நயீம் மொகைமென்

வங்காளதேச எழுத்தாளர்

நயீம் மொகைமென் (Naeem Mohaiemen பிறப்பு 1969) என்பவர் வங்கதேச எழுத்தாளர் ஆவார். இவர் தெற்காசியாவின் பிந்தைய காலனித்துவ குறிப்புகளை (1947, 1971) ஆராய்ச்சி செய்ய திரைப்படம், மற்றும் கட்டுரைகளைப் பயன்படுத்தும் நபர் ஆவார்.[1][2]

அவர் 2014 குகன்ஹெய்ம் ஃபெலோ மற்றும் 2018 டர்னர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் [3] . இவரது படைப்புகள் வெனிஸ், லாகூர், ஷார்ஜா, மராகேக், மொமெண்டம் (நோர்டிக்), லேபின் மற்றும் ஈவா (அயர்லாந்து) இருபது ஆண்டுகளில், மஹ்மூத் டார்விச அருங்காட்சியகம், ஆவணப்படம் 14, கிரண் நாடார் அருங்காட்சியகம், நவீன கலை அருங்காட்சியகம், பங்களாதேச ஷில்பகலா அகாடமி, பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் டேட் பிரிட்டன் ஆகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

கல்வி

தொகு

மொஹைமென் 1993 ஆம் ஆண்டில் ஓபர்லின் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகிய பிரிவுகளில் இளாங்கலைப் பட்டம் பெற்றார். அவர் 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரியிலான காலங்களில் கல்லூரியின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார். தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான பனிகளில் ஈடுபட்டு வருகிறார்.[4]

திரைப்படங்கள்

தொகு

திரிப்போலி கேன்சல்டு (திரிப்போலி ரத்து செய்யப்பட்டது ) ஏதென்ஸில் உள்ள ஆவணப்படம் 14 இல் திரையிடப்பட்டது.[5] பிரிட்டிச திரைப்பட நிறுவனத்தில் லண்டன் திரைப்பட விழாவின் போது திரையிடப்பட்டது..[6] நியூயார்க்கின் அருங்காட்சியகம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் திரையிடப்பட்டது.[7]

2017 ஆம் ஆண்டில் டூ மீட்டிங்ஸ் அண்ட் ஃபியூனரல் எனும் திரைப்படம் (இரண்டு கூட்டங்கள் மற்றும் ஒரு இறுதி ஊர்வலம்) காஸலில் ஆவணப்படம் 14 இல் திரையிடப்பட்டது இது தி யங் மேன் வாஸ் எனும் திட்டத்திலிருந்து பெறப்பட்டது.டேட் பிரிட்டனில் 2018 ஆம் ஆண்டிற்கான டர்னர் பரிசு பட்டியலில் இந்தத் திரைப்படம் இருந்தது.[8]

தி யங் மேன் வாஸ்

பகுதி 4 : அபு அம்மர் வருகிறார் (2016) பகுதி 3 : லாஸ்ட் மேன் இன் டாக்கா சென்ட்ரல் (2015) - ஒக்வாய் என்வெசர் தொகுத்த "ஆல் தி வேர்ல்ட்ஸ் ஃபியூச்சர்ஸ்" இன் ஒரு பகுதியாக 56 வது வெனிஸ் பின்னேலில் திரையிடப்பட்டது.[9]

இவர் ஷோதிக் இதிஹாஷின் கைதிகளின் ஆசிரியர் ஆவார்.[10] அவர் ஆஷஸ் அண்ட் ஹோப்: சிட்டகாங் ஹில் டிராக்ட்ஸ், பிளைன்ட் ஸ்பாட் ஆஃப் பங்காளதேச,[11] கலக்டிவ்ஸ் ஆஃப் அடோமைஸ்டு டைம் [12] மற்றும் சிஸ்டம் எர்ரர் (கணினி பிழை: ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். [13]

