நமிக் பனிப்பாறை

நமிக் பனிப்பாறை (Namik Glacier) என்பது இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தின் பிதெளரகட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிப்பாறை 3,600 m (11,800 அடி) உயரத்தில் இமயமலையில் குமாவும் கோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்த பனிப்பாறை இராம்கங்கா நதியின் மூலமாகும்.[2] இந்த பனிப்பாறை நந்தா தேவி (7,848 மீட்டர்கள் (25,748 அடி), நந்தா கோட் (6,861 மீட்டர்கள் (22,510 அடி), மற்றும் திரிசூலி (7,120 மீட்டர்கள் (23,360 அடி) சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பனிப்பாறை பண்டைய இந்தோ-திபெத் வர்த்தக பாதையில் செல்கிறது. இது லிட்டியிலிருந்து 23 கிலோ மீட்டர் மலையேற்றத் தொலைவில் கோஜினா மற்றும் நமிக் கிராமங்களில் அமைந்துள்ளது.[3] இந்த பனிப்பாறையைச் சுற்றி ஏராளமான நீர்வீழ்ச்சிகள் மற்றும் கந்தக நீரூற்றுகள் உள்ளன. இந்தப் பனிப்பாறையினை காகினாவிலிருந்து மலையேற்றம் மூலம் அடையலாம். இந்தப் பனிப்பாறையினை கோஜினாவிலிருந்து சாமா லிட்டி சாலை வழியாகவும் அடையலாம். இது பாகேசுவரிலிருந்து 63 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பேகசுவர் அல்லது காபோகோட்லிருந்து வாடகைக்கு ஜீப்புகள் கிடைக்கின்றன.[3] 'நமிக்' என்றால் உப்பு நீர் நீரூற்றுகள் இருக்கும் இடம் என்பது பொருளாகும்.

நாமிக் பனிப்பாறை
Map showing the location of நாமிக் பனிப்பாறை
Map showing the location of நாமிக் பனிப்பாறை
நாமிக் பனிப்பாறை
இந்தியாவில் அமைவிடம்
வகைமலைப் பனிப்பாறை
அமைவிடம்குமாவுன் இமயமலை, உத்தராகண்டம், இந்தியா
ஆள்கூறுகள்30°13′03″N 80°07′03″E / 30.21750°N 80.11750°E / 30.21750; 80.11750
நீளம்3 km (1.9 mi)

மேற்கோள்கள் தொகு

  1. Agrawal, C. M. (1996) (in en). Man, culture, and society in the Kumaun Himalayas : General B.C. Joshi commemoration volume. Almora: Shree Almora Book Depot. பக். 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85865-29-4. 
  2. Raju, N. Janardhana (30 November 2015) (in en). Geostatistical and Geospatial Approaches for the Characterization of Natural Resources in the Environment: Challenges, Processes and Strategies. Springer. பக். 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-18663-4. https://books.google.com/books?id=jfIUCwAAQBAJ. 
  3. 3.0 3.1 Kapadia, Harish (2005) (in en). Into the untravelled Himalaya : travels, treks and climbs. New Delhi: Indus Publ. Co.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-181-8. https://books.google.com/books?id=-5l1RhMStxgC. பார்த்த நாள்: 5 March 2017. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமிக்_பனிப்பாறை&oldid=3202506" இலிருந்து மீள்விக்கப்பட்டது