நய்யும் சௌத்ரி
நய்யும் சௌத்ரி (Naiyyum Choudhury) (27 செப்டம்பர் 1946 - 7 செப்டம்பர் 2019) ஓர் வங்காளதேச உயிரித் தொழில்நுட்பவியலாளரும், அணு விஞ்ஞானியும் ஆவார். [2] வங்கதேசத்தின் தேசிய உயிரித் தொழில்நுட்பக் கொள்கையின் வளர்ச்சி மற்றும் முன்னெடுப்புக்கு இவர் முன்னோடியாக இருந்தார். [3] இவர் வங்காளதேச அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், வங்காளதேசத்தின் பல முக்கிய பதவிகளிலும் பணியாற்றினார். இவர் இறக்கும் போது வங்காளதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (BAERA) நிறுவனத் தலைவராக இருந்தார். [4] இவர் தாக்கா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் தலைவராகவும், வங்காளதேச ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார் , மேலும் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகம், வங்காளதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரிய உறுப்பினராக பணியாற்றினார். இவர் பன்னாட்டு அணுசக்தி முகமையின் பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தத் தலைவரும் ஆவார். [5] வங்காளதேச அறிவியல் கழகத்தின் சகாவாகவும் [6] இருந்தார் . மேலும், தான் இறக்கும் போது வங்காளதேச அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தார். வங்காளதேசத்தின் உலகளாவிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கூடங்களின் வலைப்பின்னலின் தொடர்பு நபராகவும் இருந்தார். [7] [8]
நய்யும் சௌத்ரி | |
---|---|
நய்யும் சௌத்ரி
| |
நிறுவனத் தலைவர், வங்காளதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் | |
பதவியில் நவம்பர் 2014 – 7 செப்டம்பர் 2019 | |
தலைவர், வங்காளதேச அணுசக்தி ஆணையம் | |
பதவியில் 1 ஆகத்து 2002 – 23 செப்டம்பர் 2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கொமிலா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா | 27 செப்டம்பர் 1946
இறப்பு | 7 செப்டம்பர் 2019 டாக்கா, வங்காளதேசம் | (அகவை 72)
இளைப்பாறுமிடம் | பனானி, டாக்கா |
முன்னாள் கல்லூரி | தாக்கா பல்கலைக்கழகம் (முதுநிலை அறிவியல்) நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (முனைவர்) |
அறியப்படுவது | வங்காளதேசத்தின் தேசிய உயிரி தொழில்நுட்பக் கொள்கை[1] |
இயற்பெயர் | নঈম চৌধুরী |
தேசியம் | வங்கதேசத்தவர் |
துணைவர் | சமிமா கரீம் சௌத்ரி (தி. 1978–2019) |
பிள்ளைகள் | 2 (சாரா, சஜித்) |
இணையதளம் https://naiyyumchoudhury.com |
சௌத்ரி பல சர்வதேச பயிலரங்குகளையும், கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநய்யும் 1944இல் கொமிலாவின் முன்செபரியில் பிறந்தார். பேராசிரியர் சமிமா கரீம் சௌத்ரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு மருத்துவர் சாரா நஹின் சௌத்ரி,[9] மருத்துவர் சஜித் முகைமின் சௌத்ரி [10] என்ற இரு மகன்கள் இருக்கின்றர்.
புகைப்படங்கள்
தொகு-
வங்காளதேச அணுசக்தி விஞ்ஞானிகள் சங்கக் கூட்டத்தில், டாக்டர் எம். ஏ.வாசெட் மியா கலந்து கொண்டார்]]
-
ரூப்பூர் அணுமின் நிலையத்தின் உரிமம் வழங்கும் விழா
-
வங்காளதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் வெற்றி நாளில் 2017
சான்றுகள்
தொகு- ↑ "Biotech policy declared in Bangladesh". GMO Food For Thought. Archived from the original on 2 November 2006.
- ↑ "Inaugural Biotechnology Conference". ICDDR,B.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "First workshop Meeting to discuss the National Biotech Policy". Global Network of Bangladeshi Biotechnologists. Archived from the original on 29 October 2007.
- ↑ "NC profile for BAERA" (PDF). Bangladesh Atomic Energy Regulatory Authority.
- ↑ "RCARO appreciated out-going RCARO Advisory Committee (AC) Chair, Prof. N Choudhury". Regional Cooperative Agreement Regional Office. 24 February 2004. Archived from the original on 9 October 2017. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.
- ↑ "Professor Naiyyum Choudhury". Bangladesh Academy of Sciences. Archived from the original on 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- ↑ "Bangladesh Academy of Sciences". The InterAcademy Panel on International Issues. Archived from the original on 22 February 2007.
- ↑ The Subproject: Electronic Networking and Outreach Coordinators Meeting at MINT, Bangi, Malaysia, April 21–25, 2000
- ↑ "Sarah Nahin Choudhury". National Health Service (England). Archived from the original on 10 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Dr. Sajid Muhaimin Choudhury". Bangladesh University of Engineering and Technology. 26 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 September 2019.
மேலும் படிக்க
தொகு- "Remembrance Website dedicated to Dr. Naiyyum Choudhury". naiyyum.choudhury.cc. Archived from the original on 2021-10-24. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- "Professor Naiyyum Choudhury appointed as Chairman, Bangladesh Atomic Energy Regulatory Authority (BAERA) 19 November, 2014". BRAC University. 20 November 2014. Archived from the original on 26 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Prof Naiyyum Choudhury passes away". The Daily Star. 8 Sep 2019 இம் மூலத்தில் இருந்து 26 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200424061252/https://www.thedailystar.net/city/news/prof-naiyyum-choudhury-passes-away-1797094.
- "Biochemist Naiyyum Choudhury no more". The Daily Sun. 7 Sep 2019 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200426105427/https://www.daily-sun.com/post/421600/2019/09/07/Biochemist-Naiyyum-Choudhury-no-more.
- "Obituary Prof Naiyyum Choudhury". Journal of the Bangladesh Academy of Sciences 43(2). 3 Mar 2020. https://www.banglajol.info/index.php/JBAS/article/view/45730.