திருநீற்று வேளாளர்

திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர். இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் 10 ஊர்களில் மட்டுமே தற்பொழுது வாழ்கின்றனர்.

இவர்கள் வாழும் பகுதி மிழலை நாடு (மிழலை கூற்றம் அல்லது மிழலை கோட்டம்) என அழைக்கபடுகிறது.

பட்டங்கள்

தொகு

போன்ற பட்டங்கள் உள்ளன. ஆனால் தற்பொழுது பிள்ளை பட்டம் மட்டுமே நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழக சாதிப்பட்டியலில்

தொகு

தமிழக சாதி பட்டியலான முற்படுத்தப்பட்ட பிரிவு (Forward Caste) அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவு (Backward Class) அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு (Most Backward Class) என எதிலும் திருநீற்று வெள்ளாளர் என்ற சாதியை தமிழக அரசு சேர்க்காதது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும். இன்று வரை திருநீற்று வெள்ளாளர்கள் தங்களை தமிழக அரசின் சாதி பட்டியலில் ஏதாவது ஒரு பிரிவில் தங்கள் சாதியையும் இணைக்கக்கோரி அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்து வருகின்றனர்.

திருநீற்று வெள்ளாளர்கள் வாழும் ஊர்கள்

தொகு

புதுக்கோட்டை மாவட்டம்

தொகு
  • முத்துக்குடா
  • இராஜகுமாரம்பாள் சத்திரம் (மீமிசல்)
  • இரா.புதூர் என்ற இரா.புதுப்பட்டிணம்

தஞ்சாவூர் மாவட்டம்

தொகு
  • வல்லவன்பட்டிணம்
  • சோமநாதம்பட்டிணம்
  • அதிராம் பட்டிணம்

இராமநாதபுரம் மாவட்டம்

தொகு
  • தீர்த்தாண்டதானம்
  • ஓரியூர்
  • பெருவாக்கோட்டை
  • அடுத்தக்குடி

உணவு மற்றும் திருமண முறை

தொகு

உணவு முறை

தொகு

திருநீற்று வெள்ளாளர்கள் சுத்த சைவ உணவையே உண்கின்றனர், குல தெய்வங்களுக்கு கூட சைவ படையல் மட்டுமே படைக்கின்றனர்.

திருமண முறை

தொகு

இவர்கள் கோத்திரம் என்பதை கிளை என்ற முறையில் பயன்படுத்தி வருகின்றனர் தற்பொழுதும். கிளை பார்த்து தான் திருமணம் புரிகின்றனர். பங்காளி கிளைகளுக்குள் திருமணம் புரிவதில்லை.

தாலியின் பெயர்

தொகு

திருநீற்று வெள்ளாளர்கள் பயன்படுத்தும் தாலியின் பெயர் பாப்பாரத்தாலி ஆகும்.

சமயம்

தொகு

இவர்கள் இந்து மதத்தில் ஒரு பிரிவான சைவ சமயத்தை மட்டுமே பின்பற்றுகின்றனர். இவர்கள் சைவ மடங்களுக்கு சென்று தீட்சை பெறுகின்றனர். இவர்கள் தீவிர சைவர்கள் ஆவர்.

திருநீற்று வெள்ளாளர்களின் கோத்திரங்கள் (கிளைப்பெயர்கள்)

தொகு
  • தோட்டாரம் (தொண்டைமான்) கிளை
  • வழிகொண்டான் கிளை
  • வளம்பெத்தான் கிளை
  • வாடாபுரி கிளை
  • நந்தங்கிளை
  • காக்கா கிளை
  • பொறிச்சான்கிளை
  • ஆணைக்காரன் கிளை

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநீற்று_வேளாளர்&oldid=3601303" இலிருந்து மீள்விக்கப்பட்டது