நந்தா கோட்
நந்தா கோட் (Nanda Kot) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தில் அமைந்துள்ள இமயமலைத் தொடரின் மலை உச்சியாகும். இது குமாவோன் இமயமலையில் நந்தா தேவியைச் சுற்றியுள்ள சிகரங்களுக்கு வெளியே 15 கிலோமீட்டர் (9 மைல்) தொலைவில் தென்கிழக்கில் அமைந்துள்ளது. நந்தா கோட் என்ற பெயர் "நந்தாவின் கோட்டை" என்றும் பொருள்படும். மேலும், இந்து தெய்வமான பார்வதியின் புனித வடிவங்களில் ஒன்றின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. இந்த பிராந்தியத்தில் உயரமான மலைகளின் மத்தியில் தனது இருப்பிடத்தை உருவாக்கியதாக் ஒரு புராணக் கதை கூறுகிறது.
நந்தா கோட் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,861 m (22,510 அடி)[1] |
புடைப்பு | 1,592 m (5,223 அடி)[1] |
பட்டியல்கள் | Ultra |
ஆள்கூறு | 30°16′54″N 80°04′06″E / 30.28167°N 80.06833°E[1] |
புவியியல் | |
அமைவிடம் | பிதௌரகட், உத்தராகண்டம், இந்தியா |
மூலத் தொடர் | குமாவுன் இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 1936இல் யாச்சி ஹொட்டா என்ற சப்பானியரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது |
எளிய வழி | லாவன் பள்ளத்தாக்கு |
5,269 மீ (17,287 அடி) உயரத்திலுள்ள பிந்தாரி காந்தா எனப்படும் கணவாய் மூலம் நந்தா கோட் மலை இணைக்கப்பட்டுள்ளது. இந்த கணவாய் நந்தா கோட் மற்றும் சிகரத்திலிருந்து தெற்கே செல்லும் மலை முகடு ஆகியவை பிந்தார் மற்றும் கோரி கங்கா ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடையில் பிளவுகளை உருவாக்குகின்றன. தானா துரா கணவாய் இரு பக்கங்களையும் இணைக்கிறது. கஃப்னி (அல்லது கபானி), பிந்தர், லாவன் மற்றும் ஷாலாங் பனிப்பாறைகள் முறையே தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் உச்சங்களாகும். [2]
1905 ஆம் ஆண்டில் நந்தா கோட் மலையேறும் முதல் முயற்சி டி.ஜி. லாங்ஸ்டாஃப் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. அவர் லாவன் பள்ளத்தாக்கு அல்லது லாவன் பனிப்பாறை வழியாக சென்றார். யாச்சி ஹொட்டா என்ற ஜப்பானியரின் தலைமையிலான அணி 1936 ஆம் ஆண்டில் முதன் முதலில் உச்சியைத் தொட்டது.
நந்தா கோட்டின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள துணைப்பிரிவுகள் பின்வருமாறு:
- சாங்குச், 6,322 மீ (20,741 அடி)
- குச்செலா துரா, 6,294 மீ (20,650 அடி)
- நந்தபனெர் (அல்லது நந்தபனார்), 6,236 மீ (20,459 அடி)
- தாங்தால், 6,050 மீ (19,849 அடி)
- லெஸ்பா துரா (அல்லது லாஸ்பா துரா), 5,913 மீ (19,400 அடி)
- லாம்சீர், 5,662 மீ (18,576 அடி)
நந்தா தேவி / நந்தா கோட் அணுசக்தி சர்ச்சை
தொகுதிபெத்தில் சீன அணுக்கரு ஆயுதங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க நந்தா தேவி மலையுச்சியில் ஒரு கண்காணிப்பு சாதனத்தை நிறுவும் நோக்கத்துடன் 1965 ஆம் ஆண்டில் இந்திய -அமெரிக்க குழுவினரால் ஒரு இரகசிய பணி தொடங்கப்பட்டது. பணி தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே, அங்கு மின்சாரம் வழங்க வடிவமைக்கப்பட்ட தெர்மோநியூக்ளியர் ஜெனரேட்டர் ஒரு பனிப் புயலின் போது தாக்கப்பட்ட்டது. இதனால் அந்த பகுதியில் கதிரியக்க மாசு ஏற்பட்டிருக்கலாம் அச்சங்கள் எழுந்தது. இழந்த கருவியைக் கண்டுபிடித்து மீட்க 1966-1968க்கு இடையில் குறைந்தது மூன்று பயனற்ற முயற்சிகளைத் தொடர்ந்து, 1968ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சாதனம் நந்தா கோட் மீது மீண்டும் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான இந்த ரகசியத்திற்குப் பிறகு, இந்தக் கதை 1978ஆம் ஆண்டில் இந்தியச் செய்தி ஊடகங்களின் காதுகளுக்கு எட்டியது. இந்த பயணங்கள் குறித்தும், கதிரியக்கப் பொருட்களின் எச்சங்கள் நந்தா கோட் அருகே இன்றுவரை இருக்கிறதா என்றும் விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)". Peaklist.org. Retrieved 2014-05-26.
- ↑ Garhwal-Himalaya-Ost, 1:150,000 scale topographic map, prepared in 1992 by Ernst Huber for the Swiss Foundation for Alpine Research, based on maps of the இந்திய நில அளவைத் துறை.
வெளி இணைப்புகள்
தொகுNanda Kot Nuclear Controversy:[1]
- [2]
- [3] பரணிடப்பட்டது 2005-02-25 at the வந்தவழி இயந்திரம்
- [4] பரணிடப்பட்டது 2006-03-01 at the வந்தவழி இயந்திரம்
புத்தகங்கள்
தொகு- Harish Kapadia, Across Peaks and Passes in Kumaun Himalaya.
- Peter Takeda, An Eye At The Top Of The World, Thunder's Mouth Press, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56025-845-2