நரசிங்கர் சமஸ்தானம்

நரசிங்கர் சமஸ்தானம் (Narsinghgarh State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் நரசிங்கர் நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மத்திய இந்திய முகமையின் கீழ் இருந்த போபால் முகமையில் நரசிங்கர் சமஸ்தானம் செயல்பட்டது. 1901-ஆம் ஆண்டில் நரசிங்கர் சமஸ்தானம் 1,920 சதுர கிலோமீட்டர்கள் (740 sq mi) பரப்பளவும், ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,000 கொண்டிருந்தது.[2][3]இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948-ஆம் ஆண்டில் நரசிங்கர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Warning: Value not specified for "common_name"
நரசிங்கர் சமஸ்தானம்
नर्सिन्घ्गढ़ रियासत
சுதேச சமஸ்தானம்
1681–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of
Location of
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் நரசிங்கர் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம் நரசிங்கர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1681
 •  1947 இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
Population
 •  1901 5.00,000 
தற்காலத்தில் அங்கம் ராஜ்கர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
நரசிங்கர் கோட்டை
நரசிங்கர் இராச்சியத்தின் இராஜபுத்திர குடும்பத்தினர்

வரலாறு தொகு

இராஜபுத்திர குலத்தின் பார்மர் வம்சத்தின் போஜன் என்பவர் நரசிங்கர் இராச்சியத்தை 1681-ஆம் ஆண்டில் நிறுவினார். இது முன்னர் ராஜ்கர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் முன்னர் வரை நரசிங்கர் இராச்சியம், இந்தூர் இராச்சியத்தின் சிற்றரசாக விளங்கியது. 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற நரசிங்கர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மத்திய இந்திய முகமையின் கீழ் இருந்த [[போபால் முகமையில் இருந்தது.

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி நரசிங்கர் சமஸ்தானம் மத்திய பாரதம் மாநிலத்துடன் (1948–1956) இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, நரசிங்கர் சமஸ்தானம் மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள் தொகு

நரசிங்கர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். [4]

  • 1872 - மார்ச் 1873 ஹன்வந்த் சிங்
  • 1873 - ஏப்ரல் 1890 பிரதாப் சிங்
  • 28 சூன் 1890 - 1896 மகதப் சிங்
  • 1896 - 22 ஏப்ரல் 1924 அர்ஜுன் சிங்
  • 23 ஏப்ரல் 1924 – 15 ஆகஸ்டு 1947 விக்ரம் சிங்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Imperial Gazetteer of India 1911
  2. "Imperial Gazetteer2 of India, Volume 8, page 125 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".
  3. Narsinghgarh State. 18. 1911. பக். 383. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V18_389.gif. 
  4. Rajput Provinces of India - Narsinghgarh

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்கர்_சமஸ்தானம்&oldid=3376969" இலிருந்து மீள்விக்கப்பட்டது