சுத்தோதனர்
சுத்தோதனர் (Suddhodana) (சமசுகிருதம்: (Śuddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னராவார். இவரது பட்டத்தரசிகள் மாயா மற்றும் மகாபிரஜாபதி கௌதமி ஆவர். மாயா மூலமாக சித்தார்த்தனை பெற்றார். சித்தார்த்தன் பிறந்த சில நாட்களில் மாயா இறந்துவிட, கௌதமியை மணந்து நந்தன் ஆண் குழந்தையும், நந்தா என்ற பெண் குழந்தையும் பெற்றார். [1]
மன்னர் சுத்தோதனர் | |
---|---|
அரசவையில் சுத்தோதனர் | |
பிறப்பு | கபிலவஸ்து நோபாளம் |
இறப்பு | கபிலவஸ்து, நேபாளம் |
தேசியம் | நேபாளி |
முன்னிருந்தவர் | சிஹாஹனு |
சமயம் | வேதகால மதம், பௌத்தம் |
வாழ்க்கைத் துணை | மாயா மகாபிரஜாபதி கௌதமி |
தன் மகன் சித்தார்த்தன் பின்னாட்களில் துறவியாகி விடுவார் என சோதிடர் கூற, சித்தார்த்தனை அரண்மனையை விட்டு அகலாதிருக்க ஏற்பாடுகள் செய்தார் சுத்தோதனர். பின்னர் சித்தார்த்தனுக்கு யசோதரையுடன் திருமணமாகி ராகுலனை ஈன்ற பின்னர், சித்தார்த்தன் அரண்மனையைத் துறந்து, ஞானம் வேண்டி துறவறம் மேற்கொண்டார். ஞானம அடைந்த சித்தார்த்தன் ஏழு ஆண்டுகள் கழித்து கபிலவஸ்து அரண்மனை வந்த சித்தார்த்தனை மன்னர் சுத்தோதனர் வரவேற்று சாக்கிய நாட்டின் மன்னராக பட்டம் ஏற்க வேண்டினார். சுத்தோதனரின் கோரிக்கையை ஏற்க மறுத்து புத்தர் அரண்மனையை விட்டுச் சென்றுவிட்டார். பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து, சுத்தோதனர் மரணப் படுக்கையில் இருக்கும் போது, புத்தர் மீண்டும் கபிலவஸ்துவிற்கு வந்து, சுத்தோதனருக்கு ஞானத்தை உபதேசித்தார்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Immediate family of Shuddhodana பரணிடப்பட்டது 2009-07-10 at the வந்தவழி இயந்திரம்
- [archive.org/web/20070209234644/http://www.vri.dhamma.org/publications/webversion/english/sakyakol.html பரணிடப்பட்டது 2007-02-09 at the வந்தவழி இயந்திரம் Why was the Sakyan Republic Destroyed? by S. N. Goenka] (The following is a translation and adaptation of a Nepali article by S. N. Goenka published by the Vipassana Research Institute in December 2003.)