எழுத்து

தொகு

முக்திஜுத்தோ: போலிபோனி ஆஃப் தெ ஓசன் (முக்திஜுத்தோ பண்ணிசை பெருங்கடல்") [14] "ஆக்சிலரேட்டட் மீடியா அண்ட் தெ 1971 ஜெனோசைட் (துரிதப்படுத்தப்பட்ட ஊடகம் மற்றும் 1971 ஜெனோசிடு") [15] "முஸ்ஸீ குய்மெட் அஸ் புரக்சி ஃபைட்,[16] மற்றும் எவ்ரிபடி வாண்ட்ஸ் டு பீ எ சிங்கப்பூர் (எல்லோரும் சிங்கப்பூராக இருக்க விரும்புகிறார்கள்) ( கார்லோஸ் மோட்டாவின் தி குட் லைஃப் ).[17] போன்ற குறிப்பிடத் தகுந்த கட்டுரைகளை எழிதியுள்ளார்.அவர் மத மற்றும் சிறுபான்மையினர் பற்றிய அத்தியாயத்தை பங்களாதேசுக்கான ஐன் ஓ சலிச கேந்திரோவின் ஆண்டு அறிக்கையில் எழுதினார்.[18]

விருதுகள்

தொகு

2014: ஜான் சைமன் குகன்ஹெய்ம் நினைவு அறக்கட்டளையின் குக்கன்ஹெய்ம் ஊக்கத் தொகை[19] 2018: டர்னர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார் [20][21]

குறிப்புகள்

தொகு
  1. ICA Film Club
  2. Documenta 14
  3. Tate. "Naeem Mohaiemen". Tate (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  4. "Columbia University: Our Graduate Students". Archived from the original on 2012-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  5. Inhabiting Liminality: Cosmopolitan World-Making in Naeem Mohaiemen's Tripoli Cancelled. 
  6. [1] BFI London Film festival: Material Evidence
  7. "Naeem Mohaiemen: There Is No Last Man". The Museum of Modern Art (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  8. Tate. "Turner Prize 2018 – Exhibition at Tate Britain". Tate (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  9. "Archived copy". Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Venice Biennial Artist List
  10. Prisoners of Shothik Itihash on Amazon
  11. Samya Kullab, "Championing Pahari Rights", Star Weekend Magazine, 17 September 2010. Thedailystar.net (17 September 2010). Retrieved on 12 November 2011.
  12. Collectives in Atomised Time, with Doug Ashford, Idensitat Press பரணிடப்பட்டது 2012-03-31 at the வந்தவழி இயந்திரம். Idensitat.net. Retrieved on 12 November 2011.
  13. System Error, with Lorenzo Fusi, Silvana Press
  14. [2]
  15. Economic & Political Weekly, Vol 43 No. 04, 26 January 2008
  16. Playing by the Rules: Alternative Thinking/ Alternative Spaces (9781933347431): Robert Atkins, Julie Ault, Rene Block, Winslow Burleson, Biljana Ciric, Renaud Ego, Sofija Grandakovska, Boris Groys, Marina Grzinic, Pablo Helguera, Naeem Mohaiemen, Raphael Rubinstein, Irene Tsatsos, Steven Rand, Heather Kouris: Books. Amazon.com. Retrieved on 12 November 2011.
  17. Carlos Motta: The Good Life: Art in General New Commissions Program Book Series Vol. XVIII (9781934890189): Eva Diaz, Anne J Barlow, Stamatina Gregory: Books. Retrieved on 12 November 2011.
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-04-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  19. "2014 Guggenheim Fellows- Creative Arts-Film-Video". Archived from the original on 2014-04-15. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  20. 2018 Turner Prize Nominees
  21. Searle, Adrian (24 September 2018). "Turner prize 2018 review – no painting or sculpture, but the best lineup for years". The Guardian. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-3077. https://www.theguardian.com/artanddesign/2018/sep/24/turner-prize-2018-review-tate-britain-naeem-mohaiemen-luke-willis-thompson-forensic-architecture-charlotte-prodger. பார்த்த நாள்: 2018-12-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயீம்_மொகைமென்&oldid=3560073" இலிருந்து மீள்விக்கப்பட்டது