நன்குடி வேளாளர்

வெள்ளாளர் சமூகத்தில் ஒரு உட்பிரிவு

நன்குடி வேளாளர் (Nankudi Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு உட்பிரிவாகும். இவர்கள் பாண்டியர்களுக்கு பட்டம் சூட்டும் பரம்பரை உரிமை கொண்டவர்கள். தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்ற சாதியினர் ஆவார். இவர்கள் இங்கு சிவகளைப் பிள்ளைமார் என்றும் நன்குடி வெள்ளாளர் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] இவர்கள் மேல்செல்வனுரை தாய் பூமிஅக கொண்டவர்கள் சிவகொத்திரம் உடையவர்கள் இவர்கள் வரலாறு

நன்குடி வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
சைவ சமயம்

பிற பெயர்கள்

தொகு
  • செளுகை பிள்ளைமார்
  • செளுகை வேளாளர்
  • நற்குடி வேளாளர்
  • நன்குடி வேளாளர்
  • கோட்டைப் பிள்ளைமார்
  • கோட்டை வேளாளர்
  • சிவகளைப் பிள்ளைமார்
  • சிவகளை வேளாளர்

கிளைகள்

தொகு

இவர்கள் பெண் வழிமுறையை கடைப்பிடிக்கிறார்கள். இவர்களின் பெண் வழி முறை எட்டு கிளைகளாக இருப்பதாக நற்குடி வேளிர் வரலாறு ஆசிரியர் தி. நாராயண பிள்ளை குறிப்பிடுகிறார்.[சான்று தேவை]

  • கேள் அரன் கிளை
  • தென்னவன் கிளை
  • திரு அம்பலவன் கிளை
  • திருமால் கிளை
  • கன்றெறிந்தான் கிளை
  • நரசிம்மன் கிளை
  • காங்கேயன் கிளை
  • காளியார் கிளை

இந்த கிளைகளுக்கு உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த உட்பிரிவுகள் "பிதிர்' என்றும் "பிருது" என்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது இந்த இனத்தில் இல்லாத கன்றெறிந்தான் கிளையை விட்டு விட்டால் இருப்பது ஏழு கிளைகள் உள்ளன.

இந்த ஏழு கிளைகளில் கீழே சொல்லப்பட்ட மூன்று கிளைகளுக்கு உட்பிரிவுகள் கிடையாது, காரணம் இந்தக் கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் வாரிசுதான் உள்ளன.

  • திருமால் கிளை
  • திரு அம்பலவன் கிளை
  • காங்கேயன் கிளை

மற்ற நான்கு கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர். எனவே இந்த நான்கு கிளைகளுக்கும் நான்கு உட்பிரிவுகள் உண்டு.

  • கேரளன் கிளை
  • தென்னவன் கிளை
  • நரசிம்மன் கிளை
  • காளியார் கிளை

எனவே மொத்தம் 16 உட்பிரிவுகளுடன், கிளைகள் உள்ளன.


காலங்கள் கடந்த பின் இந்த ஏழு கிளைகளின் உச்சரிப்பும் மாறியது தற்போது இந்த ஏழு கிளைகளும்

  • கேலரன் கிளை (கேள் அரன் கிளை)
  • தென்னங்கிளை (தென்னவன் கிளை)
  • திருகூம்பு கிளை (திரு அம்பலவன் கிளை)
  • திருமாங்கிளை (திருமால் கிளை)
  • நரையங்கிளை (நரசிம்மன் கிளை)
  • காங்கேயன் கிளை (காங்கேயன் கிளை)
  • காலியாகிளை (காளியார் கிளை)

என்று உச்சரிக்க பட்டு வருகின்றன.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்குடி_வேளாளர்&oldid=4057088" இலிருந்து மீள்விக்கப்பட்டது