பாகேசுவர்

உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள ஒரு நகரம்

பாகேசுவர் (Bageshwar) என்பது இந்தியாவிலுள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் பாகேசுவர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும் நகராட்சியுமாகும். இவ்வூரில் பாகநாத் கோயில் அமைந்துள்ளது. இது தேசியத் தலைநகர் புது தில்லியிலிருந்து 470 கி.மீ தூரத்திலும், மாநிலத் தலைநகர் தேராதூனிலிருந்து 332 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. [1] நகரம் அதன் அழகிய சூழல், பனியாறுகள், ஆறுகள் கோயில்களுக்கு பெயர் பெற்றது. இது பாகேசுவர் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும் இருக்கிறது. [2]

பாகேசுவர்
நகரம்
சரயூ நதியுடன் பாகேசுவர் நகரம் 2020
பாகநாத் கோயில்
சரயு படித்துறை
சரயு ஆற்றின் மேலேயுள்ள பாலம்
சிவன் சிலை
மேலே இருந்து கடிகார திசையில்: சரயூ நதியுடன் பாகேசுவர் நகரம் 2020, சரயு படித்துறை, சிவன் சிலை, சரயு மற்றும் பாக்நாத் கோயிலுக்குச் செல்லும் பாலம்
பாகேசுவர் is located in உத்தராகண்டம்
பாகேசுவர்
பாகேசுவர்
உத்தராகண்டம் மாநிலத்தில் பாகேசுவரின் அமைவிடம்
பாகேசுவர் is located in இந்தியா
பாகேசுவர்
பாகேசுவர்
பாகேசுவர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°50′17″N 79°46′16″E / 29.838°N 79.771°E / 29.838; 79.771
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமாவுன்
மாவட்டம்பாகேசுவர்
அரசு
 • வகைநகராட்சி அமைப்பு
 • நிர்வாகம்பாகேசுவர் நகர் பாலிகா பரிசத்
பரப்பளவு
 • மொத்தம்5.50 km2 (2.12 sq mi)
ஏற்றம்
935 m (3,068 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,079
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
சமசுகிருதம்
 • உள்ளூர்குமாவுனி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
வாகனப் பதிவுஉகே-02
இணையதளம்uk.gov.in

சரயு, கோமதி ஆகிய இரு நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள [3] நகரம் அதன் கிழக்கு மற்றும் மேற்கில் பிலேசுவர் மற்றும் நிலேசுவர் மலைகளாலும், வடக்கே சூரஜ் குண்ட் மற்றும் தெற்கில் அக்னி குண்ட் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது திபெத்தியப் பேரரசுக்கும், குமாவுன் பேரரசுக்கும் இடையில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்துள்ளது. மேலும் போதியா வர்த்தகர்கள் அடிக்கடி வந்து சென்றனர். அவர்கள் திபெத்திய பொருட்கள், கம்பளி, உப்பு, வெண்காரம் ஆகியவற்றை இங்கு கொண்டு வந்து அதற்கீடாக இப்பகுதியின் தரை விரிப்புகளையும் பிற உள்ளூர் உற்பத்திகளுக்கும் ஈடாக மாற்றினர். [4] எவ்வாறாயினும், 1962ஆம் ஆண்டு நடந்த இந்திய-சீனப் போருக்குப் பிறகு வர்த்தக வழிகள் மூடப்பட்டன.

இந்த நகரம் பெரும் மத, வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நகரம் பற்றி பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சிவபெருமானுடன் தொடர்புடையது . [5] இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் உத்திராயணி கண்காட்சி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் 15,000 பேர் பார்வையிட்டுள்ளனர். இது குமாவோன் கோட்டத்தின் மிகப்பெரிய கண்காட்சியாகும். [6] இந்த கண்காட்சி சனவரி 1921இல் கூலி பேகர் இயக்கத்தின் மையமாக மாறியது. [7] நகரம் அதன் பெயரை பாகநாத் கோயிலிலிருந்து பெறுகிறது. [8] இங்கு இந்தி மற்றும் சமசுகிருதம் அதிகாரப்பூர்வ மொழிகள் என்றாலும் குமாவுனி மொழி ஏராளமான மக்களால் பேசப்படுகிறது.

