நயாரி வெல்லி

இந்திய அரசியல்வாதி

நயாரி வெல்லி (Nyari Welly-2 அக்டோபர் 1945 – 21 அக்டோபர் 1988 [1] [2] ) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் அருணாச்சலப் பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார்.

நயாரி வேலி
உறுப்பினர் அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை-செப்பா தொகுதி
பதவியில்
1980–1988
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-10-02)2 அக்டோபர் 1945
பியாங் கிராமம், செப்பா துணைப்பிரிவு
இறப்பு21 அக்டோபர் 1988(1988-10-21) (அகவை 43)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி, இந்திய தேசிய காங்கிரசு

சமூக ஆர்வலர்

தொகு

வெல்லி, கமெங் மாவட்டத்தில், செப்பா துணைப்பிரிவின் பியாங் கிராமத்தில் பிறந்தார். முறையான கல்வி பயிலாத இவர்,[3] அரசியலுக்கு வருவதற்கு முன்பு சமூக ஆர்வலராக இருந்தார்.[4] வெல்லி 1970 மற்றும் 1974க்கு இடையில் பெண்கள் நல மையத்தின் சேப்பா கிளையின் தலைவராகப் பணியாற்றினார். 1976ஆம் ஆண்டு காங்கிரசு சேவா தளத்தின் சேப்பா கிளையின் பெண் அமைப்பாளராகப் பணியாற்றினார்.[2]

1978 தேர்தல்

தொகு

1978 அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் (மொத்தம் 86 வேட்பாளர்களில்) போட்டியிட்ட இரண்டு பெண் வேட்பாளர்களில் வெல்லியும் ஒருவர். இவர் செப்பா தொகுதியில் அருணாச்சல மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் 1,649 வாக்குகளுடன் (தொகுதியில் 25.44% வாக்குகள்) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[5]

1980 தேர்தல்

தொகு

1980 அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் செப்பா தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட இவர் பிபிஏ கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இம்முறை இவர் 2,817 வாக்குகள் (43.28%) பெற்று, இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, மாநிலத்தின் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.[6][1][7] இருப்பினும், சிபோ காய் 1978ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக இருந்ததால் இவர் சட்டமன்றத்தில் அமர்ந்த இரண்டாவது பெண்.[8] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மோடி செங்கியையும், இந்திய தேசிய காங்கிரசு (அ) கட்சியின் கவும்செங் ரினோவையும் வெல்லி தோற்கடித்தார்.[6] வெல்லியின் தேர்தல் வெற்றிக்கு இப்பகுதியில் சக்திவாய்ந்த மனிதராக இருந்த இவரது கணவரின் செல்வாக்கு காரணமாக அமைந்தது.[4]

சட்டசபையில் குழந்தை திருமணம், பலதார மணம், வரதட்சிணை போன்ற பிரச்சினைகளை வெல்லி எதிர்கொண்டார். இந்த நடைமுறைகளைச் சட்டத்திற்குப் புறம்பாகச் செய்யும் மசோதாவைக் கொண்டு வந்தபோது, பேரவையின் ஆண் உறுப்பினர்கள் உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.[4]

1984 தேர்தல்

தொகு

1984 அருணாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் வெல்லி செப்பா தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த முறை இவர் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் 3,419 வாக்குகள் (35.35%) பெற்றார். சுயேச்சை வேட்பாளர் மேப் தாதாவை 43 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1984 தேர்தலில், இரண்டாவது பெண், நோடிகிங் நம்போங் தொகுதியிலிருந்து, கமோலி மோசாங், சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

வெல்லி நிஷி மக்கள் பிரிவினைச் சார்ந்தவர்.[7] 2013ஆம் ஆண்டு வரை அருணாச்சல பிரதேச மாநில அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப அமைச்சராகப் பணியாற்றிய ஆட்டம் வெல்லியின் தாயார் ஆவார்.[1] இவருடைய முக்கிய பொழுதுபோக்கு தோட்டக்கலை மற்றும் கைப்பின்னல் ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Echo of Arunachal. First elected woman MLA remembered
  2. 2.0 2.1 2.2 Arunachal News, Vol. 9, Eds. 1–4. 1980. pp. 27-28
  3. Mandal, Ramkrishna, and Minto Ete. Women in North East India: Role and Status of Arunachal Women. New Delhi: Mittal Publications, 2010. p. 58
  4. 4.0 4.1 4.2 Johsi, H. G. Arunachal Pradesh: Past and Present. New Delhi, India: Mittal Publications, 2005. pp. 122-123
  5. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1978 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ARUNACHAL PRADESH பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
  6. 6.0 6.1 Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1980 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ARUNACHAL PRADESH பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
  7. 7.0 7.1 National Seminar on "Ethnic Groups of North East India: Problems Prospects", Indira Barua, Sarthak Sengupta, and Deepanjana Dutta Das. Ethnic Groups, Cultural Continuities, and Social Change in North East India. New Delhi: Mittal Publications, 1999. p. 259
  8. Arunachal Front. Arunachal to ink political history
  9. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1984 TO THE LEGISLATIVE ASSEMBLY OF ARUNACHAL PRADESH பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாரி_வெல்லி&oldid=3891783" இலிருந்து மீள்விக்கப்பட்டது