தனக்பூர்
தனக்பூர் (Tanakpur) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் அமைந்த சம்பாவத் மாவட்டத்தில் சாரதா ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது. தில்லி-பஞ்சாப் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 9 தனக்பூர் வழியாகச் செல்கிறது.
தனக்பூர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்தில் தனக்பூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 29°04′26″N 80°06′32″E / 29.074°N 80.109°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சம்பாவத் |
நிறுவிய ஆண்டு | 1880 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தனக்பூர் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 111.2 km2 (42.9 sq mi) |
ஏற்றம் | 255 m (837 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,00,000 |
• அடர்த்தி | 1,800/km2 (4,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, குமாவனி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 262309 |
தொலைபேசி குறியீடு | 05943 |
வாகனப் பதிவு | UK 03 |
இணையதளம் | uk |
கயிலை மலை-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் தனக்பூரிலிருந்து, தார்ச்சுலா-லிபுலேக் சாலை வழியாக செல்வது எளிதாகிறது. இந்நகரம் இமயமலையில் 255 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தனக்பூர் நகரத்தின் மக்கள்தொகை 80,580 ஆகும். அதில் ஆண்கள் 52.5% மற்றும் பெண்கள் 47.5% ஆக உள்ளனர். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 12.68% ஆகவுள்ளனர்.மக்கள் தொகையில் இந்துக்கள் 80.32%, இசுலாமியர் 18.22% மற்றும் பிறர் 1.46% ஆகவுள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுவானூர்தி நிலையம்
தொகுதனக்பூர் நகரம் அருகே 65 கிமீ தொலைவில் அமைந்த வானூர்தி நிலையம் பந்த்நகர் வானூர்தி நிலையம் ஆகும்.
தனக்பூர் தொடருந்து நிலையம்[2] மேற்கு இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் நகரங்களுடன் இணைக்கிறது. இதனருகில் அமைந்த சந்திப்பு தொடருந்து நிலையம் 63 கிமீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிலிபத் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census Data". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Tanakpur Railway Station
4.Shri Adya Shakti Peeth பரணிடப்பட்டது 2019-11-03 at the வந்தவழி இயந்திரம்வார்ப்புரு:Champawat district