வரலாறு

தொகு
 
1640ஆம் ஆண்டில் மன்னர் இலட்சுமி சந்த் என்பவரால் அமைக்கப்பட்ட பாகநாத் கோயில்

நகரத்தைப் பற்றியும், பாகநாத் கோயிலைப் பற்றியும் சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கோயிலும் அதைச் சுற்றியுள்ள நகரமும் இந்து தெய்வமான சிவனின் ஊழியரான சந்தீஷ் என்பவரால் கட்டப்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது. [9] [10] மற்றொரு இந்து புராணத்தின் படி, மார்க்கண்டேயர் இங்கு சிவனை வணங்கியதாக நம்பப்படுகிறது. [11] [12] சிவன் புலி வடிவத்தில் இங்கு வந்து மார்க்கண்டேய முனிவரை ஆசீர்வதித்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.

பாகேசுவர் வரலாற்று ரீதியாக குமாவுன் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் குமாவுனை ஆண்ட கத்யூரி அரசர்களின் தலைநகரான கார்த்திகேயபுரத்தை ஒட்டியே பாகேசுவர் அமைந்துள்ளது. [13] ஒன்றினைந்த கத்யூரி இராச்சியத்யத்தின் இறுதி மன்னனாக பீர்தேவ் என்பவன் இருந்துள்ளான். அவனுக்குப் பிறகு, 13ஆம் நூற்றாண்டில் இராச்சியம் சிதைந்து 8 வெவ்வேறு சுதேச அரசுகளாக பிரிந்தது. 1565ஆம் ஆண்டு வரை அல்மோராவின் மன்னன் பால கல்யாண் சந்த் இப்பகுதியை குமாவுனுடன் இணைக்கும் வரை பாகேசுவரின் பகுதி கத்யூரி மன்னர்களின் வம்சாவளியான பைஜ்நாத் கத்யூரியின் ஆட்சியின் கீழ் இருந்தது. [14] [15] 10ஆம் நூற்றாண்டில், சோம் சந்த் என்பவன் சந்த் வம்சத்தை நிறுவினான். அவன் கத்யூரி அரசர்களை இடம்பெயரச் செய்து, தனது மாநிலத்திற்கு குர்மஞ்சால் என்றும் பெயரிட்டு, காளி குமாவோனில் சம்பாவத் என்னுமிடத்தை தனது தலைநகராக நிறுவினான். [16] [17] [18] 1568ஆம் ஆண்டில், [19] கல்யாண் சந்த் கக்மாராவில் ஒரு நிரந்தர தலைநகரத்தை நிறுவி, [20] அதை அல்மோரா என்று அழைத்தான். [21] [22] [23]

1791ஆம் ஆண்டில், நேபாளத்தின் கூர்க்காக்கள் தங்கள் இராச்சியத்தை மேற்கு நோக்கி காளி ஆற்றின் குறுக்கே விரிவுபடுத்தி, அல்மோராவை ஆக்கிரமித்து, [24] குமாவுன் இராச்சியத்தின் இருக்கை மற்றும் பாகேசுவர் உட்பட குமாவுனின் பிற பகுதிகளை ஆக்கிரமித்தனர். 1814இல் ஆங்கிலேய-நேபாளப் போரில் கூர்காக்கள் கிழக்கிந்திய நிறுவனத்திடம் தோல்வியடைந்தனர். [25] [26] [27] [28] மேலும் 1816இல் சுகௌலி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக குமாவுனை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [29] :594 [30]

1947இல் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு பாகேசுவர்அல்மோரா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. [31] 1951 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 1740 ஆகும். இது காந்தா வளர்ச்சித் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் பாகேசுவர் மேம்பாட்டுத் தொகுதியாக மாற்றப்பட்டது. அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியால் செப்டம்பர் 15, 1997 அன்று பாகேசுவர் மாவட்டம் அல்மோரா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மேலும், பாகேசுவர் அதன் தலைநகரானது. நவம்பர் 9, 2000 அன்று, பாகேசுவர், இமயமலை மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்ட உத்தராகண்டம் மாநிலத்தில் இணைந்தது. [32]

புவியியலும் காலநிலையும்

தொகு

பாகேசுவர் 29.49 ° வடக்கிலும் 79.45 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [33] இது தேசிய தலைநகரான புது தில்லியின் வடகிழக்கில் 470 கி.மீ தொலைவிலும், மாநில தலைநகர் தேராதூனின் தென்கிழக்கில் 502 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது குமாவோன் கோட்டத்தில் குமாவுனின் தலைமையகமான நைனித்தாலின் வடகிழக்கில் 153 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாகேசுவர் மத்திய இமயமலை எல்லையின் குமாவுன் மலைகளின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது சராசரியாக 934 மீட்டர் (3,064 அடி) உயரத்தில் உள்ளது.

