நந்தினி சங்கர்

இந்திய வயலின் கலைஞர்

நந்தினி சங்கர் (Nandini Shankar) இவர் ஓர் இந்திய வயலின் கலைஞராவார். இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் இணைவை நிகழ்த்துகிறார். இவர் முனைவர் சங்கீதா சங்கர் என்பவரின் மகளாவார். [1] மேலும், புகழ்பெற்ற பத்ம பூசண் முனைவர் என். ராஜம் என்பாரது பேத்தியாவார். [2] இவர் தற்போது மும்பையில் வசிக்கிறார்.

நந்தினி சங்கர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு07/01/1993
மும்பை, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, இணைவு இசை
தொழில்(கள்)வயலின் கலைஞர்
இசைக்கருவி(கள்)வயலின்
இணையதளம்www.nandinishankar.com

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர் தனது மூன்று வயதில் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். மேலும் 8 வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியினை பொதுவெளியில் நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். இவர் தனது தனது முதல் முழுமையான நிகழ்ச்சியினை தனது 13 வயதில் வழங்கினார். [3] இவர் "கயாக்கி ஆங்" என்ற வயலின் வாசிப்பவராவார் .

கல்வி தொகு

நந்தினி சங்கர் கல்வியில் சிறந்து விளங்கினார். இவர் வர்த்தகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் தகுதிவாய்ந்த இந்திய பட்டய கணக்காளர் ஆவார். இசையில் முதுகலையையும் முடித்துள்ளார்.

தொழில் தொகு

இவர் 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மிட் டவுன் மன்ஹாட்டனில் மதிப்புமிக்க கார்னகி அரங்கத்தில் [4] ஒரு இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்கா, [4] கனடா, நியூசிலாந்து, [5] இங்கிலாந்து, [6] பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரகம், [7] வங்காளதேசம், [8] மலேசியா, இலங்கை, இந்தோனேசியா [9] மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனது நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். [10] யூரோபாலியா, [11] சவாய் காந்தர்வா பீம்சென் விழா, [12] [13] [14] யக்சா (திருவிழா), [15] சப்தக் இசை விழா, [16] பஞ்சம் நிஷாத்துக்கான ஆரோகி, [17] ஐடிசி நிறுவனத்தின் சங்கீத ஆராய்ச்சி அமைப்பின் சங்கீத சம்மேளன்ம், [18] மேரு, நெதர்லாந்து [19] நடிகை, ஹேம மாலினி வழங்கிய ஜெய ஸ்மிருதி, [20] நுண்கலைகள் கோயில், [21] பில்வரா சுர் சங்கம், [22] இந்திய நடிப்புக் கலைக்கான சங்கம், [23] டி.என். கிருஷ்ணன் அறக்கட்டளை, [24] தில்லி சர்வதேச கலை விழா, [25] வங்காள இசை அறக்கட்டளை, டோவர் லேன் இசை மாநாடு [26] போன்ற பல்வேறு மதிப்புமிக்க விழாக்களில் இவர் தனது வயலின் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் ''ஐடியா ஜல்சா'' என்ற தொலைக்காட்சியிலும் இவரது இசை ஒளிபரப்பப்பட்டது.. [27] இவர் தனது சகோதரி இராகினி சங்கருடன் ஒரு காணொளிக் காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். [28]

இவர் கௌசிகி சக்ரவர்த்தியால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அனைத்து பெண் இந்திய பாரம்பரிய இசைக்குழுவான சாகியின் ஒரு பகுதியாவார். [29] உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகைகளை இணைக்கும் ஒரு இணைவு இசைக்குழுவான 'இன்ஸ்ட்ரிங்ஸ்' இன் ஒரு பகுதியாவார்.

விருதுகள் & மரியாதை தொகு

2007இல் சங்கீதா பண்டிட் லால்மணி மிஸ்ரா கிஷோர் ஆதிதா விருதினைப் பெற்றுள்ளார். [30] இவருக்கு, திரைப்பட நடிகையும் நடனக் கலைஞருமான ஹேமா மாலினி, 'ஜெய ஸ்மிருதி' என்றப் பட்டத்தை 2012இல் வழங்கினார் 2018இல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அவர்கள் " ஜஷ்ன்-இ-யங்கிஸ்தான்" [31] என்ற பட்டத்தை வழங்கினார். இது நாட்டின் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தியைக் கொண்டாடும் மரியாதையாகும்.

விமர்சனங்கள் தொகு

"நந்தினி, தனது உள்ளுணர்வு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மிகப்பெரிய செயதிறனை நிகழ்த்திக் காட்டினார்." [18] இளம் நந்தினி சங்கருக்கு அவரது திறமையைக் காட்ட ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மேலும் அவர் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். பார்வையாளர்களை தனது இசையால் ஈர்க்கக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தினார்." என்று இவரது திறன் பாராட்டப்பட்டது.[32]

குறிப்புகள் தொகு

  1. Sangeeta Shankar - The Legacy Continues, archived from the original on 2015-04-11, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  2. N. Rajam
  3. Nandini Shankar's Official Website
  4. 4.0 4.1 Carnegie Hall, archived from the original on 2015-06-04
  5. Young Violin Master to perform in New Zealand next month
  6. Indika: Evening Raga - Ragini & Nandini Shankar, archived from the original on 2020-09-20, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  7. Hindustani Violin Concert
  8. Violins charm Bengal classical fest
  9. Sakhi: Bold and beautiful
  10. Nandini Shankar
  11. Europalia, archived from the original on 2018-10-31, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  12. DNA Syndication, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  13. DNA India - Pune's Sawai Gandharva Mahotsav ends on a soulful note
  14. Mid-Day Archives: Performance by 3 generations of family steals show on final day
  15. Yaksha (festival)
  16. Saptak Annual Festival
  17. Pancham Nishad - Past Events, archived from the original on 2014-06-23, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  18. 18.0 18.1 ITC - Sangeet Sammelan, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  19. MERU Concerts - Three Generations (PDF), archived from the original (PDF) on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  20. Solaris Event Archives, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  21. Thyagaraja Tansen Music Festival, The Temple of Fine Arts, Malaysia
  22. Bhilwara Group presents music festival
  23. Gallery, The Association of Performing Arts of India, archived from the original on 2018-06-09, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  24. Parampara, T. N. Krishnan Foundation, archived from the original on 2016-03-03, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  25. Delhi International Arts Festival
  26. Dover Lane Music Conference
  27. Youtube, Payoji Maine - Bhajan (Dr. N. Rajam, Sangeeta Shankar, Ragini Shankar & Nandini Shankar)
  28. Legendary Legacy, Record Label, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  29. First All Women's Classical Band, Sakhi
  30. Award Recipients - O. P. Chourasiya, archived from the original on 2015-02-17, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
  31. Jashn-E-Youngistan 2018 honoured violinsts Ragini Shankar and Nandini Shankar
  32. The Hindu - New Delhi
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_சங்கர்&oldid=3539852" இலிருந்து மீள்விக்கப்பட்டது