ஆரிய வேளாளர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர். இவர்கள் பழனியில் மட்டுமே தற்போது வாழ்கின்றார்கள். இவர்கள் பிள்ளை என்ற பட்டத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
பெயர்க்காரணம்
தொகுஆரிய என்றால் உயர்ந்த என்ற பொருள் உண்டு. பழனி மலையில் (வையாபுரி நாட்டில்) உயர்ந்த இடத்தில் வாழ்பவர்கள் என்ற பொருளில் ஆரிய வேளாளர் என அழைக்கப்படுகிறார்கள்.
மக்கள் தொகை
தொகுஇந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாகுமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர். தற்போது பழனியில் மட்டுமே வாழ்கிறார்கள். எனவே இவர்களது மக்கள் தொகையும் குறைவே ஆகும்.
பணிகள்
தொகுஇவர்கள் முன்னர் காலத்தில் அரசர்களுக்கு மட்டும் சித்த வைத்தியம் பார்த்ததாக கூறுகின்றார்கள். மேலும் பரம்பரை சித்தவைத்திய கலைக்கான பழங்கால குறிப்புகளை தற்பொழுதும் கூட சிலர் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.
இராஜபாளையத்தை ஆண்ட சத்திரிய ராஜீக்களின் அரசில் கணக்குப் பிள்ளையாகவும், நாட்டாமையாகவும் சாத்தூர், இராஜபாளையம், விருதுநகர் பகுதிகளில் இருந்துள்ளனர்.
தமிழக சாதிப்பட்டியலில்
தொகுஆரிய வெள்ளாளர்கள் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்ட பிரிவில் (FC) வரிசை எண் 705 இல் ஆரியர் என்ற பெயரில் வருகின்றனர். இவர்கள் தங்களை ஆரிய வெள்ளாளர் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.[சான்று தேவை]
உணவுமுறை
தொகுஆரிய வெள்ளாளர்கள் சைவ உணவுமுறை பழக்கத்தையே கொண்டுள்ளனர். தங்களது குலதெய்வம், வீட்டுத்தெய்வம் மற்றும் தாங்கள் கட்டிய கோவில் தெய்வங்களுக்கு சைவப்படையல் மட்டுமே படைக்கின்றனர்.
திருமணமுறை
தொகுஆரிய வெள்ளாளர்கள் தங்களது திருமண முறையை கொங்கு வெள்ளாளர்கள், பாண்டிய வெள்ளாளர்கள் போல கூட்டமுறையை பயன்படுத்தி திருமணம் பேசி முடித்து திருமணம் புரிகின்றனர். (கூட்டம்-கோத்திரம்)
ஒரே கூட்டத்தை சார்ந்த ஆரிய வெள்ளாளர்கள் பங்காளிகள் ஆவர். இவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது இல்லை. வேறு வேறு கூட்டத்தை சார்ந்த ஆரிய வெள்ளாளர்கள் மட்டுமே திருமணம் புரிகின்றனர்.
ஆரிய வேளாளர்களின் கூட்டப்பெயர்கள்
தொகு- வண்டிக்காரன் கூட்டம்
- கணக்குபிள்ளை கூட்டம்
- சப்பாணி கூட்டம்
- பண்ணைக்கார கூட்டம்
- ஓவள கவுண்டன் கூட்டம்
- பண்டுத்தாரர் கூட்டம்
மேலே உள்ள ஆறு (6) கூட்டங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
மேலும் பார்க்க
தொகுஇலங்கை (ஈழம்) வெள்ளாளர்