முன்புறத்தில் சரயு நதியுடன் மத்திய பாகேசுவரின் பரந்த பார்வை. சரய்-கோமதி ஆறுகளின் சங்கமம் (கடைசி இடது), பாகநாத் கோயில் (இடது), சரய் ஆற்றின் படித்துறை (மையம்), நிலேசுவர் மலை (வலது) சரயு பாலம் (கடைசி வலது)
 
2006இல் பாகேசுவர்

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, பாகேசுவரில் 9,079 என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ளது. இதில் 4,711 ஆண்களும் 4,368 பெண்களும் உள்ளனர். ஆண்கள் சுமார் 55%, பெண்கள் 45% உள்ளனர். நகரத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1090 பெண்கள் என, [34] தேசிய சராசரியை விட 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருக்கிறார்கள். பாலியல் விகிதத்தின் அடிப்படையில் உத்தராகண்டத்தில் நகரம் 4 வது இடத்தில் உள்ளது. நகரின் சராசரி எழுத்தறிவு விகிதம் 80% ஆகும். இது தேசிய சராசரியான 72.1% ஐ விட அதிகமாகும்; ஆண்களில் 84% மற்றும் பெண்கள் 76% கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்கள். 2,219 பேர் தாழ்த்தப்பட்டோராகவும், 1085 பேர் பழங்குடியினராகவும் இருக்கின்றனர். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும் [35] 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும் 5,772 என்ற அளவில் மக்கள் தொகையை நகரம் கொண்டிருந்தது.

சமயம்

மொத்த மக்கள்தொகையில் பெரும்பான்மையாக 93.34% பேர் இந்து சமயத்தைப் பின்பற்றப்படுகிறார்கள். இசுலாம் (5.93%), சீக்கியம் (0.25%), கிறிஸ்தவம் (0.26%), பௌத்தம் (0.01%), சமண மதம் (0.02%) ஆகியவையும் இங்கு பின்பற்றப்படும் பிற மதங்களில் அடங்கும்.

மொழி

இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவை மாநிலத்தின் அதிகாரப்ப்பூர்வ மொழிகளாக இருந்தாலும் குமாவோனி பெரும்பான்மையானவர்களின் முதல் மொழியாகும். ஆங்கிலமும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களால் பேசப்படுகிறது.

கோயில்கள்

தொகு

இந்து சமயம் இங்கு பெரும்பான்மையாக இருப்பதால் இங்கு பல்வேறு இந்துக் கோவில்கள் அமைந்துள்ளன. [36]

  • பாகநாத் கோயில்
 
1640ஆம் ஆண்டில் மன்னர் இலட்சுமி சந்த் என்பவரால் கட்டப்பட்ட பாகநாத் கோயில்

கோமதி மற்றும் சரயு ஆறுகளின் சந்திப்பில், அதன் கோபுரத்துடன் ஒரு பெரிய கோயிலாக அமைந்துள்ளது. சிவன் "புலி" இறைவனாக இங்கே வழிபடப்படுகிறார். கடவுளுக்கு பாகேசுவர் அல்லது வியாகேசுவர் எனப் பெயர். இந்த கோயில் கிமு 1450இல் குமாவுன் மன்னர் இலட்சுமி சந்த் என்பவரால் கட்டப்பட்டது. [37] மகா சிவராத்திரி இங்கு முக்கியமாக கொண்டாடப்படுகிறது.

  • பைஜ்நாத் கோயில்
 
பாகேசுவருக்கு வடமேற்கே 20 கி.மீ.தொலைவிலுள்ள பைஜ்நாத்தில் உள்ள கோயில்கள்

கோமதி ஆற்றின் இடது கரையில் பைஜ்நாத் கோயில் அமைந்துள்ளது. ஒரு சிவன் கோயிலான இது ஒரு பிராமண விதவையால் கட்டப்பட்டது. [38]

  • சண்டிகா கோயில்

சண்டிகா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் பாகேசுவரில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

போக்குவரத்து

தொகு
விமானம்

பந்த்நகர் அருகே ஒரு விமானநிலையம் அமைந்துள்ளது. பிதௌரகட்ட்டில் நைனி சைனி விமான நிலையத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. [39] தில்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையதிலிருந்தும் விமான சேவை உள்ளது.

