவில் ஒரு இசிலை |
தேசியம் | இந்தியர் |
பணி | மோசடிப் பேர்வழி |
செயற்பாட்டுக் காலம் | 1937–1996 |
தொடக்க கால வாழ்க்கை
தொகுநட்வர்லால் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சீவான் மாவட்டத்தில் உள்ள பாங்ரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மிதிலேசு குமார் சிறிவசுத்தவா ஆகும். இவர் தன்னுடன் பிறந்த சகோதரர்களில் மூத்தவர் ஆவார். இவரது தந்தை ஒரு இரயில்வே நிலைய அதிகாரி ஆவார்.[4]
நட்வர்லால் ஏமாற்று நடவடிக்கைகளில் தனக்குள்ள திறமையை தனது பக்கத்து வீட்டுக்காரர் வங்கி வரைவோலைகளை வங்கியில் வைப்பு செய்யும் பொருட்டு அனுப்பிய போது அறிந்து கொண்டார். அப்போது இவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் கையொப்பத்தைத் தன்னால் எளிதி்ல் போலியாகச் செய்ய முடியும் என்று உணர்ந்தார். தனது பக்கத்து வீட்டுக்காரர் கணக்கிலிருந்து ஆயிரம் ரூபாயை அவர் அறியாமலேயே வங்கியிலிருந்து எடுத்தார். கொல்கத்தா பறந்து சென்ற நட்வர்லால் தன்னை இளங்கலை வணிகவியல் பட்டதாரியாக பதிவு செய்து கொண்டு ஒரு பங்கு வர்த்தக இடைத் தரகரிடம் பணியாற்றத் தொடங்கினார். இவர் துணி வியாபாரம் ஒன்றைத் தொடங்க முயற்சி செய்தார். பின்னர் அதில் தோல்வியடைந்தார்.[4]
பாங்ராவில் உள்ள அவரது வீடு பிரித்தானியர்களால் இடிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அந்த இடம் இன்னும் அவரது குடும்பத்தினர் வசமாகவே உள்ளதெனவும் அறியப்படுகிறது.[1]
தொழில் வாழ்க்கை
தொகுநட்வர்லாலின் தந்தை இரயில்வே நிலைய அதிகாரியாக இருந்ததால், அவருக்கு இந்தியாவில் உள்ள ரயில்வே சரக்கு தொழில் பற்றிய தகவல்கள் தெரியும். அதேபோல், வணிகவியல் இளங்கலைப் பட்டமும், பங்குத் தரகராகப் பணியாற்றியதும் அவருக்கு வங்கி விதிகள் பற்றிய அறிவைக் கொடுத்தது. போலி ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களை உருவாக்கும் திறன் அவருக்கு வெற்றிகரமாக தோல்விகளைத் தவிர்க்க உதவியது.[4]
ஒன்பது டன் இரும்பை திருடியதற்காக 1937 இல் முதல் கைது செய்யப்பட்ட பிறகு, நட்வர்லால் தற்காலிகமாக தந்திரோபாயங்களை மாற்றினார். தொடர்ந்து பாலியல் தொழிலாளர்கள் இடத்திற்குச் சென்று, கெட்டுப்போன மதுவைக் கொடுத்து, நகை, பணத்தைத் திருடி, தப்பிச் செல்வதாக காவலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், நட்வர்லால் விரைவில் இந்த தந்திரோபாயத்தை மிகவும் ஆபத்தானதாகக் கருதினார், மேலும் அவர் மீண்டும் நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுத் தொழிலுக்குச் சென்றார்.[4]
நட்வர்லால் நூற்றுக்கணக்கான கடை உரிமையாளர்கள், நகைக்கடைக்காரர்கள், வங்கியாளர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஐம்பதிற்கும் மேற்பட்ட மாறுவேடங்கள் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுப்பெயர்களைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான பணத்தை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. 1950 களில் இரயில் சரக்கு மற்றும் அரிசி மூட்டைகளை உள்ளடக்கிய ஒரு ஊழலில் 6.5 லட்சம் ரூபாயை பஞ்சாப் தேசிய வங்கியிலிருந்து மோசடி செய்த ஒரு நிகழ்வு போன்ற புதிய யோசனைகளை அவர் அடிக்கடி மக்களை ஏமாற்றப் பயன்படுத்தினார்.[4] பிரபல நபர்களின் கையெழுத்தைப் போலியாக போடுவதிலும் வல்லவராக இருந்தார்.[1][2] அவர் டாடாக்கள், பிர்லாக்கள் மற்றும் திருபாய் அம்பானி உள்ளிட்ட பல தொழில் அதிபர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. நட்வர்லால் பாராளுமன்ற கட்டிடத்தை வெளிநாட்டவருக்கு விற்றார் என்று ஒரு கதை கூறுகிறது; அவ்வாறு பாராளுமன்றத்தை வாங்கியதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.[5]அவர் சில சமயங்களில் சமூக சேவகர்களாகவோ அல்லது தேவையுள்ளவர்களாகவோ காட்டிக்கொண்டார், வேறு சில நேரங்களில் வணிக மேலாளர்களாகவும் விற்பன அதிகாரிகளாகவும் காட்டிக்கொள்வார்.[6] அவர் தன்னிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலி காசோலைகள் மற்றும் போலி கேட்பு வரைவோலைகள் மூலம் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக ஏமாற்றியுள்ளார்.[4]
இறப்பு
தொகு2009 ஆம் ஆண்டில் நட்வர்லாலின் வழக்கறிஞர் 25 சூலை 2009 -இல் இறந்து விட்டதால் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள நூற்றுக்கும் எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யக் கோரினார். இருப்பினும், நட்வர்லாலின் சகோதரர் இறுதியாக இராஞ்சியிலிருந்து தப்பித்த 1996 ஆம் ஆண்டிலேயே தான் அவரின் ஈமச்சடங்குகளை 1996 ஆம் ஆண்டிலேயே செய்து விட்டதாகத் தெரிவிக்கிறார். இதன் காரணமாக, நட்வர்லால் இறந்த சரியான நாள் அறியப்படாமலேயே உள்ளது.[2]
இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒரு மகள் இருந்தார்[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Nuts about Natwarlal". The Times of India. 23 April 2011 இம் மூலத்தில் இருந்து 16 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161116072947/http://www.timescrest.com/opinion/nuts-about-natwarlal-5243.
- ↑ 2.0 2.1 2.2 "Natwarlal leaves 'em guessing even in death". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 29 July 2009. http://www.hindustantimes.com/india/natwarlal-leaves-em-guessing-even-in-death/story-mYkqbv8grOOw0oFEsIryrJ.html.
- ↑ Applied Psychology: India Specific and Cross-cultural Perspectives By Smarak Swain. p. 22.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Chengappa, Raj (30 November 1987). "The life and crimes of a master criminal Natwarlal" (in en). India Today. https://www.indiatoday.in/magazine/special-report/story/19871130-the-life-and-crimes-of-a-master-criminal-natwarlal-799579-1987-11-30.
- ↑ "10 Things You Need To Know About The Man Who Sold The Taj Mahal. Thrice!!!". IndiaTimes (in Indian English). 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
- ↑ Chitralekha, Feb 2007