நந்தன், பௌத்தம்


நந்தன், பௌத்த பிக்கு (Nanda (Buddhist), கௌதம புத்தரின் ஒன்று விட்ட சகோதரனும், சுத்தோதனர் - மகாபிரஜாபதி கௌதமி இணையரின் மகனும் ஆவார். இவரது சகோதரி இளவரசி நந்தா ஆவார்.

மகா தேரர் நந்தன்
Nanda.JPG
நந்தன் தன் மனைவியைத் துறந்து புத்தரின் சீடராதல்
சமயம்பௌத்தம்
தர்மா பெயர்(கள்)நந்தா
சுய தரவுகள்
தேசியம்நேபாளம்
பிறப்புஇளவரசன் நந்தன்
கபிலவஸ்து, நேபாளம்
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்

புத்தர் ஞானம் அடைந்த பின் மகாபிரஜாபதி கௌதமி மற்றும் பிக்குணி நந்தாவும் புத்தரின் சீடர்களாகிய பின்னர் இவரும் புத்தரின் சீடராகி பின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.

புத்தர் ஞானம் அடைந்து ஏழ ஆண்டுகள் கழித்து, தான் பிறந்த கபிலவஸ்து அரண்மனைக்குச் சென்றார். மூன்றாம் நாள் புத்தர் அரண்மனையை விட்டு திரும்புகையில், அப்போது நந்தாவிற்கு ஜனபத நாட்டு இளவரசி கல்யாணியுடன் திருமணம் நடந்து சில மாதங்களே ஆகியிருந்த நிலையில், நந்தா புத்தரை தொடர்ந்து சென்று புத்தரிடம் துறவற தீட்சை பெற்று சீடரானர். [1]


மேற்கோள்கள்தொகு

  1. GREAT MALE DISCIPLES - Part B / 15. Nanda by Radhika Abeysekera
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தன்,_பௌத்தம்&oldid=3294326" இருந்து மீள்விக்கப்பட்டது