இரயில்

கத்கோடம் தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ளது. குமாவுனை டெல்லி, தேராதூன், ஹவுரா ஆகிய பகுதிகளை இணைக்கிறது. பாகேசுவரை தனக்பூருடன் இணைக்கும் புதிய இரயில் பாதை இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. [40] [41] [42] தனக்பூர்-பாகேசுவர் இரயில் இணைப்பு முதன்முதலில் 1902இல் பிரித்தானியர்களால் திட்டமிடப்பட்டது. [43] எவ்வாறாயினும், இரயில் பாதையின் வணிக நம்பகத்தன்மையைக் காரணம் காட்டி இந்தத் திட்டம் இரயில்வே அமைச்சகத்தால் 2016இல் நிறுத்தப்பட்டது [44]

பேருந்து

பாகேசுவர் உத்தராகண்டம் மாநிலம் மற்றும் வட இந்தியாவின் முக்கிய இடங்களுடன் செல்லக்கூடிய சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 109கே, 309ஏ, பரேலி -பாகேசுவர் நெடுஞ்சாலை, [45] பாகேசுவர்- சோமேசுவர் - துவாரகட் சாலை ஆகியவை செல்கின்றன. உத்தராகண்ட மாநிலப் போக்குவரத்துக் கழகம் பாகேசுவர் பேருந்து நிலையத்திலிருந்து தில்லி, தேராதூன்ன், பரேலி மற்றும் அல்மோரா வரை பேருந்துகளை இயக்குகிறது. [46]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Indusnettechnologies, Goutam Pal, Dipak K S, SWD. "Location: District of Bageshwar, Uttarakhand, India". bageshwar.nic.in. Archived from the original on 21 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. "Bageshwar PinCode". citypincode.in. Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.
  3. Dehradun, NIC, Uttarakhand State Unit. "District of Almora, Uttarakhand, India". almora.nic.in. பார்க்கப்பட்ட நாள் 9 September 2016.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Bageshwar, The Imperial Gazetter of India, 1909
  5. "Uttarayani fest to bring Kumaon, Garhwal together". http://timesofindia.indiatimes.com/city/dehradun/Uttarayani-fest-to-bring-Kumaon-Garhwal-together/articleshow/45744879.cms. 
  6. Walton, H. G. (1908). Almora: A Gazetter.
  7. "Struggle against 'kuli beggar' was launched on Uttarayani". http://www.tribuneindia.com/news/uttarakhand/community/struggle-against-kuli-beggar-was-launched-on-uttarayani/183569.html. 
  8. "development gains elude kumaon's holy place". http://www.tribuneindia.com/news/uttarakhand/development-gains-elude-kumaon-s-holy-place/237281.html. 
  9. "बागेश्वर में पार्वती के संग विराजते हैं भोलेनाथ" (in hi). Amar Ujala Bureau (Bageshwar: Amar Ujala). 22 February 2017. http://www.amarujala.com/uttarakhand/bageshwar/bageshwar-with-parvati-houses-the-bholenath. 
  10. "शिव के गण चंडीश ने बसाया था इस नगर को, यहां है बागनाथ मंदिर" (in hi). livehindustan.com (Hindustan). 23 February 2017. http://www.livehindustan.com/news/astrology/article1-bageshwar-bagnath-temple-kumaon-713569.html?seq=2. 
  11. "बाघ और गाय बनकर इस संगम पर घूमते थे भगवान शिव और पार्वती". தேராதூன்: Amar Ujala. 30 May 2016. http://www.amarujala.com/photo-gallery/dehradun/mythological-facts-about-bagnath-temple-bageshwar. 
  12. "कत्यूर व चंद शासकों के काल में बनी ऐतिहासिक इमारतें हैं उपेक्षित" (in hi). JNN (Bageshwar: Dainik Jagran). 18 May 2017. http://www.jagran.com/uttarakhand/bageshwar-no-care-of-historical-buildings-at-bageshwar-16048260.html. 
  13. Omacanda Hāṇḍā (2002). History of Uttaranchal. Indus Publishing. pp. 63–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-134-4. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  14. Hāṇḍā, Omacanda, 1936-. History of Uttaranchal. Indus Pub. Co.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  15. "Home to ancient Katyuri culture". http://www.tribuneindia.com/news/uttarakhand/community/story/237289.html. 
  16. Budhwar (2010). Where Gods Dwell: Central Himalayan Folktales and Legends. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143066026.
  17. Singh (1992). People of India. Anthropological Survey of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173041143.
  18. Handa. Art & Architecture of Uttarakhand. Pentagon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182744172.
  19. Trivedi (1995). Autonomy of Uttarakhand. Mohit Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174450081.
  20. Sen (1971). The Sino-Indian Border Question: A Historical Review. Institute of Historical Studies. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  21. Sharma. Through the valley of gods: travels in the central Himalayas. Vision Books.
  22. Bhattacherje (1995). Encyclopaedia of Indian Events & Dates. Sterling Publishers Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120740747.
  23. Omacanda Hāṇḍā (2002). History of Uttaranchal. Indus Publishing. pp. 71–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7387-134-4. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  24. Hamilton, Francis; Buchanan, Francis Hamilton (1819). An Account of the Kingdom of Nepal: And of the Territories Annexed to this Dominion by the House of Gorkha (in ஆங்கிலம்). A. Constable. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016. The name Rajapur is also mentioned over a number of ancient copper plates.
  25. Lamb, Alastair (1986). British India and Tibet, 1766-1910. Routledge & Kegan Paul.
  26. Cross, John Pemble; foreword by J.P. Britain's Gurkha War : the invasion of Nepal, 1814-16. Frontline.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  27. Naravane, M.S. (2006). Battles of the honourable East India Company : making of the Raj. A. P. H. Pub. Corp.
  28. Gould, Tony (1999). Imperial warriors : Britain and the Gurkhas. Granta Books.
  29. Martin, Robert Montgomery. The History of the Indian Empire (in ஆங்கிலம்). Mayur Publications.
  30. Summary of the operations in India: with their results : from 30 April 1814 to 31 Jan. 1823. Marquis of Hastings.
  31. Times World Atlas, 1967 Edition, Plate 30.
  32. "About Us". Government of Uttarakhand. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  33. Falling Rain Genomics, Inc. - Bageshwar
  34. "bageshwar-district-glance". பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
  35. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  36. Indusnettechnologies, Goutam Pal, Dipak K S, SWD. "Temples: District of Bageshwar, Uttarakhand, India". bageshwar.nic.in. Archived from the original on 20 July 2016. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  37. "Bagnath Temple (Bageshwar)". onlytravelguide.com.
  38. "Temples in Bageshwar".
  39. Prashant, Shishir. "Govt seeks Rs 25 cr from Centre for Naini-Saini airport". http://www.business-standard.com/article/economy-policy/govt-seeks-rs-25-cr-from-centre-for-naini-saini-airport-112121202003_1.html. 
  40. Prashant, Shishir. "Demand for Tanakpur-Bageshwar railway line resurfaces". http://www.business-standard.com/article/economy-policy/demand-for-tanakpur-bageshwar-railway-line-resurfaces-111111100007_1.html. 
  41. "Tanakpur-Bageshwar rail project need of the hour". http://www.dailypioneer.com/state-editions/dehradun/tanakpur-bageshwar-rail-project-need-of-the-hour.html. 
  42. "ex mp tamta demands three railway lines". http://www.tribuneindia.com/news/uttarakhand/ex-mp-tamta-demands-three-railway-lines/46393.html. 
  43. "Rail ministry stalls Tanakpur-Bageshwar link project - Times of India". http://timesofindia.indiatimes.com/city/dehradun/Rail-ministry-stalls-Tanakpur-Bageshwar-link-project/articleshow/48365047.cms. 
  44. "Tanakpur-Bageshwar rail line commercially not viable: Suresh Prabhu – RailNews Media India Ltd" இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160821234137/http://www.railnews.co.in/tanakpur-bageshwar-rail-line-commercially-not-viable-suresh-prabhu/. 
  45. Tiwari, Mrigank. "CM opens much-awaited gateway to U'khand, enjoys ride too". http://timesofindia.indiatimes.com/city/bareilly/CM-opens-much-awaited-gateway-to-Ukhand-enjoys-ride-too/articleshow/49444370.cms. 
  46. Dehradun, NIC, Uttarakhand State Unit. "Routes". utc.uk.gov.in. Archived from the original on 9 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகேசுவர்&oldid=4072014" இலிருந்து மீள்விக்கப்பட்டது